For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாளய அமாவாசை 2021: தடைகளை உடைக்கும் முன்னோர்கள் வழிபாடு - காகத்திற்கு உணவு வைக்க மறக்காதீங்க

நல்ல காரியங்களில் தடைகள் ஏற்பட்டால் நாம் மறக்காமல் முன்னோர்கள் வழிபாடு செய்ய வேண்டும். அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் அளித்து வழிபட்டால் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

Google Oneindia Tamil News

சென்னை: தென்புலத்தார் வழிபாடு என்பது காலம் காலமாக நடைபெறுகிறது. நம்முடைய முன்னோர்களுக்கு அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது அவசியம். முன்னோர்களை மறக்காமல் எள்ளும் தண்ணீரும் கொடுத்து வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும், திருமணத்தடை, புத்திரபாக்கியத் தடை நீங்கி நன்மைகள் நடைபெறும்.

நம்முடன் வாழும் நம் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்தவர்களுக்கும் நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

Mahalaya Amavasai 2021: Ancestor Worship That Breaks Barriers - Dont forget to do this

பெற்ற தந்தையாக மகனான மகளாக நம்முடன் வாழும் பெற்றோர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்து போன நம் முன்னோர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

சூரியன் கன்னி ராசியில் பயணிக்கும் புரட்டாசி மாதம் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம். நம்முடன் சில காலம் தங்கியிருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.

பவுர்ணமி முடிந்து பிரதமை முதல் புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நாம் கொடுக்கும் தானங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். மகாளய அமாவாசை தினத்தன்று தமிழ்நாட்டில் அதிகாலை முதலே ஏராளமானோர் புனித நீராடி திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

பெரிய அளவில் தானங்கள் கொடுத்து தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட்டு வேண்டிக்கொள்வது அவசியம். மகாளய அமாவாசை தினமான இன்று காலை முதலே ஏராளமானோர் திதி தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.

அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள். முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இன்றைய காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும். காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது.

மகாளய பட்ச காலத்தில் விரதம் இருந்தவர்கள் அனைவரும் அமாவாசை தினமான இன்றைய தினம் வீட்டில் உணவு சமைத்து முன்னோர்களுக்கு படையலிட்டு காகத்திற்கு வைத்து விட்டு அனைவரும் சாப்பிடுவது நல்லது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பருவநிலை மாற்றம் பற்றிய ஆய்வு.. இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு பருவநிலை மாற்றம் பற்றிய ஆய்வு.. இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல கோவில்களிலும் முக்கிய நதிக்கரைகள், கடற்கரைகளில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரவர் வீடுகளிலேயே திதி கொடுக்கலாம். மகாளய அமாவாசை நாளில் கடல் மற்றும் ஆறுகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் தங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய அவரவர் வீட்டிலேயே படையல் வைத்து மதியம் சாப்பிடுவதற்கு முன்பு பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கியும், காகங்களுக்கு சாதம் வைத்தும் வழிபட வேண்டும். ஆதரவற்றோருக்கு உணவும் அளிக்க வேண்டும். முன்னோர்களை வேண்டி வழிபட்ட பின்பு, மதிய உணவு சாப்பிட்டு விட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம். இதன் மூலம் தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும்.

English summary
Mahalaya Amavasai 2021 Pithru Tharpanam. Southern worship has been going on for a long time. It is necessary to pay homage to our ancestors on the days of the new moon. If you give sesame water and worship without forgetting your ancestors, the evil of filial piety will be removed, the ban on marriage and the ban on filial piety will be removed and the benefits will take place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X