திருமணப்பொருத்தம் - மகிழ்ச்சியான மண வாழ்க்கை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர என்ன பரிகாரம்
சமுதாயத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகளில் தம்பதியினரின் கருத்துவேறுபாடும் ஒன்றாகும். வாழவும் முடியாமல், மீளவும் முடியாமல் பலரும் மனவேதனையை அனுபவிக்கிறார்கள். இன்றைய கால கட்டத்தில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்
சென்னை: பல தம்பதியர் இன்றைக்கு திருமணம் முடிந்து சில மாதங்களில் ஜோதிடரையும், வக்கீலையும் அணுகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? திருமணத்திற்குப் பிறகு கணவன், மனைவி பிரிந்துவாழக் காரணம் என்ன? என்பதை ஜோதிட ரீதியாகப் பார்க்கலாம். அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
சமுதாயத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகளில் தம்பதியினரின் கருத்துவேறுபாடும் ஒன்றாகும். வாழவும் முடியாமல், மீளவும் முடியாமல் பலரும் மனவேதனையை அனுபவிக்கிறார்கள். இன்றைய கால கட்டத்தில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாததும் மண முறிவுக்கு முக்கிய காரணமாகும்.
திருமணம் என்பது ஒப்பந்தமல்ல என்றும் அது ஒரு சடங்கு என்பதை தற்போதைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் உயர்நீதிமன்ற நீதிபதி, ஈகோ, சகிப்புதன்மையின்மை போன்றவைகளை காலணிகளாக கருதி வீட்டுக்கு வெளியில் விட்டு விட வேண்டும் இல்லாவிட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவர் எனவும் உயர்நீதிமன்ற நிதிபதி தெரிவித்துள்ளார்.

திருமணம் - ஜோதிட ரீதியான அமைப்பு
திருமணம் தொடர்பான ஸ்தானங்களான ஒன்றாம் இடமான லக்னம், இரண்டாமிடமான குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானமான ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடம் ஆகிய ஸ்தானங்களும், அதன் அதிபதிகளும் வலிமையுடன் இருக்கவேண்டும். சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம்.
ஒருவரின் ஜாதகத்தில் தன, குடும்பஸ்தானம் எனும் இரண்டாம் இடம், களத்திரஸ்தானம் எனும் ஏழாம் இடம் ஆயுள், மாங்கல்யஸ்தானம் எனும் எட்டாம் இடம் ரொம்ப முக்கியம் அந்த இடங்களில் சுப கிரகங்கள் பார்வை விழுவது அதை விட ரொம்ப முக்கியம். ஜாதகத்தில் எந்த லக்னமாக இருந்தாலும் குரு 2, 7, 8, 12 ஆகிய இடங்களில் தனித்து இருப்பது மண வாழ்க்கையில் சிக்கலை தரும்.
ஜாதகத்தில் 2,7,8ஆம் இடங்களில் பாவ கிரகங்கள் அல்லது மறைவிட அதிபதிகளின் சம்பந்தமில்லாமல் இருக்க வேண்டும். அத்துடன் அதன் அதிபதிகள் நீசம், பகை, வக்ரம், மறைவு, அஸ்தமனம் அடையாமல் மறைவிட அதிபதிகள் சம்பந்தம் அல்லது பாவகிரகங்களின் சம்பந்தமில்லாமல் இருக்கவேண்டும். மிகக்குறிப்பாக 7ஆம் அதிபதி பகை, நீசம், அஸ்தமனம் பெறாமல் இருக்கவேண்டும்.
பெண் ஜாதகத்தின் சுக்கிரனுக்கும், ஆண் ஜாதகத்தின் செவ்வாய்க்கும் சம்பந்தம் இருக்கவேண்டும்.பெண் ஜாதகத்தில் செவ்வாய் உடன் பாம்பு கிரகங்களான ராகு- கேது சம்பந்தம், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் உடன் பாம்பு கிரகங்களான ராகு கேது சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம் என்பது ஒரு ஜாதகிக்கு வரக்கூடிய கணவனை பற்றி அறியக்கூடிய இடமாகும். ஒரு ஆண் ஜாதகத்தில் வரக்கூடிய மனைவியை பற்றி அறிய களத்திரக்காரன் என்று சொல்ல கூடிய சுக்ரனையும் , லக்னத்துக்கு ஏழாம் இடத்தை கொண்டும் அறிய வேண்டும்.
அதே போல் ஒரு பெண் ஜாதகத்தில் கணவனை பற்றி அறிவதற்கு செவ்வாய் பகவான் காரகம் வகிக்கிறார் . பொதுவாக கணவனையோ , மனைவியையோ பற்றி அறிய லக்னத்துக்கு ஏழாம் இடத்தை கொண்டு அறியவேண்டும்.
ஜோதிடத்தின் ஏழாமிடம் என்னும் களத்திர ஸ்தானமே ஒரு பெண்ணுக்கு எத்தகைய கணவன் அமைவார் என்பதைத் தெரிவிக்கும் இடமாகும். அதன்படி ஒரு பெண் ஜாதகத்தின் களத்திர ஸ்தானத் திற்கு சூரியன், குரு, புதன் சம்பந்தம்பெற உயர்குடியில் பிறந்த கணவனும், சந்திரன் சம்பந்தம்பெற அன்பு, பண்புகொண்ட கணவனும், செவ்வாய் சம்பந்தம் இருந்தால் முன்கோபமும், அவசர புத்தியும் கொண்ட கணவனும் கிடைப்பார்.
ஏழாம் வீட்டில் சுக்கிரன் நிற்பது காரகோபாவக நாஸ்தி என்றாலும் கூட- சுக்கிரன் சம்பந்தம்பெற அன்பான மனைவியை நேசிக்கக் கூடிய கணவன் கிடைப்பார். ஏழாம் வீட்டுடன் சனி சம்பந்தம்பெற மந்தபுத்தியும், அதிகமான துக்கம், தூக்கம் நிறைந்த வயோதிக கணவனும் கிடைப்பார். ராகு இருந்தால் அடிமைத்தொழிலோ, பாவத்தொழிலோ செய்துகூட குடும்பத் தைக் காக்கும் கணவனும், கேது இருந்தால் தன் சுயபுத்தியால் நவீன தொழில்செய்து குடும்பம் நடத்தும் கணவனும் அமைவார்.

