இன்பமும், துன்பமும் கொண்டதுதாங்க வாழ்க்கை... சகட யோகம் சொல்லும் உண்மை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழ்க்கை என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்ததுதான். ஒருவரின் ஜாதகத்தில் குருவுக்கு சந்திரன் 6,8,12 ஆகிய இடங்களில் இருந்தால், இந்த சகட யோகம் உருவாகிறது.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைத்தாலும் என்பார்கள். பொன்னவன் என்பவர் குரு பகவான்.

பொதுவாக குரு தரும் யோகம் உங்கள் சுய ஜாதகத்தில் எப்படிஉள்ளது என்பதைக் கண்டறிந்து, குருவை வணங்கினால் பொன்னான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

வாழ்க்கை இன்பமும், துன்பமும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது என்பதுதான் சகடயோகம் உணர்த்தும் உண்மை. குருவுக்கு சந்திரன் 6,8,12 ஆகிய இடங்களில் இருந்தால், இந்த சகட யோகம் உருவாகிறது. இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே, மற்றொரு தொகை வந்து சேரும்.

வாழ்க்கை சக்கரம்

வாழ்க்கை சக்கரம்

வண்டியில் சக்கரம் சுழலும்போது மேற்பகுதி கீழேயும், கீழ்ப்பகுதி மேலேயும் மாறி மாறி வருவதைப்போல, சகடயோக ஜாதகக்காரர்களின் அதிர்ஷ்ட நிலைமை தடைப்படுவதும், தடை நீங்குவதுமாக இருக்கும். வாழ்க்கை வண்டிச்சக்கரம் போல அவர்களின் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.

நிலையான வாழ்க்கை அமையாது

நிலையான வாழ்க்கை அமையாது

இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் ஒரே இடத்தில் நிலையாக இருந்து வேலை பார்க்க முடியாது. வேறு வேறு இடத்திற்கு மாறிக் கொண்டே இருப்பார்கள் அல்லது அலைந்து கொண்டே இருப்பார்கள். எனவே கையில் காசு இருக்கும் போது அதை மனைவி, மக்கள் பெயரில் போட்டு வைத்து விடுங்கள்.

விதிவிலக்கு

விதிவிலக்கு

சகடயோகச் சந்திரன், ஜாதகனின் லக்கினத்தில் இருந்து திரிகோணத்தில் இருந்தால், சகடயோகம் ரத்தாகிவிடும்.
சகடயோகச் சந்திரன் குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் ரத்தாகிவிடும்.

சகடயோகச் சந்திரன், நவாம்சத்தில் குருவுடன் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தாலும் யோகம் ரத்தாகிவிடும்.
சகடயோகத்தைத் தரும் இருவரில் ஒருவர் ராசியில் உச்சமாகவும், மற்றொருவர் நவாம்சத்தில் உச்சமாக இருந்தாலும், யோகம் ரத்தாகிவிடும்.

கஜகேசரி யோகம்

கஜகேசரி யோகம்

குரு சந்திரனால் சகடயோகம் மட்டுமல்ல இன்னும் நிறைய யோகங்கள் இருக்கின்றன. அவற்றை வரிசையாக பார்க்கலாம். அதில் ஒன்றுதான் கஜகேசரி யோகம். குரு, சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4,7,10 ஆகிய இடங்களில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவர்களாக விளங்குவர்.

குரு சந்திர யோகம்

குரு சந்திர யோகம்

சந்திரனுக்கு குரு 1,5,9 ஆகிய இடங்களில் காணப்பட்டால், குரு சந்திர யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ் மிக்கவர்களாகவும், நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

குரு மங்கள யோகம்

குரு மங்கள யோகம்

குரு, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும், குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தாலும் இந்த குரு மங்கள யோகம் உண்டாகும். இந்த யோகத்தைப் பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

ஹம்ச யோகம்

ஹம்ச யோகம்

சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றிருந்தால், இந்த ஹம்ச யோகம் உண்டாகும். நல்ல உடலமைப்பையும், ஒழுக்கமான வாழ்க்கையை ஏற்றவர்களாகவும் இந்த யோகத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.

பரிகாரம்

பரிகாரம்

எந்த நேரம் வேண்டுமானாலும் குருபகவானை வழிபாடு செய்யலாம். வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் குருபகவானுக்கு விளக்கு போடலாம். விசாகம், புனர்பூசம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வியாழக்கிழமையோடு இணைந்து வரும்பொழுதும் குரு ஓரையில் குருவை வழிபட்டு பரிகாரங்கள் செய்தால் அற்புதப் பலன்களைப் பெறலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sakata means wheel. wheel rotates up and down.So money comes and goes. Few months native have money next few months he is penny less. Moon is in the 6th, 8th or 12th House from Jupiter then Sakata yoga is formed in one's horoscope.
Please Wait while comments are loading...