Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்ல விடாத சண்டையா? அடிக்கடி ஆக்ஸிடெண்ட் ஆகுதா? கெட்ட காலம்னு கவலை வேண்டாம்..பரிகாரம் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவருடைய வீட்டில் நன்றாக வளர்ந்த செடிகள் வாடி போகும். பூஜை அறையில் விளக்கை எத்தனை முறை ஏற்றினாலும் அது அணைந்து போகும். எப்போதும் பதற்றத்துடன் இருப்பார்கள். அடிக்கடி விபத்தில் சிக்குவார்கள். மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத உடல்நிலை கெடக் கூடிய சூழ்நிலை ஏற்படும் சரியான காரணம் இல்லாமலேயே அடிக்கடி மருத்துவமனை செல்வார்கள். நமக்கு யாரேனும் செய்வினை வைத்து விட்டார்களோ என்ற பயத்துடனேயே வாழ்வார்கள். இது எல்லாம் மாந்தி தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புதான் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

நன்றாக வாழ்பவர்களைப் பார்த்து சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படும். பொறாமையால் பொசுங்குவார்கள். கண் திருஷ்டியே பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைகள் வந்து கொண்டே இருக்கும்.

செய்வினையால் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைப்பவர்களுக்கு இரவில் உறங்கும் போது யாரேனும் அருகில் இருப்பது போன்று ஒரு உணர்வு தோன்றும், நம்மை யாரோ உற்று நோக்குவது போலவும் யாரோ ஒருவர் கண்காணிப்பது போன்றும் தோன்றும் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தொழிலில் திடீரென்று தோல்வி ஏற்படும். கடன் பிரச்சினையில் சிக்குவார்கள்.

நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் திடீர் என்று பகைவர்கள் ஆவார்கள். குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே நெருக்கம் குறையும். உறவினர்களே மன உளைச்சலைத் தருவார்கள். கெட்ட கனவுகள் மூலமாக கனவுகள் மூலம் பயமும் ஏற்படும் உறக்கம் குறையும்.

Mandhi dosham: What is the remedies of madhi dosham and Parikaram temples

குடும்பத்தில் தொடர்ந்து மர்மமான முறையில் நெருங்கிய உறவினர்கள் என்று தொடர்ந்து இறந்து போவதாக கூறுவார்கள். இறந்துபோன முன்னோர்கள் அடிக்கடி அழுத முகத்துடன் கனவில் வருவார்கள். அமாவாசை, முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாட்களில் காக்கைக்கு உணவு வைத்தால் உண்ணாது.

இரவில் திடீரென்று ஒரு கருப்பு பூனை அந்த வீட்டை சுற்றி வருவது போன்று சில சூழ்நிலைகள் நடக்கும்.
பாதிக்கப்பட்டவர் வீட்டில் அருகில் பசுமாடு இருந்தால் அது மிரண்டு ஓடும் அல்லது பாதிக்கப்பட்டவர் கால்நடை வளர்த்தல் அதில் பசு மாடுகள் உயிரிழக்க கூடும். மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத உடல்நிலை கெடக் கூடிய சூழ்நிலை ஏற்படும் சரியான காரணம் இல்லாமலேயே அடிக்கடி மருத்துவமனை செல்வார்கள்

உண்மையில் இது அனைத்தும் ஜனன கால மாந்தி இருக்கக்கூடிய நட்சத்திரத்தில் ராகுவோ, கேதுவோ அல்லது ஜனன கால பாதக அதிபதி மீது நிழல் கிரகங்களான ராகு கேது கடக்கும் காலத்தில் இந்த செயல்கள் அனைத்தும் நடக்கும்.
குறிப்பாக ஜனன கால மாந்தி மீது ராகு செல்லும்போது அந்த ஒன்றரை ஆண்டுகாலம் அந்த ராசி கட்டத்தை கடக்கும் வரையில் இந்த கெட்ட சம்பவங்கள் கடந்து போகும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். உண்மையில் மாந்தி என்பது யார்? ஜாதகத்தில் எங்கு இருந்தால் எத்தகைய தடைகளை மாந்தி ஏற்படுத்தும். மாந்தி என்பது தோஷமா? அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்ன கோவிலுக்கு போகலாம் என்று பார்க்கலாம்.

