For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி ஸ்பெஷல்: காஞ்சி பெரியவரின் ஆசி பெற்ற "அஹிம்சா பட்டு"

By Staff
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னையில் எங்கு பார்த்தாலும் கோ-ஆப்டெக்ஸின் புதிய அறிமுகமான "அஹிம்சா பட்டு" பற்றிய பேச்சாகவே இருக்கிறது.

சமீப காலமாக பல வாசகர்களிடம் இருந்து இப்போதெல்லாம் நீங்கள் ஏன் "சுக்கிர வார சிறப்பு கட்டுரைகள்" எழுதுவதில்லை என்ற கேள்வி வந்துக்கொண்டிருக்கிறது. அவர்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு இந்த கட்டுரையை சுக்கிர வார சிறப்பு பதிவாக தரலாமென முடிவு செய்தேன். உலக அஹிம்சை தினத்தை முன்னிட்டு "அஹிம்சா பட்டு" பற்றி எழுதலாமென தோன்றியது.

அஹிம்சை:

அஹிம்சை:

அஹிம்சை என்பது பிற உயிர்கள் எதற்கும் எவ்விதத் தீங்கையும் இழைக்கக் கூடாது என்பதாம்.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007 இல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

உலக அஹிம்சை தினம்:

உலக அஹிம்சை தினம்:

ஐக்கிய நாடுகள் சபை தீர்மானப்படி ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி உலக அகிம்சை தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த தினமே அக்டோபர் 2ம் தேதியாகும்.

அஹிம்சா பட்டு பற்றி காஞ்சி பெரியவரின் அருளுரை:

அஹிம்சா பட்டு பற்றி காஞ்சி பெரியவரின் அருளுரை:

பட்டுப் புடவை, பட்டு வேஷ்டிகளினால் பாவம் தான் வருகிறது. அஹிம்சை, அஹிம்சை என்று சொல்லிக் கொண்டு நாம் மாமிசமே சாப்பிடுவதில்லை என்கிறோம். கொஞ்சம் யோசித்தால் நமக்கு இந்தப் பட்டுப் புடவை வேஷ்டி இவற்றால் வரும் பாவம் மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்கும் கூட வராது. ஒரு ஆடோ, இரண்டு ஆடோ உயிரை இழக்கின்றன என்றால் இங்கே ஆயிரக்கணக்கான பட்டுப் பூச்சிகளுக்கு இம்சை ஏற்படுகிறது.

இங்கே பட்டைப்பற்றி என் அபிப்ராயத்தைச் சொல்ல வேண்டும். அது உங்களுக்கே தெரிந்திருக்கும். ஒரு முழப் பட்டுக்காக நூற்றுக்கணக்கில் பட்டுப் பூச்சிகளைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இதனாலே "அஹிம்ஸா பரமோ தர்ம": என்கிற பெரிய ஆசாரத்துக்கு பங்கம் வந்து விடுகிறது.

ரொம்ப அத்யாவசியமானால், வெளியூரிலோ, மழைக் காலத்தில் நாள் கணக்காகப் பெய்து கொண்டிருப்பதால் வஸ்திரம் காயாது என்பதாலோ, மடி வஸ்திரம் எப்போதும் ரெடியாய் இருந்தால் நல்லது என்றால் அப்போது ‘அஹிம்ஸாப் பட்டு' என்பதாகப் பூச்சியைக் கொல்லாமலே நெய்கிற பட்டு வஸ்திரங்களை உபயோகப் படுத்தலாம். வழக்கமான பட்டின் ‘நைஸ்', "ஷைனிங்' எல்லாம் அஹிம்ஸாப் பட்டுக்கு இல்லைதான். என்றாலும் ஜீவகாருண்யத்தை உத்தேசித்து இதைத்தான் உபயோகப்படுத்த வேண்டும்.

கோ-ஆப்டெக்ஸின் அஹிம்சா பட்டு:

கோ-ஆப்டெக்ஸின் அஹிம்சா பட்டு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களை கவரும் வகையில், 'அஹிம்சா' பட்டு மற்றும் இயற்கை பருத்தி சேலைகளை, 'கோ - ஆப்டெக்ஸ்' நிறுவனம், கடந்த செப்டம்பர் 14 முதல் அறிமுகப்படுத்தியது. மேலும், 30 சதவீத சிறப்பு தள்ளுபடி, தங்க மழை திட்டத்தையும் அறிவித்துள்ளது. இதற்கான விழா, சென்னை, தேனாம்பேட்டை, வானவில் விற்பனையகத்தில், நடைபெற்றது.

காஞ்சி பெரியவர் ஆசிபெற்ற அஹிம்சா பட்டு:

காஞ்சி பெரியவர் ஆசிபெற்ற அஹிம்சா பட்டு:

அஹிம்சா பட்டு, அமைதியான பட்டு என்றும் அழைக்கப்படும், பட்டு வகைகளில் பல மரபுகளை விட பட்டு உருவாக்கும் உயிரினங்களுக்கு மிகவும் மனிதாபிமான ஒரு பாணியில் தயாரிக்கப்படும் ஒரு வகை பட்டு ஆகும். அஹிம்சா என்பது சமஸ்கிருத மொழியிலிருந்து பெறப்பட்ட வார்த்தை மற்றும் அஹிம்சை என மொழிபெயர்க்கிறது.

காஞ்சிபுரம் பகுதியில், அஹிம்சா பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக பட்டு பூச்சிகளை கொன்று தான் பட்டு எடுக்கப்படும். ஆனால், பட்டு பூச்சிகளை கொல்லாமல், அதன் கூடுகளில் இருந்து எடுக்கப்படும் பட்டை பயன்படுத்தி, புடவை தயாரிக்கப்படுவதால், அஹிம்சா பட்டு என இது அழைக்கப்படுகிறது.

ஜோதிடத்தில்

ஜோதிடத்தில் "அஹிம்சா பட்டு"

நரகாசுரனின் மறைவை மகிழ்ச்சியான திருவிழாவா கொண்டாடும் தீபாவளி திருவிழாவிற்க்கு காரகர் அசுர குருவான சுக்கிரன் தான் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

தீப ஒளிக்கும் மகிழ்ச்சிக்கும் இனிப்புக்கும் காரகர் சுக்கிர பகவான்தான்க!

அழகான பெண்களுக்கும் காரகர் சுக்கிர பகவான் தான். அவர்கள் விரும்பி அணியும் புத்தாடைக்கும் சுக்கிர பகவான்தான் காரகர்.

பெண்களை பரவசமூட்டும் பட்டாடைகளுக்கும் காரகர் சுக்கிரர் தானுங்கோ!

காஞ்சி பெரியவரும் காந்தியடிகளும் விரும்பிய அஹிம்சைக்கும் காரகர் சுக்கிர பகவான் தாங்க!

நம்ம கோ-ஆப்டெக்ஸில் அறிமுகபடுத்தியிருக்கும் "அஹிம்சா பட்டு" க்கும் காரகர் நம்ம ஹீரோ சுக்கிரனே தானுங்கோ!

அஹிம்சையை விரும்பரவங்களுக்கெல்லாம் சுக்கிர பகவானின் ஆசிநிறைந்திருக்கும் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். எந்த ராசி லக்ன காரர்களாக இருந்தாலும் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றவர்கள் அஹிம்சா வழியை கடைபிடிப்பார்கள்.

அஹிம்சையை கடைபிடித்து வாழ்ந்த காஞ்சி மகாபெரியவரின் ஜாதகத்தில் சிம்ம லக்னமாகி லக்னம் சுக்கிரனின் சாரம் பெற்ற பூர நக்ஷத்திரத்தில் அமைந்து லக்னாதிபதி உச்சம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அஹிம்சையை குறிக்கோளாக கொண்ட காந்தியடிகள் ஜாதகத்தில் சுக்கிரனின்

துலா லக்னமாகி லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சிபெற்றதும் அஹிம்சாவாதியாக வாழ வழிசெய்தது.

திடீர் பணவரவுக்கும் காரகர் சுக்கிர அண்ணாச்சி தானுங்க! போனஸ் பணத்தை எடுத்துச்சென்று மனைவிமார்களுக்கு (களத்திரத்திற்கும் காரகர் நம்ம சுக்கிரனே தாங்க)

அஹிம்சா பட்டை வாங்கி கொடுத்து அமைதியோடு தீபாவளியை கொண்டாடி சுக்கிர பகவானின் ஆசி பெருவோமுங்க!

English summary
Ahimsa silk, also known as peace silk, is a type of silk that is purported to be made in a fashion that is much more humane to the creatures creating the silk than many traditional methodologies. Ahimsa is a word that derives from the Sanskrit language and translates as non-violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X