கணவன் அமைவது கர்மவினை
கணவன் அமைவது கர்மவினைத் தொடர்ச்சி என்பதால், நம் ப்ராப்தம் என்ன என்பதை அறிந்து, அதற்குப் பொருத்தமான வரன், பெண்ணுடன் இணைந்து வாழும்போது பெரும் மனவேதனை வராது.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் வீட்டுக்கு அதிபதி கவர்ச்சி கிரகங்கள் என்று சொல்ல கூடிய செவ்வாயின் வீடாகிய மேஷம் விருச்சிகம் சுக்ரனின் வீடாகிய ரிஷபம் துலாம் , சந்திரனின் வீடாகிய கடகம் போன்ற வீடுகளில் இருந்தாலும் அந்த பெண்ணுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாய் இருப்பான் .
ஏழாம் வீட்டிற்கு உடைய கிரகம் செவ்வாயுடனோ , செவ்வாயின் வீடான மேஷம் விருச்சிகம் போன்றவற்றில் இருந்தாலும் அவளுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாக இருந்தாலும் , முன்கோபம் அதிகமாகவும் , அதிக செலாவளியாகவும் இருப்பான் .
ஏழாம் வீட்டுக்கு உடைய கிரகம் சுக்ரனுடன் தொடர்பு பெற்று இருந்தாலும் அல்லது சுக்ரனின் வீடுகளான ரிஷபம் துலாம் போன்றவற்றில் இருந்தாலும் அந்த பெண்ணுக்கு வரக்கூடிய கணவன் அழகாவனாகவும் , அவள் மேல் அதிக ஆசை உடையவனாய் இருப்பான். ஆனால் அதிகமாக ஆடம்பரத்தை விரும்புகிறவனாய் இருப்பான். அதாவது ஆடம்பர செலவுகள் அதிகமாக செய்வான்.
அதேபோல் ஏழுக்கு உடைய கிரகம் சந்திரனின் வீடான கடக ராசியில் இருந்தாலும் அல்லது சந்திரனுடன் தொடர்பு பெற்றிருந்தாலும் அவளுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாய் இருந்தாலும் அவனது நடவடிக்கைகள் பல சந்தேகங்களை தூண்டும் அதாவது மற்ற பெண்களின் தொடர்பு என்ற வகையில் என்ற விதத்தில் அவனுடைய போக்கு சந்தேகமாகவே இருக்கும். இவற்றை எல்லாம் குரு பகவான் தன்னுடைய பார்வையான ஐந்து ஏழு ஒன்பது போன்ற பார்வைகளால் பார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக தன மனைவியுடன் குடும்பம் நடத்துவார்.