மாந்தி கிரகம் சனிபகவானின் மைந்தன் என்றும், சனியின் உப கிரகம் எனவும் ஜோதிடர்கள் அதன் அமைப்பை வைத்து பலன்கள் கூறுகின்றனர். சனியின் வெட்டுப்பட்ட காலில் இருந்து உருவானவர் மாந்தி. தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மக்கள் ஜாதகம் எழுதும் போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர். மாந்தி தோஷம் உள்ளோர் அதற்குரிய பரிகாரம் செய்து வழிபடலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்துக்கு 2,5,8,11 ஆகிய இடத்தில் மாந்தி இருந்தால் அவர் செய்த புண்ணியங்கள், பாவத்திற்கான பலன்கள் அடுத்த பிறவில் அனுபவிக்க வாய்ப்புள்ளது. அதே போல் 1,4,7,10 ஆகிய இடத்தில் அமைந்திருப்பின், அவர் செய்யும் புண்ணியம், பாவத்திற்கான தண்டனைகள் அப்போதே அதாவது அவருக்கு ஏழரை சனி, அஷ்டமசனி வரக் கூடிய காலத்தில் அனுபவிக்க நேரிடும்.

பிறந்த ஜாதகத்தில் 4ஆம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதித்தல். நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். 5ஆம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் புத்திர தோஷம் ஏற்படக்கூடும். குறைந்த வயதில் கண்டம் ஏற்படலாம். 6ஆம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் பிறருக்கு உதவி செய்யக் கூடிய நல்ல மனம் படைத்தவராக, ஆரோக்கியம் மேன்மையுடன் கூடிய நீண்ட ஆயுள் உடையவராக, எதிரிகளை வெல்லக் கூடியவராக இருப்பார்.

ஜாதகத்தில் 7வது இடமான களத்திர ஸ்தானத்தில் மாந்தி இருந்தால் மனைவியின் சொத்துக்களை அழிக்கக் கூடியவராக, சிலரை நம்பி ஏமாறக்கூடிய நிலை ஏற்படும்.8ம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் அதீத பசி கொண்டவராகவும் வீண் செலவு செய்பவராகவும் இருப்பார். 9வது இடத்தில் மாந்தி இருந்தால் தந்தைக்கு பாதகத்தை ஏற்படுத்தும். எப்போதும் பிரச்னைகளுடன் வாழக்கூடிய, பணக்கஷ்டத்துடன் இருப்பவராக வாழ்வார்.

10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வாழ்க்கை முழுவதும் சுயநலத்துடன் இருப்பார். யாரைப் பற்றியும் கவலை கொள்ளாதவராக இருப்பார். இருப்பினும் சிறப்பாக உழைத்து, தன் வாழ்க்கையை படிப்படியாக முன்னேற்றக்கூடியவராக இருப்பார். 11வது இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வாழ்வில் நல்ல செல்வமும், செல்வாக்கும் கொண்டிருப்பார்கள். நல்ல துணை, மிகுந்த புகழ் மிக்கவராக திகழ்வார். 12வது இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் செலவுகள் ஏற்படும் சோம்பேறியாக இருப்பார். ஜாதகத்தில் மாந்தியுடன் இருக்கும் சுப கிரகங்களின் சேர்க்கை, நல்ல பார்வையைப் பொறுத்து இந்த பலன்கள் மாறுபடலாம்.

பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காடு ஆலயம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் மாந்தி வழிபட்ட லிங்கம் உள்ளது, அங்கே சென்று அந்த சிவலிங்கத்தை வழிபட்டாலும் மாந்தி தோஷம் நீங்கும்.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பக்கத்தில் திருநரையூர் எனும் ஸ்தலத்தில் சனிபகவான் தனிச்சந்நிதியில் எழுந்தருளுகிறார். தன் மனைவி நீலாதேவி மகன்கள் குளிகன் மற்றும் மாந்தி என குடும்பத்தோடு அருள்பாலிக்கிறார்.
இதே போல தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டைக்கு அருகே விளங்குளம் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தில் சனி பகவான் குடும்பத்தோடு காட்சி தருகிறார். அங்கே சென்று வழிபட்டாலும் மாந்தி தோஷம் இல்லாமல் போகும்.

பொதுவாக எந்த ஒரு மனிதர் இறந்தாலும் அவரை தூற்றுவது, அதாவது அவர் கெட்டவராகவே இருந்தாலும் இறந்த பிறகு அவரை தூற்றுவது பிரேத சாபம் என்னும் கடுமையான தோஷத்தைத் தரும். இதுவும் மாந்தி தோஷத்தில் ஒரு பகுதிதான். எனவே சவ ஊர்வலங்கள் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதும், இறந்தவரின் ஆன்மாவுக்காக ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்வதும், சவ அடக்கத்துக்கு நம்மால் முயன்ற உதவிகளைச் செய்வதும், மாந்தி தோஷ பாதிப்பைப் போக்கும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிலும் குறிப்பாக கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள். அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து இந்த மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைத்துக்கொள்ளலாம். குறிப்பாக புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் விரைவாக புத்திர பாக்கியம் பெறுவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+