Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி : வக்ர நிவர்த்தியாகும் சனிபகவான் - எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு

சனியைப் போல கொடுப்பாரும் இல்லை சனியைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். சனிபகவான் வக்ர நிலையில் இருந்து நிவர்த்தியாகி நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிபகவான் வக்ர நிலையில் இருந்து நிவர்த்தியாகி நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். அக்டோபர் 11 முதல் மகர ராசியில் நேர் கதியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் சனிபகவானின் பார்வை மீனம், கடகம், துலாம் ராசிகளின் மீது விழுகிறது. சனிபகவானின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சனிபகவான் நீதிமான். சனியைப் போல கொடுப்பாரும் இல்லை சனியைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவான் நல்ல நிலையில் இருந்தால் தொழில் மேன்மையடையும். வருமானம் அதிகரிக்கும். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் சஞ்சரித்தால் பாதிப்புகள் அதிகரிக்கும்.

மகரம், கும்பம் சனிபகவான் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் வீடுகள். சனிபகவான் துலாம் ராசியில் உச்சம் பெறுகிறார். மேஷ ராசியில் நீச்சமடைகிறார். கடந்த ஓராண்டும் மேலாக மகர ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் சனிபகவான் சில மாதங்களாகவே வக்ர நிலையில் பயணம் செய்கிறார். வரும் திங்கட்கிழமையன்று அக்டோபர் 11ஆம் தேதி முதல் வக்ர நிவர்த்தியாகி மீண்டும் நேர்கதிக்கு திரும்புகிறார் சனிபகவான். சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

தொழில் காரகனும் லாப ஸ்தான அதிபதியுமான சனிபகவான் பத்தாம் வீட்டில் வக்ர நிவர்த்தியாகிறார். செய்யும் தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம். சனி பார்வைகளால் செலவுகள் அதிகரிக்கும். பண வரவும் அதிகரிக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி வீடு தேடி வரும். சனிபகவான் ஏழாம் வீட்டைபார்ப்பதால் நல்ல வரன் அமைந்தாலும் தடைகள் ஏற்படும் எனவே சனிபகவானை வணங்கி விட்டு முயற்சி செய்யவும் தடைகள் நீங்கி வரன் அமையும்.

ரிஷபம்

ரிஷபம்

ஒன்பதாம் வீட்டில் சனியுடன் குரு இணைந்திருக்கிறார். உங்களுடைய கைக்கு வர வேண்டிய பணம் வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெண்களுக்கு பதவியும் பாராட்டும் தேடி வரும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை விசயமாக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். சக ஊழியர்களிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் சுப செலவுகளும் வரும். திருமண விசயமாக வரன் தேடுபவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

மிதுனம்

மிதுனம்

அஷ்டமத்து சனி வக்ர நிவர்த்தியடைவதால் சில தடை தாமதங்கள் ஏற்படும் மன குழப்பங்கள் அதிகரிக்கும்.
பணம் வருவதில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவதன் மூலம் நோய் பாதிப்புகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் கிடைக்கும். திருமணம் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்க சனிபகவான் கோவிலுக்கு சென்று எள் தீபம் போடவும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கண்டச்சனி காலம் என்றாலும் கவலைகள் நீங்கும். சனியின் நேரடி பார்வையில் இருக்கும் உங்களுடைய பொருளாதார நிலை நன்றாக இருக்கும் சிக்கல்கள் நீங்கும். பண வரவு அதிகமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்க்கும் இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறுவதில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

சிம்மம்

சிம்மம்

சனிபகவான் ஆறாம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைவதால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த நல்ல காரியங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி நலம் ஏற்படும். இதுநாள் வரை சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

கன்னி

கன்னி


பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். சுப செய்திகள் வீடு தேடி வரும். நீண்ட நாட்களுக்கு முன்பு கொடுத்து வைத்திருந்த பணம் வீடு தேடி வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

 துலாம்

துலாம்

சனிபகவான் உங்கள் ராசியில் உச்சம் பெறுபவர் என்பதால் நன்மையே செய்வார். வக்ர நிவர்த்தி அடையும் சனியின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகத்தை தரும். அர்த்தாஷ்டம சனி காலம் என்றாலும் நோய்கள் நீங்கி உடல் நலம் பெறும். சொத்து சேர்க்கை ஏற்படும். வீடு வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சுக ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனிபகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

 விருச்சிகம்

விருச்சிகம்

சனிபகவான் மூன்றாம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைவதால் இதுநாள்வரை ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரும். திருமண யோகம் கை கூடி வரும் திடீர் திருமண யோகம் வரும். பாராட்டுக்களும் பதவிகளும் தேடி வரும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு சம்பள உயர்வும் வரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு சம்பள உயர்வுடன் கூடிய பிரமோசன் கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல செய்திகள் வீடு தேடி வரும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு பாத சனி காலம் என்பதால் கால்களில் கவனம் தேவை. ஏழரை சனியின் தாக்கம் இருப்பதால் வண்டி வாகனங்களில் பயணிக்கும் போது கவனமும் நிதானமும் தேவை. பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதை கேட்டு நடக்கவும். பெரியவர்களின் ஆலோசனை இந்த கால கட்டத்தில் அவசியம் தேவை. வெளியிடங்களில் பேசும் போது கவனம் தேவை. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதிற்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசியில் சனி சஞ்சரிக்கிறார். ஜென்ம சனி வக்ர நிவர்த்தி அடைகிறார்.
வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் தேடி வரும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் எதிர்பாராத நல்ல விசயங்களை எதிர்பாருங்கள் நன்மைகள் நடைபெறும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். பெண்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். இளையவர்களுக்கு காதல் கைகூடி வரும். பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம் குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும் மாணவர்களுக்கு கல்வி பயிலும் இடத்தில் பாராட்டுகள் அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

சனிபகவான் உங்கள் ராசி நாதன். விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
தொழில் வியாபாராத்தில் லாபம் அதிகரிக்கும். உங்களுக்கு வரவை விட அதிக செலவுகள் வரும். சொத்து பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. பண விசயங்களில் கவனமும் நிதானமும் தேவை. ஜாமீன் கையெழுத்துப்போட்டு யாருக்கும் பணம் கடனாக வாங்கித்தர வேண்டாம். வெளியிடங்களில் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. சொந்த பந்தங்கங்களினால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். திருமண சுப காரியங்களில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும்.

மீனம்

மீனம்

சனிபகவான் லாப ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. பண வரவு அபரிமிதமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். கடையை விரிவு செய்வீர்கள். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். அற்புதமான மாற்றங்கள் நிகழும். வீடு கட்ட முயற்சி செய்யலாம். புது வீடு வாங்கலாம். குடும்ப உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.
புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். கடன் பிரச்சினைகள் நீங்கும். பெரிய தொகை கைக்கு வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+