ராகு கேது பெயர்ச்சி 2020: இந்த 2 ராசிக்காரர்களின் கஷ்டங்களும் காணாமல் போகப்போகுது
ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் மாதம் நிகழப்போகிறது. இந்த கொரோனா கால கட்டத்தில் எல்லோருமே கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள். நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியால் கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் என்பதே பலரின்
சென்னை: ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அந்த கிரகங்களின் பலனை செய்வார்கள். ரிஷபம் சுக்கிரன் வீடு என்பதால் ராகு சுக்கிரனை போலவும், விருச்சிகம் செவ்வாய் வீடு என்பதால் கேது செவ்வாயை போலவும் செப்டம்பர் மாதம் முதல் பலனை கொடுப்பார்கள். இந்த கொரோனா கால கட்டத்தில் எல்லோருமே கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள். நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியால் கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் என்பதே பலரின் கணிப்பு. அதிக கஷ்டத்தில் உள்ள மிதுனம், தனுசு ராசிக்காரர்களின் சிக்கல்கள் தீரும் காலம் வந்து விட்டது.
ஆவணி மாதம் 16ஆம் தேதி செப்டம்பர் 1ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நடைபெறப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தேதி நிகழ்கிறது. இந்த இடப்பெயர்ச்சியால் தற்போது மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கு நகர்கிறார். அதே போல கேது பகவான் தற்போது உள்ள தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு நகர்கிறார்.
ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6,11,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3,7,11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

அள்ளித்தரும் ராகு கேது
பாவ கிரகங்கள் ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மை ஏற்படும். ராகு எண்ணம், ஆசை மோகம் முயற்சியும் அதற்குத் தேவையான பயிற்சியும் கொடுப்பார். கேது ஞான காரகன், அவரும் சரியான இடத்தில் இருந்தால் அள்ளித்தரும் வள்ளல், திடீர் குபேரன். ஆக உருவாக்குவார்.

மிதுனத்திற்கு தொழில் வாய்ப்பு
செப்டம்பர் மாதம் முதல் விரைய ஸ்தானத்தில் ராகுவும் ஆறாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். ராகு ஜென்ம ராசியில் இருந்தாலும் தனுசு ராசியில் இருந்த சனியின் பார்வை உங்க ராசியில் இருந்த ராகுவை செயல்பட விடாமல் தடுத்தது. ஒருவழியாக குருவின் பார்வை கிடைத்து செயல்பட தொடங்கியிருக்கிறார் ராகு என்றாலும் அஷ்டமத்து சனி ஆட்டித்தான் வைக்கிறது. இனி உங்கள் வாழ்க்கையில் இருந்த இருள் விலகி வெளிச்சம் கிடைக்கப் போகிறது. ராகு 12 ஆம் இடத்திற்கு மாறுவதால் தொழில் வாய்ப்பு நன்றாக இருக்கும். புதிய வர்த்தக தொடர்பு ஏற்படும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும்.சுபகாரியங்கள் திருமணம், வீடு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.

சந்தோஷம் அதிகரிக்கும்
ஏழாம் வீட்டில் இருந்த கேதுவினால் குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகம் இருந்தது. இனி கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். ஆறாம் இட கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறும். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும்.

ஆரோக்கியம் அதிகரிக்கும்
நோய் பாதிப்புகள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். கேது பகவான் எதிரிகளை துவம்சம் செய்து விடுவார். அக்கம் பக்கத்தினருடன் இருந்த பிரச்சினைகள் தீரும். கடன் பிரச்னைகள் குறையும். பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். செவ்வாய்கிழமைகளில் விநாயகரை வெற்றிலை மாலை சாற்றி வணங்குங்கள்.

மனதில் மகிழ்ச்சி தரும் ராகு
தனுசு ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் இருந்து ராகு இடப்பெயர்ச்சியாகி ஆறாம் வீட்டிற்கு நகர்கிறார். கேது தலையில் இருந்து விலகி 12ஆம் வீட்டிற்கு நகர்கிறார். ஏழரை சனி, ஜென்ம குரு இருந்தாலும் ராகு கேது பெயர்ச்சி நன்மையை தரப்போகிறது.
ராகுவினால் தனுசு ராசிக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கப் போகிறது. உப ஜெய இடமான 6வது வீட்டிற்கு வருகிறார். வெற்றிகள் கிடைக்கும். இகழ்ந்தவர்களுக்கு மத்தியில் வெற்றி பெறுவீர்கள். நல்ல விசயங்கள் கிடைக்கும். வீடு வாகன சேர்க்கை கிடைக்கும். உறவுகளுக்கு இடையே மகிழ்ச்சி தாண்டவமாடும்.

வேலையும் பதவி உயர்வும்
தனுசு ராசிக்கு ஜென்மத்தில் இருந்த கேது விரைய ஸ்தானத்திற்கு மாறுவதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கொரோனா பிரச்சினையில் வேலை போய்விட்டதே என்று கவலைப்பட்டவர்களுக்கு இனி நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோகத்தில் பதவி உயர்வும் கூடி வரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications