Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிஷப ராசியில் புதன்-சுக்கிரன் கூட்டணி.. சிலரின் தலைவிதியை மாற்றப்போகும் மகாலட்சுமி யோகம்

இன்னும் சில நாட்களில் புதன் சுக்கிரன் கிரகங்கள் ரிஷப ராசியில் இணைய உள்ளன. இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை:கிரகங்கள் மனதையும் உடலையும் ஆள்கின்றன. புத்தியும் மனமும் சில நேரங்களில் நவகிரகங்களின் கட்டுப்பாட்டிற்குள் போய்விடுகின்றன என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். எனவேதான் உடல்நிலையோ மனநிலையோ சரியில்லை என்றால் ஜாதகத்தை கையில் எடுக்கிறோம். ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணைவதால் ஏற்படும் பலன் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இன்னும் சில நாட்களில் புதன் சுக்கிரன் கிரகங்கள் ரிஷப ராசியில் இணைய உள்ளன. இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதனும் சுக்கிரனும் மிகவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகின்றன. சுக்கிரன் ஆடம்பரம், பொருள் இன்பம், காதல், திருமண வாழ்க்கை போன்றவற்றின் காரகமாக விளங்குகிறார். அதேபோன்று, புதன் கிரகம் அறிவாற்றல், புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், தகவல் தொடர்பு மற்றும் பேச்சாற்றலின் காரணியாக கருதப்படுகிறது. எனவே இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் கூட்டணி சேருவது பலருக்கு நன்மையைத் தரும்.

ஜூன் 18 ஆம் தேதி, ரிஷப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சுக்கிரன் சுக்கிரன் கிரகம் தன்னுடைய ராசியான ரிஷப ராசியில் பிரவேசிக்கிறார். அங்கு ஏற்கனவே புதன் கிரகம் உள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணியால் சிலருக்கு மகாலட்சுமி யோகம் உருவாகும். இந்த யோகம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. யார் அந்த அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் என்று பார்க்கலாம்.

மகாலட்சுமி யோகம்

மகாலட்சுமி யோகம்

ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே. வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் அன்னை மகாலட்சுமி. அழகு,செல்வம் மகிழ்ச்சி, அன்பு, கருணை அமைதி ஆகியவற்றின் ஆதாரமும் மகாலட்சுமிதான். ஒருவரின் ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருந்தால் அவர் ஏழ்மையான நிலையில் பிறந்தாலும் கோடீஸ்வரனாக உயர்வார். சில நேரங்களில் கிரகங்களின் சேர்க்கையும் ஒருவரை திடீர் கோடீஸ்வரராக உருவாக்கும்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே. இரண்டாம் இடம் தன, வாக்கு, குடும்ப ஸ்தானம். இந்த இடத்தில் நல்ல கிரகங்களின் கூட்டணி அமைந்தால் திடீர் யோகம் ஏற்படும். உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் புதன்-சுக்கிரன் கூட்டணி ஏற்படப்போகிறது. வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் உருவாகும் கிரக சேர்க்கையால் பேச்சிற்கு மதிப்பு கூடும். நல்ல தன வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். உங்களின் நிதி நிலைமை மேம்படும்.

மிதுனம்

மிதுனம்


புதன் பகவானை ராசி அதிபதியாகக்கொண்ட மிதுன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12வது வீட்டில் புதன் சுக்கிரன் கூட்டணி சேருவதால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சுப செலவுகள் வந்து சேரும். புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வும் தேடி வரும். உங்களின் பொருளாதார நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். உங்களின் ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் எனப்படும் 11ஆம் வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் கூட்டணி அமைவது சிறப்பு. லாப வீட்டில் மகாலட்சுமி யோகம் அமைகிறது. இது உங்களுக்கு தொழிலில் முன்னேற்றத்தைத் தரப்போகிறது. உங்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான நேரமும் கை கூடி வந்துள்ளது. வளமான எதிர்காலம் வரப்போகிறது.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் புதன் சுக்கிரன் கூட்டணி சேருவது சிறப்பு. இந்தக் காலத்தில் உங்களுக்கு அன்னை லட்சுமியின் நேரடி அருள் நிலைத்திருக்கும். புதிய வேலை கிடைக்கும். சம்பள உயர்வும் புரமோசனும் கை கூடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. நோய்கள் நீங்கி உங்களின் ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், புதன் கூட்டணி அமைந்துள்ளது. புதிய வேலை கிடைக்கும். இதுவரை தடைபட்ட காரியம் நடந்து முடியும். பதவி உயர்வு கிடைக்கலாம். இதன் மூலம் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். தொழில்-வியாபாரத்தில் நல்ல தன லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். திடீர் அதிர்ஷ்டத்தால் வருமானம் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+