பத்துப்பொருத்தம்
பத்துப்பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள். தம்பதிகள் இருவருக்கும் புத்திர தோஷமும், தசவிதப் பொருத்தத்தில் ராசிப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம், யோனிப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம் ஆகியவை மிகமுக்கியம். குறைந்தபட்சம் இந்த நான்கு பொருத்தம் இல்லாத ஜாதகங்களைப் பொருத்தக் கூடாது
சுக்கிரன், சந்திரன் சம்பந்தம் இருப்பவர்களுக்கு மாமியாரால் டார்ச்சர் இருக்கும். இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். மாமியாரால் பிரச்சினையை அனுபவிக்கும் எல்லாருடைய ஜாதகத்திலும் சுக்கிரன், சந்திரன் சம்பந்தம் இருக்கும். இதற்குத் தம்பதியினரின் சுக்கிரன், சந்திரனை ஈர்க்கும்விதமாகப் பொருத்தம் செய்யவேண்டும்.
தம்பதிகளின் ஜீவனகாரகன் குருவும், கர்மகாரகன் சனியும் மற்றவருக்குப் பொருந்தும் விதமாக அமைய வேண்டும். திருமணத்திற்குப் பிறகு பொருளாதார நெருக்கடி வராமல் இருக்க இந்த அமைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ராகு- கேது, செவ்வாய் தோஷத்தால் கருத்துவேறுபாடு வராமல் பொருத்தவேண்டும்.

ஜாதகப்பெருத்தம்
பொருந்தாத இரு ஜாதகங்களை இணைத்துத் தரும்படி ஜோதிடரை நிர்ப்பந்தம் செய்யக் கூடாது. குடும்பத்தின் தொழில், தகுதி ஒத்துப்போனால் போதும், ஜாதகப் பொருத்தம் தேவையில்லை என்று சிலர் அவசரம் அவசரமாக திருமணம் செய்து வைப்பார்கள் அந்த மணவாழ்க்கை சில நாட்கள் கூட மகிழ்ச்சியாக இருக்காது.
தம்பதியினர் பிரியக் காரணமாக இருப்பவர்களுக்கு பாவமன்னிப்பே கிடையாது. பல தலைமுறைக்கும் அந்த பாவம் தொடர்ந்து வரும் எனவேதான் நீதிமன்றங்களும், வக்கீல்களும் முடிந்தவரை தம்பதியினரை சேர்த்து வைக்க முயற்சி செய்கின்றனர். சமீபத்தில் ஒரு வழக்கில் கூட திருமணம் என்பது ஒப்பந்தமல்ல என்றும் அது ஒரு சடங்கு என்பதை தற்போதைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதி, ஈகோ, சகிப்புதன்மையின்மை ஆகியவற்றை காலணிகளாக கருதி வீட்டுக்கு வெளியில் விட்டு விட வேண்டும் என்று கூறியுள்ளார். எல்லா தம்பதியினரும் இதை பின்பற்றினால் குடும்பத்தில் பிரச்சினை வர வாய்ப்பில்லை.

மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்குப் பரிகாரம்
பெண்ணின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம், கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் கணவன் மனைவி பிரச்சினை ஏற்படும் இந்த தோஷ நிவர்த்திக்கு யாகங்கள் செய்யலாம். மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைய எளிமையான பரிகாரங்களை செய்தாலே போதும். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை எனவே
ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் அடைந்திருந்தால் பெண்கள் மோதிர விரலில் வைர மோதிரம் அணியலாம். இதனால் தம்பதியர் இடையே காதல் உணர்வு அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் காலையில் உண்ணாவிரதம் இருந்து மகாலட்சுமியை வணங்க தம்பதியர் இடையே ஏற்பட்ட கசப்பு மறையும். ஸ்ரீரங்கநாதரை மனதார நினைத்து வணங்கலாம். வீட்டில் துளசி செடி வளர்த்து தினந்தோறும் தண்ணீர் விட்டு வர தம்பதியர் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications