திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் - திருமலையில் என்ன விஷேசம்
கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 4ஆம் தேதி கஜ வாகன சேவையையொட்டி ஏழுமலையான் கோவிலில் இருந்து தங்க காசு மாலையை திருச்சானூருக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
திருமலைக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்பவர்கள் பத்மாவதி தயாரை தரிசனம் செய்த பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்வது வழக்கம். அன்னை மகாலட்சுமி இங்கே பத்மாவதி தயாராக திருச்சானூரில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு இன்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை யாக சாலையில் புண்ணியாவதனம், ரக்ஷாபந்தனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது.

அலங்காரமாக அம்மன்
நாளை காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை தங்கக் கொடிமரத்துக்கு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தனூர் லக்னத்தில் காலை 9.45 மணியில் இருந்து காலை 10 மணிக்குள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின்போது தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி வாகன மண்டபத்தில் தரிசனம் தருகிறார்.

தேரோட்டம் ரத்து
நாளை இரவு சிறிய சேஷ வாகன சேவை, 1ஆம் தேதி காலை பெரிய சேஷ வாகனம், இரவு ஹம்ச வாகனம் 2ஆம் தேதி காலை முத்துப்பந்தல் வாகனம், இரவு சிம்ம வாகனம், 3ஆம் தேதி காலை கல்ப விருட்ச வாகனம், இரவு ஹனுமந்த வாகனம் 4ஆம் தேதி காலை பல்லக்கு உற்சவம், மாலை வசந்த உற்சவம், இரவு கஜவாகன சேவை நடைபெற உள்ளது.
5ஆம் தேதி காலை சர்வ பூபால வாகன சேவை, மாலை தங்கத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை நடைபெறும், இரவு கருட வாகன சேவை நடைபெறும். 6ஆம் தேதி காலை சூரிய பிரபை வாகன சேவை, இரவு சந்திர பிரபை வாகன சேவை, 7-ந்தேதி மரத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை, இரவு குதிரை வாகன சேவை, 8-ந்தேதி வாகன மண்டபத்தில் பஞ்சமி தீர்த்தம், இரவு கொடியிறக்கம் நடைபெற உள்ளது.

ஏழுமலையான் காசுமாலை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 வரை ரங்கநாயக்கர் மண்டபத்தில் ரிக் வேத பாராயணம் நடைபெறும். 2ஆம் தேதி தன்வந்திரி ஜெயந்தி நடைபெற உள்ளது. டிசம்பர் 4ஆம்தேதி பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின்போது கஜ வாகன சேவையையொட்டி ஏழுமலையான் கோவிலில் இருந்து தங்க காசு மாலையை திருச்சானூருக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

பஞ்சமி தீர்த்தம்
8ஆம் தேதி திருச்சானூரில் நடக்கும் பஞ்சமி தீர்த்தத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் இருந்து பத்மாவதி தாயார் கோவிலுக்கு மங்கல சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

தனுர் மாத பூஜை
12ஆம் தேதி கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி திருமலையில் பேடிஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், 14ஆம் தேதி கீதா ஜெயந்தி, 15ஆம் தேதி சக்கர தீர்த்த முக்கோடி உற்சவம் நடைபெறும். டிசம்பர் 16ஆம்தேதியில் இருந்து 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை தனுர் மாத கைங்கர்யம், 18ஆம் தேதி தத்தா ஜெயந்தி, 19ஆம் தேதி மார்கழி பவுர்ணமி கருட சேவை நடைபெற உள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications