தனுசு ராசியில் குடியேறப்போகும் புத்திநாதன் புதன் - 12 ராசிகளுக்கும் பலன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  2018-ல் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?

  சென்னை: புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் விருச்சிகத்திலிருந்து தனசுக்கு ஜனவரி 6ஆம் தேதியன்று பெயர்ச்சியடைகிறார். தனுசு ராசியில் ஏற்கனவே சூரியன், சனி, சுக்கிரன் குடித்தனம் செய்து கொண்டிருக்க, இப்போது புத்திநாதன் புதனும் குடியேறுகிறார். 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை அறிந்து கொள்வோம்.

  புதன் கிரகம் மிதுனம் கன்னி இரு வீடுகளுக்கு சொந்தமாகும் கன்னியில் புதன் கிரகம் உச்ச பலம் பெறுகிறது மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது. புதன் மீனத்தில் நீச்சமாகிறது. கல்விக்கு அதிபதி புதன். அவர் நீச்சமாகி இருந்தால் எவ்வளவு படித்தாலும் மதிப்பெண் குறைவாகவே கிடைக்கும்.

  புதன் கிரகத்திற்கு நண்பா்கள் சூாியன் சுக்கிரன். புதன் கிரகத்திற்கு நன்மை தீமை கலந்து தரும் சம கிரகங்கள் சனி குரு செவ்வாய். புதன் கிரகத்திற்கு தீமை செய்யும் பகை கிரகம் சந்திரன்.

  புதனின் புத்திசாலித்தனம்

  புதனின் புத்திசாலித்தனம்

  மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லாம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான். இவர் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அதனால் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

  மூளைகாரகன் புத்தி

  மூளைகாரகன் புத்தி

  புதனுக்கு மிதுனம் மற்றும் கன்னி ஆகிய இரண்டு ராசி வீடுகள் உண்டு. இதில் கன்னியில் புதனுக்கு ஆட்சி, மூலத்திரிகோணம், உச்சம் ஆகிய மூன்று நிலைகள் உண்டு. கிரகங்களில் புதன் ஒருவர் மட்டும் தான் தன் வீட்டில் உச்சம் பெறுகிறார். மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். இவர் அலித்தன்மையுடைய கிரகம். ஆண்களுக்கு ஆண்மை குறைவையும், பெண்களுக்கு பெண்மை குறைவையும் ஏற்படுத்தக்கூடியவர். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார்.

  புதன் ஆதிபத்யம்

  புதன் ஆதிபத்யம்

  புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புதன் நீசமாகவும், 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை, கால் வலிப்பு, நரம்புத் தளர்ச்சி, முடக்குவாதம், பய உணர்வு, சஞ்சலம், சபல புத்தி, மனநலம் குன்றுதல், காக்கை வலிப்பு, அலித்தன்மை, மறதி, நடுக்கம் போன்ற உடல் உபாதைகள் உண்டாகும்.

  மேஷம்

  மேஷம்

  மேஷத்திற்கு புதன் 3 மற்றும் 6 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் அமர்வது நன்மையை தரக்கூடியது. பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் பணியிடங்களில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். பூா்வீக சொத்தில் பிரச்னைகள் தலைதூக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. ஆலய வழிபாட்டில் தடைகள் ஏற்படும். சகோதர வழியில் ஆதாயம் ஏற்பட்டாலும் திருப்தி இருக்காது. தொழில் தடை, முயற்சிகளில் கவனக்குறைவு ஏற்படும்.

  ரிஷபம்

  ரிஷபம்

  ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் 8வது இடத்தில் அமர்கிறார். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.

  ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். ரிஷப ராசிக்கு புதன் 2 மற்றும் 5ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பண வருவாய் திருப்தி தரும் பிள்ளைகள் சாதனை நிகழ்த்துவாா்கள்.

  மிதுனம்

  மிதுனம்

  மிதுனத்திற்கு புதன் 1 மற்றும் 4 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் உங்கள் ஆட்சி நாதன் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம்.உடல் நிலையில் கவனம் தேவை. பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. பங்குதாரா்களிடம் எச்சாிக்கையாக இருக்கவும். பிரச்னை தலையெடுக்கும்.

  கடகம்

  கடகம்

  கடகத்திற்கு புதன் 3 மற்றும்12 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா் புதன். கடகம் ராசிக்கு 6வது இடத்திற்கு புதன் அமர்கிறார். 6வது இடம் ருண ரோக ஸ்தானம். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண வரவு அதிகரிக்கும். சின்னச் சின்ன சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். இது திருப்தியான காலமாகும். புகழ் கிடைக்கும். மற்றவா்களிடம் நற்பெயா் கிடைக்கும். சகோதா்கள் உதவி கிடைக்கும். ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்ல நோிடும்.

  சிம்மம்

  சிம்மம்

  சிம்மத்திற்கு புதன் 2 மற்றும் 11 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். சிம்மம் ராசிக்கு 5வது இடத்திற்கு புதன் அமர்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். துணையின் ஒத்துழைப்பு கிடைக்காது. மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிப்பார்கள். குடும்பத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டு கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் பிரச்னை ஏதும் செய்யாதீா்கள். குழந்தைகள் வழியில் செலவினம் அதிகாிக்கும்.

  கன்னி

  கன்னி

  கன்னிக்கு புதன் 1 மற்றும்10 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் உங்கள் ராசிநாதன் புதன் அமர்ந்துள்ளார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். உறவினா் வருகை உண்டு. பணம் வருவாய் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். வாகன லாபம் உண்டு. வியாபாரத்தில் வேலைப்பளு அதிகாிக்கும்.

  துலாம்

  துலாம்

  புதன் உங்கள் ராசிக்கு 3வது இடத்தில் அமர்கிறார். துலாம் ராசிக்கு புதன் பகவான் 9 மற்றும் 12ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்வதற்கான நேரமாகும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்வா்களுக்கு பிரச்னை ஏற்படும். கடன் தொல்லை அதிகாிக்கும். பண வருவாய் பஞ்சமிருக்காது. தந்தையின் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டும். செலவினம் அதிகாிக்கும்.

  விருச்சிகம்

  விருச்சிகம்

  விருச்சிக ராசிக்கு புதன் 8 மற்றும் 11ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் புதன் அமர்ந்துள்ளார். உற்சாகமான கால கட்டமாகும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பணவருவாயும், சொத்து சோ்க்கை உண்டு. உதவிகள் வந்து சேரும். உடல் நிலையில் கவனம் தேவை. எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். பொது விவகாரத்தில் கவனம் தேவை.

  தனசு

  தனசு

  தனசு ராசிக்கு புதன் 7 மற்றும் 10 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். தனுசு ராசியில் அமரும் புத பகவானால் சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவிகளில் உயர்வு அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் சிலருக்கு கெட்ட பெயா் வரும். வியாபாரத்தில் மதிப்பு கெடும்.

  மகரம்

  மகரம்

  மகர ராசிக்கு புதன் 6மற்றும் 9ஆம் வீடுகளுக்குச் சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னை அதிகாிக்கும். உடல் உபாதை ஏற்படும். நீண்ட நாள் உபாதை அதிக தொல்லை தரும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும்.

  கும்பம்

  கும்பம்

  கும்பத்திற்கு புதன் 5 மற்றும் 8 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். காதல் முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உண்டு. எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும். வீட்டில் பொருள் சோ்க்கை ஏற்படும்.

  மீனம்

  மீனம்

  மீன ராசிக்கு புதன் 4 மற்றும் 7 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். மீனம் ராசிக்கு 10வது இடத்தில் அமர்கிறார் புதன் பகவான். நிலம், வீடு, வண்டி வாகன சேர்க்கை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு உயர்வு அதிகரிக்கும். இது அற்புதமான இடமாகும். சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். ஆடை ஆபரணம் சோ்க்கை ஏற்படும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Mercury Transit In Sagittarius. Mercury is the closest planet to the Sun in the solar system. Besides, Mercury is regarded as the planet of intelligence and eloquence. Weak Mercury provides results as per the planets that are in conjunction.This is a general prediction for each sign. But the prediction for each person varies depending on the janma and lagna dashas of that person.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற