For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திர கிரகணம் 2021: அனுஷம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரகஸ்த சந்திர கிரகணம் - பரிகாரம் யாருக்கு

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் 26ம் தேதி புதன்கிழமை ஏற்படவிருக்கிறது. இந்த நிகழ்வு அன்றைய தினம் மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரை மிக நீண்ட சந்திரகிரகணம் நடைபெறவிருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: இன்னும் சில நாட்களில் சந்திர கிரகணம் நிகழப்போகிறது. இது விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் கேது கிரஹஸ்த சந்திர கிரகணமாக நிகழ்கிறது. கேது உடன் சந்திரன் இணையும் போது இந்த சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பொதுவாக சந்திர கிரகணம் பவுர்ணமி நாளில் நிகழ்கிறது. அதே நேரத்தில் எல்லா பவுர்ணமி நாளிலும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை.
வரும் 26ஆம் தேதி புதன்கிழமை மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரை மிக நீண்ட சந்திரகிரகணம் நிகழப்போகிறது. இந்தியாவின் முக்கிய பகுதிகளில் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்கமுடியும்.

ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படக்கூடும். ஜோதிட சாஸ்திரப்படி சந்திர கிரகணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன் படி சந்திர கிரகணத்தின் போது கூர்மையான பொருட்களை பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டுப்பிரதிபலிக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இதனால் ரத்த நிலா என அழைக்கப்படுகிறது.

விருச்சிக ராசியில் அனுசம் நட்சத்திரத்தில்

விருச்சிக ராசியில் அனுசம் நட்சத்திரத்தில்

மங்களகரமான பிலவ வருடம் வைகாசி மாதம் 12ஆம் தேதி மே 26ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 03.14 மணி முதல் மாலை 06.23 மணி வரை அனுசம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரகஸ்த பூரண சந்திர கிரகணம் இந்தியாவில் அஸ்ஸாம், மணிப்பூர், மேகலாயா, திரிபுராவில் தெரியும். பகுதி நேர சந்திர கிரகணம் ஆக பார்க்கலாம். இந்தியாவின் மற்ற பகுதிகளில் தெரியாது. கிரகணம் தெரியாத இடங்களில் தோஷம் கிடையாது.

கேது உடன் இணையும் சந்திரன்

கேது உடன் இணையும் சந்திரன்

விருச்சிக ராசியில் தற்போது கேது சஞ்சரிக்க 26ஆம் தேதி சந்திரன் கேது உடன் இணைகிறார். ஏழாவது வீடான ரிஷப ராசியில் ராகுவும் சூரியனும் இணைந்திருக்கின்றனர். நிறைந்த பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ்க்கிறது.

இந்தியாவில் தெரியுமா?

இந்தியாவில் தெரியுமா?

2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 26 அன்று நிகழவிருக்கிறது. இந்தியாவில் இந்த மொத்த சந்திர கிரகணம் ஒரு நிழல் கிரகணமாக இருக்கும். இது கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதிக்குப் பிறகு நிகழப்போகும் முதல் முழு சந்திர கிரகணம் ஆகும். இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காண முடியாது.

கிரகணம் எங்கு தெரியும்

கிரகணம் எங்கு தெரியும்

இந்த முழு சந்திர கிரகணத்தில் சந்திரன் சற்று சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் தோன்றுவதால், இது ரத்த நிலவு என்றும் அழைக்கப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே கிரகணத்தை மக்கள் பார்க்க முடியும். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இந்த சந்திர கிரகணத்தைக் காணலாம். நாகாலாந்து, மிசோரம், அசாம், திரிபுரா, கிழக்கு ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சந்திர கிரகணத்தைக் காணலாம்.

யாருக்கு பாதிப்பு

யாருக்கு பாதிப்பு

சந்திர கிரகணத்தின் போது ஒரு வித சக்தி வெளிப்படும், இந்த கதிர்வீச்சு பாதிக்கக் கூடாது என்றுதான் கர்பிணிகள் கிரகண நேரத்தில் வெளியே வரக்கூடாது என்று கூறுகின்றனர். கிரகண நேரத்தில் மாமிச உணவுகள் சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். இந்த கிரகணத்தின் போது சிலருக்கு தோஷங்களும் ஏற்பட வாய்ப்புண்டு.

English summary
Lunar Eclipse 2021: This year's total lunar eclipse will begin at 2:17 p.m. and end at 7:19 am on May 26. Commonly known as a total lunar eclipse or Purna Chandra Grahan in Tamil. Blood Moon occurs when the Moon moves into the Earth's shadow and reflects a reddish light in the sky.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X