Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2020-23: தனுசு குடும்பம், மகரம் ஜென்மம், கும்பம் விரையம் -ஏழரை சனிக்கு பரிகாரங்கள்

ஏழரை சனி காலத்தில் பல கஷ்டங்களை சனிபகவான் கொடுப்பதால்தான் சனிப்பெயர்ச்சி என்றாலே அதுவும் ஏழரை சனி என்றாலே பலரும் பரிகாரம் செய்ய முன்னதாகவே சனிபகவானை சரணடைகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியினால் அதிகம் நிம்மதி அடைவது விருச்சிகம் ராசிக்காரர்கள்தான். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து தைரிய ஸ்தான சனி ஆரம்பிக்கிறது. இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு பாத சனியாகவும், மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியாகவும் தொடர்வதால் இந்த மூன்று ராசிக்காரர்களும் சனிபகவானால் சோதனைகளைகளை சந்திக்கப் போகிறார்கள். இந்த மூன்று ராசிக்காரர்களும் என்ன பரிகாரங்களை செய்யலாம் என்று பார்க்கலாம்.

சனியின் பிடியில் இருந்து அந்த ஈசனே தப்பிக்க முடியாது என்று சொல்லும் வகையில் புராண கதையே உள்ளது. சனிபகவான் நீதிமான் என்பதால் தவறு செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை தருவார். நல்லவர்களை தண்டிக்க மாட்டார் சோதனை கொடுப்பதோடு படிப்பினைகளை தருவார். தவறு செய்தவர்களை கண்டிப்பாக சனிபகவான் தண்டிப்பார்.

ஏழரை சனி மொத்தம் ஒரு ராசிக்காரர்களுக்கு ஏழரை ஆண்டுகாலம் நடக்கிறது. இதில் விரைய சனி இரண்டரை ஆண்டுகள், ஜென்ம சனி இரண்டரை ஆண்டுகள், பாத சனி இரண்டரை ஆண்டுகள் என மொத்தம் ஏழரை ஆண்டுகாலம் நடைபெறுகிறது. அப்போது தசாபுத்தியும் சரியில்லாத நிலையில் இருந்தால் சங்கடங்களை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு பாத சனியும், மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியும் கும்பம் ராசிக்காரர்களுக்கு விரைய சனியும் ஆரம்பிக்கிறது.

பாத சனி யாருக்கு பாதிப்பு

பாத சனி யாருக்கு பாதிப்பு

சனிபகவான் பாத சனியாக தனுசு ராசியை பிடிக்கிறார். ஐந்தரை ஆண்டுகாலம் சனியின் பிடியில் சிக்கியிருந்தவர்கள் இனி இரண்டரை ஆண்டுகாலம் கடந்து விடுவார்கள். சனியின் பார்வை நான்காம் வீடு, எட்டாம் வீடு, பதினொன்றாம் வீடுகளை பார்க்கிறார். இதுநாள்வரை நஷ்டப்பட்டு, அவமானப்பட்டு இருந்தவர்களுக்கு நல்ல நிலையை தருவார். சங்கடங்களை துடைப்பார். ஏழரை ஆண்டுகால முடிவில் நல்ல படிப்பினைகளை தந்து விட்டு செல்வார். அந்த படிப்பினை போதும் ஏழரை சனி சோதனைகளை தருவதே நன்மைக்காகத்தான் என்று கடந்து செல்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. இனி புதிய வேலை கிடைக்கும் வருமானத்திற்கு வழியின்றி தவித்து வந்தீர்கள். இனி பணவருமானத்திற்கு வழியை ஏற்படுத்துவார். நஷ்டங்களை சந்தித்த நீங்கள் இனி லாபத்தை சந்திப்பீர்கள். பாத சனியாக இருந்தாலும் ஏழரை சனி இரண்டரை வருஷம் நிம்மதி தருவார். இருளில் மூழ்கியிருந்த உங்களுக்கு வெளிச்சம் தென்படும் காலம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனத்தில் செல்லும் போவது கவனம் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சனி பார்வை படுவதால் வேலையில் இடம் மாற்றம் ஏற்படும்.

மகரத்திற்கு ஜென்மம்

மகரத்திற்கு ஜென்மம்

மகரம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் ஜென்மசனியாக அமர்கிறார். தூக்கம் தொலையும் கஷ்டங்கள் என்றால் என்னவென்று புரியவைப்பார். உடல்நிலை பாதிப்பு, தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, மன அழுத்தம் ஆகியவற்றை ஜென்மசனி காலத்தில் ஏற்படுத்துவார். மகரம் ராசிக்கு அதிபதி சனிபகவான் என்பதால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தரமாட்டார். சனியின் பார்வை மகரம் ராசிக்கு தொழில் ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார். திருமண வாழ்க்கை துணை, காதலின் துணையைப் பற்றிய உண்மையை உணரவைப்பார். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு திடீர் பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு தொழில் முடக்கம் தொழில் நஷ்டம் ஏற்படும். எல்லாம் ஆணவத்தில் ஆடுபவர்களுக்குத்தான். அதே நேரத்தில் அமைதியாக கடந்து செல்பகவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. 30 வயதை கடந்தவர்களுக்கு முன்னேற்றகரமான காலம் காரணம் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். புதிய தொழில் தொடங்குவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்யும் காலம். பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும்.

கும்பத்திற்கு விரையம்

கும்பத்திற்கு விரையம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி விரைய சனியாக ஆரம்பிக்கிறது. இதுநாள் வரை லாப சனியாக இருந்த போது சம்பாதித்த பணத்தை சொத்துக்களாக நகைகளாக சுப விரையங்களாக மாற்றலாம். மகரம் ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் தனது பார்வையால் கும்ப ராசிக்காரர்களுக்கு தனம், ருணம், பாக்ய ஸ்தானங்களை பார்க்கிறார். இந்த கால கட்டத்தில் பணப்பிரச்சினைகள், குடும்பத்தில் சிக்கல்கள், கடன் தொல்லைகள் ஏற்படும். பண விரையத்தின் போதுதான் பணத்தின் அருமை தெரியும். சனிபகவான் கும்பம் ராசிக்கு அதிபதி என்பதால் அதிகம் சங்கடங்கள் தராமல் சில படிப்பினைகளை தருவார். எனவே பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். 30 வயதுக்கு உள் இருப்பவர்கள் கவனம் தேவை. 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொங்குசனியை அனுபவிப்பீர்கள். சொத்துக்களை சேர்ப்பீர்கள். பாசிட்டிவ் எண்ணங்கள் தேவை. தான தர்மங்கள் அதிகம் செய்யவும். இந்த கால கட்டத்தில் வீணான வாக்குவாதங்கள், வார்த்தைகளை விட வேண்டாம். மாணவர்களுக்கு கவனம் தேவை. படிப்பில் கவனம் செலுத்துங்கள். திருமணம் செய்ய நினைப்பவர்கள் நன்றாக விசாரித்து நல்ல வாழ்க்கையை தேர்வு செய்யவும். நிதானம் அவசியம். சுய ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால் தசா புத்தி நன்றாக இருந்தால் இந்த சனி பெயர்ச்சி வளர்ச்சியை தந்து உங்களைக் காப்பாற்றுவார்.

ஏழரை சனி காலத்தில் பரிகாரம்

ஏழரை சனி காலத்தில் பரிகாரம்

ஏழரை சனி காலம் என்பதால் பதற்றமோ பயமோ படவேண்டாம். நிதானமும் பொறுமையும் அவசியம். ஏழைகளுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள். சனிபகவான் கால் சற்றே ஊனமாக இருக்கும் என்பதால் அவர் மெதுவாக நடக்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவலாம். முதியவர்களுக்கு செருப்பு, குடை தானமாக தரலாம். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கவேண்டும். கால பைரவரை அரளி மாலை சாற்றி வணங்க வேண்டும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கலாம். சனிபகவனால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+