கிருஷ்ண ஜெயந்தி விழா: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம்
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
குருவாயூர்: கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசிதிப்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் இன்று காலை முதலே சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது. கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர் சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
கிருஷ்ண ஜெயந்தி தினமான இன்று ராயப்பேட்டை கவுடியா மடத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட விக்கிரகத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், சென்னையின் பல்வேறு இடங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மாட அருகே மக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து கிருஷ்ணர் சிலைகள் வாங்கி செல்கின்றனர்.

உடுப்பியில் கொண்டாட்டம்
கிருஷ்ணர் அவதரித்த அற்புத நாள் கிருஷ்ண ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான இந்த புனித நாளில் விரதம் இருந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம் படைத்து, பாடல்களை பாடி அவரின் அருளை பெறுவர். நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில் வட மாநிலங்களில் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. உடுப்பியில் உள்ள கிருஷ்ணன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

குருவாயூரில் கொண்டாட்டம்
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசிதிப்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் இன்று காலை முதலே சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.

ராமநாதபுரத்தில் கிருஷ்ணஜெயந்தி
ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் கிராமத்தின் சார்பாக 25ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று ஊர் தலைவர் சாத்தையா தலைமையில் அதிகாலை பால்குட ஊர்வலம் புறப்பட்டது. பட்டணம் காத்தான் கிராமத்தில் உள்ள கண்ணன் கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று இருபத்தி ஐந்தாவது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
பெண்களின் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு,இன்று காலை பட்டணம் காத்தான் பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பட்டு கிருஷ்ணன் கோவிலை வந்தடைந்த பின்னர் கிருஷ்ண பகவானுக்கு பால் அபிஷேகம்,இளநீர் அபிஷேகம் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்பு பக்தர்களுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன்,முக கவசம் அணிந்து கலந்துகொண்டு கிருஷ்ண பகவானை அருள்பாலித்தனர். இன்று மாலை 4 மணிக்கு விளையாட்டுப் போட்டியும் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. இதேபோல் சுந்தரமுடையான் கிராமத்தில் நேற்று இரவு நடந்த வழுக்கு மரம் ஏறுதல் போட்டியில் கிராம இளைஞர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறினர். இந்நிகழ்ச்சியை கிராம பெண்கள் உட்பட அனைவரும் கண்டு களித்தனர்.

ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
கிருஷ்ணஜெயந்தி மற்றம் தொடர் விடுமுறையையொட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் இன்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து கொண்டிருக்கின்றனர். திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட தடை நீடித்து வருவதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும் வார விடுமுறை என்பதால் அதிக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு கோவிலில்; நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் தடை விதிக்கபட்டதால் கடந்த 3 நாட்களாக சுவாமி தரிசனம் செய்ய வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் கோயில் நுழைவாயிலுக்கு எதிரே நின்று சுவாமி தரிசனம் செய்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் இன்று காலை முதல் நேரடியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்தையடுத்து கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரகணக்கான பக்தர்கள் திருக்கோயில் வளாகத்திற்கு எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் புனித நீராட கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு தடை விதித்தது.இதனால் ராமேஸ்வரம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். அரசியல் வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும். பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications