For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குருபெயர்ச்சி 2020 : முதல்வர் இபிஎஸ், துணைமுதல்வர் ஓபிஎஸ்க்கு எப்படி இருக்கு

குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் சிம்மம் ராசியில் பிறந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கும்

Google Oneindia Tamil News

சென்னை: குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு ஐப்பசி 30ஆம் தேதி அதாவது நவம்பர் மாதம் 15ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் தேதி அதாவது நவம்பர் 20ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் பொன்னவன், குரு ஒரு ராசியில் சஞ்சரிக்கும் நிலையை பொறுத்தும் குரு பார்வை ஒரு ராசியின் மீது படுவதை பொறுத்தும் நன்மைகளும் தீமைகளும் நடைபெறும். நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் இபிஎஸ், ஓபிஎஸ்க்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

இப்போது அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்த பரபரப்பு தொண்டர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நேரம் காலம் சரியில்லாமல் இருப்பதனால்தான் ஒற்றுமையாக இருந்த தலைவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

மகரம் ராசியில் இருந்து குரு பகவானின் பார்வை ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது விழுகிறது. குருவின் சஞ்சாரம் குரு பகவானின் பார்வையால் முதல்வர் இபிஎஸ், துணைமுதல்வர் ஓபிஎஸ்க்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் ஜோடி சேர்ந்தால் கல்யாண வாழ்க்கை இனிக்கும் தெரியுமா மேஷ ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் ஜோடி சேர்ந்தால் கல்யாண வாழ்க்கை இனிக்கும் தெரியுமா

சிம்ம ராசிக்காரருக்கு எப்படி

சிம்ம ராசிக்காரருக்கு எப்படி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிம்ம ராசிக்காரர். குருபகவான் இப்போது தனுசு ராசியில் இருக்கிறார். இது சிம்ம ராசிக்கு ஐந்தாம் இடம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து குரு சிம்மராசியை பார்வையிடுகிறார். நவம்பர் மாதம் முதல் மகரம் ராசிக்கு குரு இடப்பெயர்ச்சி அடைந்து ஆறாம் இடத்தில் அமர்கிறார். ஆறாம் இடம் எதிரி, நோய், கடன் ஸ்தானம்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் சிறப்படையும். குரு பார்வை உங்க ராசிக்கு பத்து, பனிரெண்டு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீது விழுகிறது. எதையும் தைரியமாக எதிர்கொண்டு இலக்கை அடைவார் முதல்வர் பழனிச்சாமி. எதிர்ப்புகளை வெற்றிகரமாக சமாளித்து விடுவார் எடப்பாடி பழனிச்சாமி. எதிரிகள் யார் என்று அடையாளர் கண்டு கொள்வார்.

நோய்கள் குணமடையும்

நோய்கள் குணமடையும்

நோய் ஸ்தானமான ஆறாம் வீட்டில் அமரும் குருபகவானால் உடம்பில் மறைவாக இருந்த வியாதிகள் வெளியே தெரியும் அதை இனம் கண்டு குணப்படுத்துவார். ஏப்ரல் மாதத்தில் குரு அதிசாரமாக நகர்ந்து கும்பம் ராசியை அடைகிறார். அங்கிருந்து உங்க ராசியை பார்வையிடுகிறார் குருபகவான். இதன் மூலம் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும் வெற்றிகள் உங்கள் பக்கம் தேடி வரும்.

மீனம் ராசிக்கு லாப குரு

மீனம் ராசிக்கு லாப குரு

ஓ.பன்னீர் செல்வம் மீனம் ராசிக்காரர். குரு பகவான் மீனம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை ராசிக்கு இரண்டு, நான்கு, ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. பத்தில் குரு பதவி பறிபோகும் என்பார்கள். இருக்கிற இடத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். சில ஊசலாட்டமான மனநிலையில் இருந்தாலும் நவம்பர் மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சி லாப குருவாக வெற்றியை தேடித்தரப்போகிறது.

வெற்றி தரும் குரு பெயர்ச்சி

வெற்றி தரும் குரு பெயர்ச்சி

மகரம் ராசிக்கு வரப்போகும் குரு பகவான் அங்கிருந்து உங்க ராசிக்கு மூன்றாம் வீடு, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. குருபகவனின் பார்வையால் முயற்சிகள் வெற்றியாகும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் விழும் குருவின் பார்வையால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். உடன் இருப்பவர்கள் தொழில் அரசியல் கூட்டாளிகளிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.

லாபம் தரும் கூட்டணி

லாபம் தரும் கூட்டணி

குருவின் சஞ்சாரம், பார்வை பலம் சிம்மம், மீனம் ராசிக்காரர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. எனவேதான் இருவருமே நான்கு ஆண்டுகாலமாக ஒற்றுமையாக ஆட்சியை நடத்தியிருக்கின்றனர். இனியும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இருவருக்குமே நன்மை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். நிகழப்போகும் குரு பெயர்ச்சியும் இந்த இருவர் கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது. இருவரும் தற்போது பிரிய வாய்ப்பு இல்லை. அதிமுகவில் தற்போது உருவாகி உள்ள தற்காலிக சலசலப்பு விரைவில் தீரும் என்றே ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

English summary
Guru Bhagavan shifts from Sagittarius to Capricorn on 15th of November according to the Vakkiya panchanga. Let's see what the EPS and OBS will look like with the upcoming Guru shift.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X