பொங்கல் ராசி பலன் 2023: இந்த பொருளை தானமாக கொடுங்கள்..மகாலட்சுமி யாகம் தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகை நாளில் இருந்து சூரிய பகவானின் வடதிசை பயணம் ஆரம்பமாகிறது. மகர ராசியில் சூரியன் பயணம் செய்யும் போது கூடவே சுக்கிரனும் பயணம் செய்கின்றார். இந்த கிரகங்களின் இடமாற்றம் கூட்டணி ஆகியவைகளைப் பொறுத்து சில ராசிக்காரர்களுக்கு அஷ்ட லட்சுமி யோகமும் தேடி வரப்போகிறது. பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். மகிழ்ச்சியான தருணங்களில் ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் தானம் கொடுக்கலாம். நாம் கொடுக்கும் தானத்தை பெற்றுக்கொண்டவர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று நம்மை வாழ்த்துவார்கள். தானமும் தர்மமும் செய்வதன் மூலம் நம்முடைய செல்வ வளம் பெருகும். என்பதில் நம்பிக்கை உள்ளது. துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் என்ன பொருட்களை தானமாக தர வேண்டும் என்று பார்க்கலாம்.

துலாம்

சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சூரியன், சுக்கிரன், சனி கூடியிருக்கும் போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சொத்து சேர்க்கை ஏற்படும். சூரியனும் சுக்கிரனும் இணைந்து உங்களுக்கு ஆடம்பர பொருள் சேர்க்கையை ஏற்படுத்துவார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கோதுமை மாவில் நெய், சர்க்கரை சேர்த்து செய்த உணவுப்பொருளை தானமாக கொடுக்க கடன் பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். திடீர் யோகமும் பண வரவும் கிடைக்கும்.

Pongal rasi palan 2023: Donate on Pongal day solve your problems

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சூரிய பகவான் சனி, சுக்கிரன் உடன் பயணம் செய்யப்போகிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக நல்ல வேலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யவும். இனிப்பு உளுந்து வடை தானமாக கொடுக்க எவ்வளவு பெரிய பிரச்சினை இருந்தாலும் முடிவுக்கு வரும்.

Pongal rasi palan 2023: Donate on Pongal day solve your problems

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான மகர ராசியில் சூரியன், சனி,சுக்கிரன் இணைந்துள்ளதால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். பண வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் எல்லாம் திரும்ப வரும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஞாயிறுக்கிழமைகளில் மருந்து மாத்திரை முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.

Pongal rasi palan 2023: Donate on Pongal day solve your problems

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்குள் மூன்று கிரகங்கள் இணைந்துள்ளன. எத்தனையோ சிக்கல்கள் வந்தாலும் இந்த பொங்கல் முதல் உங்களுடைய பிரச்சினைகள் தீருவதற்கான வழி பிறக்கப்போகிறது. மன கலக்கம் நீங்கப்போகிறது. நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்க
எள், வெல்லம் சேர்த்த எள் உருண்டை செய்து தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.

Pongal rasi palan 2023: Donate on Pongal day solve your problems

கும்பம்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உங்களுக்கு தை மாதம் முதல் பண வரவு வருவதற்கான வழி பிறக்கப்போகிறது. கனவுகள் நனவாகப்போகிறது. உங்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போகிறது.
பாலில் சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்து வெள்ளிக்கிழமை பெருமாள், தாயாருக்கு நைவேத்தியம் செய்து வணங்கி ஏழைகளுக்கு தானமாக கொடுத்து வர நன்மைகள் நடைபெறும். லட்டு வாங்கி தானமாக கொடுக்க கடன் பிரச்சினைகள் நீங்கும். செல்வ வளம் அதிகரிக்கும்.

Pongal rasi palan 2023: Donate on Pongal day solve your problems

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் கிரகங்கள் கூட்டணி சேரப்போவதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பிரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது. எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை எளிதில் சமாளிக்கக் கூடிய மன தைரியத்தை சூரிய பகவான் உங்களுக்கு கொடுக்கப்போகிறார். ஞாயிற்றுக்கிழமை காலையில் சூரிய நமஸ்காரம் செய்து கோதுமையால் செய்த சப்பாத்தியை தொழு நோயாளிகளுக்கு தானமாக கொடுக்க பண வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் நீங்கும்.

Pongal rasi palan 2023: Donate on Pongal day solve your problems
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+