மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா... தினம் தினம் சிவனின் திருவிளையாடல் லீலைகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஆவணி மாதம் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடந்த பின்னர் ஆறுமாதங்களுக்கு அவரது ஆட்சி மதுரையில் தொடங்குகிறது.
மதுரை: பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மூலத்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இறைவன் நடத்திய திருவிளையாடல்கள் ஆடி வீதியில் நடைபெற உள்ளது. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது, நரியை பரியாக்கிய லீலை என தினம் ஒரு திருவிளையாடல் நடைபெறும். 17ஆம் தேதி சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. மேலும் சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி மூலம் திருவிழாவில் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும்.
ஆவணி திருவிழாவில் தான் சுவாமி நிகழ்த்திய திருவிளையாடல் லீலைகள் நடக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா நேற்று காலையில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கொரோனா பரவலையொட்டி கோவிலில் வருகிற 8ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதியில்லை என்பதால் பக்தர்கள் இன்றி அமைதியான முறையில் கொடியேற்றம் நடைபெற்றது.

சூரியனின் ஒளிக்கதிர்கள்
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நட்சத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆவணிக்கு முக்கிய நட்சத்திரம் மூலம் நட்சத்திரமாகும். அந்த ஆண்டின் சீதோஷ்ண நிலையையே நிர்ணயிக்கக் கூடியதாக இந்தநாள் உள்ளது. காலையில் சூரியன் உதயமாகும் போது மிகுந்த ஒளியுடன் இருந்தால் அந்த ஆண்டு வெயில் கொளுத்தும், மேக மூட்டத்துடன் மறைந்து தோன்றினால் பருவம் தவறி மழை பெய்து வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தும்.

ஆவணி மூலம் திருவிழா
எனவேதான் சம்ஹாரமூர்த்தியான சிவனுக்கு அச்சமயம் விழா எடுத்து அவரைச் சரணடைந்து பிரார்த்திக்கும் நாளாக அக்கால கட்டத்தை அமைத்தார்கள். இதற்காகத்தான் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களின் பெயர்களில் ஆவணி வீதிக்கு மட்டும் ஆவணி மூல வீதி என்று நட்சத்திரத்துடன் இணைத்துப் பெயர் சூட்டினர்.

நரிகளை பரியாக்கிய இறைவன்
மாணிக்கவாசக சுவாமிகளுக்காக சுந்தரேஸ்வரப் பெருமான் மதுரை மாநகருக்கு எழுந்தருளி அருள் பாலித்த தினம் இதுவாகும். குதிரைகள் வாங்க கொடுத்த காசில் மாணிக்கவாசக சுவாமிகள் கோவில் கட்டினார். இதனால் கோபமடைந்த பாண்டிய மன்னன், அவர் தமது கடமையில் இருந்தும், மன்னனின் கட்டளையில் இருந்தும் மீறியதற்காக சிறையில் இட்டும், நெற்றியில் கல்லை வைத்து சூரியனை நோக்க வைத்தும் தண்டித்தார். மாணிக்கவாசக சுவாமிகளை விடுவிப்பதற்காகச் சிவபெருமான் காட்டிலுள்ள நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு வந்து அவரைச் சிறையினின்றும் மீட்டது ஆவணி மாத மூல நட்சத்திரத் தினமாகும்.

சிவனின் திருவிளையாடல்
திருவிழாவில் 11ஆம் தேதி கருங்குருவிக்கு உபதேசம், 12ஆம் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 13ஆம் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 14ஆம் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 15ஆம் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 16ஆம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை போன்றவை நடைபெறுகிறது.

சுந்தரேஸ்வரர்
17ஆம் தேதி காலை வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 18ஆம் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 19ஆம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 20ஆம் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது.

ஆடி வீதியில் அற்புத திருவிளையாடல்
கொரோனா காரணமாக கோவிலை விட்டு வெளியே சுவாமி புறப்பாட்டிற்கு தடை உள்ளதால் திருவிழாக்கள் மற்றும் திருவிளையாடல் லீலைகள் அனைத்தும் ஆடி வீதியில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈசனின் திருவிளையாடல்கள் நடைபெற்றதாகக் கருதப்படும் மதுரை மாநகரில் நடைபெறும் சிவபெருமானின் திருவிளையாடல்களைக் கண்டு தரிசிப்பதன் மூலம் இறைவனின் அருளைப் பெறலாம் என்பது ஐதிகம்.

இறைவனிடம் வேண்டுதல்
சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் என்ன தான் தங்கள் கடமைமையச் செய்தாலும், இறைவனுக்கு அவை பணியாளர்கள் தான். எனவேதான் நவ கிரகங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, இறைவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து. இந்த ஆண்டு நல்ல சீதோஷ்ணம் வேண்டுமெனவும் நல்ல முறையில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் எனவும் இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

மூல நட்சத்திர சிறப்பு
மூல நட்சத்திரத்திற்குரிய கிரகம் கேது. வாழ்க்கையின் நிலையாமையை பற்றிய ஞானத்தை தருபவர் இவர் கடவுளின் திருவடியே நமக்கு சரணாகதி என்று இவர் உணர்த்துகிறார். அன்னை சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூல நட்சத்திரம்தான். அந்த நட்சத்திரத்தை தன் ஜென்ம நட்சத்திரமாக்கிக் கொண்டார் ஆஞ்சநேயர்.

ஆவணி மூலத்தில் அனுமன் வழிபாடு
ஆவணி மூலத்தன்று சிறந்த சீதோஷ்ணம் கிடைக்க உள்ள இஷ்ட தெய்வத்தை வேண்டுவதுடன் ஆஞ்சனேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்கலாம். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உயைது அந்த வெண்ணை உருகுவது போல நம்முடைய துன்பங்களும் உருகிவிடும் என்பது நம்பிக்கையாகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications