முகப்பொலிவை கெடுக்கும் தோல் நோய்கள் - கேதுவிற்கு பரிகாரம் பண்ணுங்க
ஜோதிடத்தில் முதன்மையான பலம் கொண்டவர் கேது. அவருக்கு சில நிலைகளில் ஜாதகருக்கு நோய்களை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. கேது கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அனைத்திற்கும் காரகம் வகிப்பவர். உடலில் கிருமிகள்,பூச
சென்னை: ஜோதிடத்தின் மூலம் நமக்கு நடக்கப் போகும் நல்லது கெட்டதுகளை அறிந்து கொள்ளலாம். ஒருவருக்கு ஏற்படும் நோய்,கடன்,அவஸ்தை,அவமானம் போன்ற தீய விஷயங்களையும் அறிந்து கொள்ளவும் ஜோதிடம் பயன்படுகிறது. நவகிரகங்கள் அனைத்திற்கும் காரகம், சேர்க்கை பார்வை அடிப்படையிலும் நோய்களை கொடுக்க முடியும். குறிப்பாக பலமான கிரகமான கேது இருக்கும் நிலை கிரகங்களின் சேர்க்கையைப் பொருத்து ஜாதகருக்கு நோய்களை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. கேது கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அனைத்திற்கும் காரகம் வகிப்பவர். உடலில் கிருமிகள்,பூச்சிகள் மூலம் ஏற்படும் நோய்கள் மற்றும் நோய் தொற்றுக்கள் அனைத்திற்கும் கேதுவே காரணம்.
ஜோதிடத்தில் மனித உடலுக்கு சந்திரனே காரணமாக உள்ளார். உடலில் தோன்றக்கூடிய அனைத்து வகையான நோய்களைத் தெரிவிக்கும் இடமாக ஆறாம் பாவம் உள்ளது. அதேபோல கடன் தொந்தரவுகளுக்கும் ஆறாம் பாவம் காரணமாகிறது. மனிதனுக்கு வரும் நோய்களைப் பட்டியலிட்டால் கணக்கில் அடங்காது. அழகாக இருக்கும் ஒருவருக்கு திடீரென முகத்தில் பொலிவு குறையும் தேமல், அலர்ஜி என பாதிக்கும் அந்த நேரத்தில் கேது திசையோ கேது புத்தியோ நடக்கிறதோ என்று பார்க்க வேண்டும்.
பரம்பரையாக வரும் நோய்கள், தானே தேடிக்கொள்ளும் நோய்கள், மற்றவர்களிடமிருந்து வரும் தொற்று நோய்கள், விபத்தின்மூலம் ஏற்படக்கூடிய நோய்கள், உணவின்மூலம் வரக்கூடிய நோய்கள், பிறப்பின்போதே உடம்பில் தோன்றும் நோய்கள், தவறான மருந்துகளை உட்கொள்வதால் உண்டாகும் நோய்கள் என ஏதாவது ஒரு வகையில் நோய்கள் நம்மை தாக்கும். கேது பற்றியும் கேது உடன் எந்த கிரகம் சேர்ந்தால் என்ன நோய் ஏற்படும் என்றும் பார்க்கலாம்.

கேது காரகம்
ஜோதிடத்தில் முதன்மையான பலம் கொண்டவர் கேது. கேது நிழல் கிரகம். சர்ப்ப கிரகம். கேது ஞானகாரகன் முக்திக்கு வழிகாட்டுபவர். மீண்டும் ஒரு பிறவி எடுக்காமல் இருக்க வழி காட்டுபவர். நமது முன் மற்றும் நடப்புக் கர்ம வினைகளை எல்லாம் கணக்காக வைத்திருக்கும் கணக்கப் பிள்ளை அவர். சுபக்கிரகங்களோடு சேர்ந்திருக்கும் கேது, நாம் எதிர்பாராத நன்மைகளைச் செய்யக்கூடியவர். பாப கிரகங்களுடன் சேரும் போது வாழ்க்கைப் பாதையைக் கடினமாக்குபவர் கேது. பாதையில் பல தடைகளை உண்டாக்கி, உங்களுக்கு பல மனக்கவலையை ஏற்படுத்தி, பல துன்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் மனதைப் பக்குபவப்படுத்துபவர் அவர். முன் ஜென்மப் பாவச் சுமைகளைப் போக்க உதவுபவர் அவர்.

கேது கூட்டணி
கேது செவ்வாயைப் போல செயல்படுபவர். மருந்து தொழில், மருத்துவத்தொழில் ஆகியவற்றில் இருப்பவர்கள் வெற்றி பெறுவதற்கு கேதுவின் பார்வை அல்லது சேர்க்கை கிடைக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு புதன் தாய் மாமாவிற்கு காரகத்துமாக இருக்கிறார். புதன் மற்றும் கேது இரண்டு பாப கிரகங்கள் ஜாதகத்தில் எந்த ஒரு வீட்டிலும் இணைந்திருந்தால் அந்த நபருக்கு தாய்மாமாவின் உறவு அதிக காலம் நீடிக்காது. கேது முன்னோர்களுக்கும் காரகனாக இருப்பதால் முன்னோர்கள் வழி சொத்துகளில் இந்த ஜாதகருக்கு பிரச்சனை இருக்கும். எதிலும் முழுமையாக செயல்புரிய மாட்டார்கள்.

தோல் வியாதிகள்
ஆறாம் வீட்டில் ராகு நின்றால் விஷ வண்டுகள், பாம்பு, தேள் போன்றவற்றினால் கண்டம் வரலாம். ஆறில் கேது நின்றால் உடலில் தோல் வியாதிகள் வரக்கூடும். உடலில் எப்போதும் ஒருவித வாடை இருந்து கொண்டே இருக்கும். சூரியனும் கேதுவும் சேர்ந்திருந்தால் கண் நோய், மலட்டுத்தன்மை ஏற்படும்.
சந்திரனும் கேதுவும் சேர்ந்திருந்தால் கண் நோய், மன வியாதி ஏற்படும்.

புற்று நோய் பாதிப்பு
செவ்வாய் உடன் கேது சேர்ந்திருந்தால் ரத்த ஓட்டத்தில் தடை, விகாரமான பற்கள், ரத்த சோகை, முல வியாதி, புற்று நோய், கட்டிகள், குடல் இறக்கம் ஏற்படும். புதனுடன் கேது தோல் நோய் காது நோய் ஏற்படும். குரு உடன் கேது சேர நரம்பு தளர்ச்சி, ஆன்மை குறைவு, சோம்பேறித்தனம் ஏற்படும். சுக்கிரன் உடன் கேது சேர கருப்பையில் அடைப்பு, மலட்டுத்தன்மை ஏற்படும். சனி உடன் கேது சேர நரம்பு தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, புத்தி சுவாதினம் இல்லாமை ஏற்படும் என ஜோதிடர் சித்தயோகி சிவதாசன் ரவி கணித்துள்ளார்.

விஷ பூச்சி தாக்குதல்
அதேபோல் விஷ பூச்சிகள் மூலம் ஏற்படும் நோய்கள், உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீண்ட நாள் நோய் ஏற்பட்டு உடல் மெலிந்து காணப்படும் விஷயங்களுக்கு கேது தான் காரகர். அதேபோல் கடைநிலையில் மருத்துவர்களே கைவிட்ட நிலையில் வரும் அனைத்து மர்ம நோய்களையும் கேதுவே வழங்குவார். மன அழுத்தம் தன்னை தானே அழித்து கொள்ளுதல் போன்ற விஷயங்களுக்கும் கேதுவே காரணமாவார்.

நோய்களால் பாதிப்பு
வெண்குஷ்டத்தினால் சில பாதிக்கப்படுவார்கள். அது கேதுவினால் ஏற்படும் பாதிப்புதான். கேது பாதகாதிபதி தொடர்பு,ஆறாம் மற்றும் எட்டாம் அதிபதி தொடர்பு அல்லது பகை கிரக சேர்க்கை பெற்றால் நோயை கொடுப்பார். சற்று கவனமாக இருக்க வேண்டும். அவரது தசா புத்தி காலத்தில் கண்ணுக்கு தெரியாத நோய்களைத் தருவார். சுய ஜாதகத்தில் கேதுவின் நிலையை அதன் தசா புத்தி வரும் போது பார்த்து பரிகாரம் செய்ய வேண்டும்.

நோய்களுக்கு பரிகாரம்
தோல்நோய்கள் கேதுவினால் ஏற்படும். உடம்பில் தேமல், முகத்தில் பருக்கள் தோன்றுதல் வடுக்கள் தோன்றுவது கேது தசை காலத்தில் ஏற்படும்.
ஆறில் கேது உள்ளவர்கள் மற்றும் கேது தசை நடப்பவர்கள் மட்டும் சில பரிகாரம் செய்ய நோய்கள் கட்டுப்படும். செவ்வாய்கிழமை காலையில் சிவன் கோவில் சென்று காலை 8.30 மணிக்குள் அர்ச்சனை செய்ய வேண்டும். நவகிரக சன்னதியில் எமகண்ட நேரமான காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் தேங்காய் வாழைப்பழம் வெற்றிலை, கொட்டைப்பாக்கு கதம்பம் பூக்கள் ஆகியவற்றை வைத்து அர்ச்சனை செய்து அங்கேயே வைத்து விட்டு வந்து விடுங்கள். சிவன் கோவிலில் அர்ச்சனை செய்ததை மட்டும் வீட்டிற்கு கொண்டு வரலாம்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications