இந்திர ஏகாதசி: பித்ருக்களின் சாபம் போக்க இன்று பெருமாள் கோவிலுக்கு போயிட்டு வாங்க
ஜாதகத்தில் பித்ருக்களின் சாபம் இருப்பவர்கள் இந்திர ஏகாதசி விரதம் இருந்தால் முன்னோர்களின் சாபம் நீங்கும். இந்திரனைப் போல செல்வம் செல்வாக்கு பெற்று வாழ்வார்கள்.
சென்னை: ஐப்பசி மாதத் தேய்பிறையில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி எனப்படும். பித்ருக்களின் சாபத்தை நீக்கும் சக்தி இந்திரா ஏகாதசி விரதத்திற்கு உள்ளது. ஜாதகத்தில் பித்ரு சாபம் உள்ளவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் பித்ரு சாபங்கள் நீங்கி குடும்ப வாழ்க்கையில் சுபிட்சங்களும், நிம்மதியும் உண்டாகும். இந்திர ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வந்து நமது சக்திக்கேற்ப அன்னதானம் கொடுக்கலாம்.
திதிகளில் 11வது திதி ஏகாதசி. இரு பெருமாளுக்கு உகந்தது. ஏகாதசி விரதம் இருப்பது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை தேய்பிறை ஏகாதசிகள் வருகின்றன. ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசியாக கடைபிடிக்கப்படுகிறது.
மறைந்த நம் முன்னோர்களை வழிபடும் மரபு நம் நாட்டில் தொன்று தொட்டே இருந்து வருகின்கிறது.பித்ருக்கள் எனப்படும் மறைந்த முன்னோர்களின் ஆசிகள் மட்டும் நமக்கு கிடைக்குமானால், நாமும் நமக்கு பிறகு வரப்போகின்ற சந்ததிகளின் வாழ்க்கையும் மிகச்சிறப்பாக இருக்கும். அத்தகைய மறைந்த முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கும், பெருமாளை வழிபடுவதற்கும் சிறந்த தினமாக ஐப்பசி மாதம் தேய்பிறை ஏகாதசி வருகிறது. இந்த ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி குறித்தும், இந்த தினத்தில் விரதம் அனுஷ்டிப்பதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பெருமாளுக்கு உகந்த ஏகாதசி
புதன்கிழமை பெருமாளுக்கு உகந்த தினம் இந்த நாளில் ஏகாதசி திதியும் இணைந்துள்ளது சிறப்பானது. இந்த இந்திர ஏகாதசி பற்றி நாரதர் தெரிவித்துள்ளார். புராணங்களில் தேவலோக அதிபதியாக இந்திரன் அனைத்து சுகபோகங்களுக்கு அதிபதியாக இருக்கிறார். எனவே இந்த ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தில் விரதம் மேற்கொண்டால் திருமாலின் அருளும் இந்திர தேவரின் ஆசியும் கிடைக்கும். வாழ்வில் அனைத்து விதமான இன்பங்களையும் பெறுவார்கள்.

இந்திர ஏகாதசி விரதம்
ஐப்பசி மாதத்தில் சூரியன் சுக்கிர பகவானுக்குரிய துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மனிதர்களுக்கு அனைத்து விதமான சுக போகங்களை அளிக்கின்ற நவகிரக நாயகனாக சுக்கிர பகவான் இருக்கின்றார். எனவே தான் இந்த ஐப்பசி மாதத்தில் மட்டும் சுப காரியங்கள் அதிகளவில் விரும்பி செய்யப்படுகின்றன. இன்றைய தினம் இந்திர ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் இருப்பவர்களுக்கு முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

புராண கதை
மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். அவரை வரவேற்று வணங்கி அவர் வந்த நோக்கத்தை மன்னன் கேட்டான். அப்போது நாரதர், ‘மன்னா! நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரை அனுபவித்து வருகிறார். அவர், ‘என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்ய சொல்லுங்கள். அவன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைபிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள்' என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன் என்று கூறினார்.

நரகத்தில் இருந்து விடுதலை
ஐப்பசி மாதத் தேய்பிறையில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி எனப்படும். நீ அந்த ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபாடு செய். உன் தந்தைக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றார். உடனே மன்னர் இந்திரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து, தந்தைக்கு சிரார்த்தம் செய்தார். அவருடைய தந்தையும் நரகத்தில் இருந்து விடுதலை அடைந்து சொர்க்கம் சென்று மகனுக்கு ஆசி வழங்கினார்.

நலம் தரும் வாழ்க்கை
இன்றைக்கு பல குடும்பங்களில் ஓரளவுக்கு வசதிகள் இருந்தும், குடும்பத்தில் நிம்மதி இல்லாத தன்மை நிலவுகிறது. பித்ருக்களின் சாபமே இதற்குக் காரணம் என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள் நாமும் நலம் அடையலாம். இன்று விரதம் இருக்க முடியாதவர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிவித்து வணங்கலாம்.

விஷ்ணுவின் அருள் கிடைக்கும்
அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, விஷ்ணு புராணம், பெருமாள் ஸ்தோத்திரம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் எங்கேனும் நெல்லி மரம் இருக்கும் பட்சத்தில் அம்மரத்திற்கு தீப ஆராதனை காட்டி வணங்க வேண்டும்.

மகத்தான வெற்றி கிடைக்கும்
மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இந்த விரதம் கடைபிடிப்பவர்களுக்கு மறைந்த முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கப்பெற்று நாம் ஈடுபடுகின்ற அனைத்து காரியங்களிலும் மகத்தான வெற்றிகளை பெற உதவும்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications