Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2023: ரிஷப ராசிக்கு தொழில் சனி..உதயநிதிக்கு அமைச்சராகும் யோகம் வருகிறது?

Subscribe to Oneindia Tamil

மதுரை: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. நவம்பர் 27ஆம் தேதி 47வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் உதயநிதி ஸ்டாலின். யோக ஜாதக அமைப்புகள் இருந்தாலும் கோச்சார ரீதியாக கிரகங்களும் சாதகமாக இருந்தால் மட்டுமே பதவிகள் தேடி வரும். ரிஷப ராசியில் பிறந்த உதயநிதிக்கு லாப ஸ்தானத்தில் வீட்டில் குரு அமர்ந்துள்ளார். சனி பகவான் பாக்ய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டிற்கு ஜனவரி மாதம் வரப்போகிறார். தொழில் சனியால் பதவி யோகம் உதயநிதிக்கு தேடி வருமா? என்று பார்க்கலாம்.

உதயநிதி ஸ்டாலின் 1977ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்திருந்திருக்கிறார். மேஷ லக்னம் ரிஷப ராசி. உதயநிதி ஜாதகத்தில் ரிஷபம் சந்திரன், மிதுனம் குரு கடகம் செவ்வாய் சிம்மத்தில் சனி கன்னியில் ராகு துலாமில் ஆட்சி பெற்ற சுக்கிரன் விருச்சிகத்தில் சூரியன் தனுசு ராசி புதன் என கிரகங்கள் ராசிகளில் வரிசையாக அமர்ந்துள்ளன.

மேஷம் லக்னம் ரிஷபம் முதல் தனுசு வரை எட்டு கிரகங்கள் வரிசையாக அமர்ந்துள்ளன. இந்த யோகம் ஒரு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும் என்பது ஜோதிடர்களின் கருத்தாகும். ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் மாலை போன்ற அமைப்பில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமைந்திருப்பது கிரக மாலிகா யோகம் என்று சொல்லப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் ஜாதக அமைப்பு

உதயநிதி ஸ்டாலின் ஜாதக அமைப்பு

நவ கிரகங்களும் தனித்தன்மையானவை. ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்துவமான இயல்புகள் இருக்கின்றன. கிரகங்கள் அனைத்தும் மற்றவற்றுடன் இணையாமல், சுயத் தன்மையுடன் செயல்படும்போது, கூட்டுபலன்கள் எதுவுமின்றி அந்த ஜாதகமே ஒரு உயரிய தனித்தன்மையுடன் இயங்க ஆரம்பிக்கும். இது கிரகமாலிகா யோகத்தில் மட்டுமே சாத்தியமாகும். ராகு, கேதுவைத் தவிர மற்ற ஏழு கிரகங்களும் வரிசையாக ஏழு வீடுகளில் இருந்தால் அது கிரகமாலிகா யோகம் எனப்படும். இந்த யோக அமைப்பில் பிறந்தவர்களுக்குப் நாற்பது வயதிற்கு மேல் பேரும் புகழும் வசதியும், உயர் அந்தஸ்தும் பெருகும்.

ஆளுமைத்திறன் கொண்ட தலைவர்

ஆளுமைத்திறன் கொண்ட தலைவர்

ஒருவரிடம் மனிதநேயம், ஆளுமைத்திறன், திறமை, மக்கள்செல்வாக்கு, வசியம், ராஜ தந்திரம், முற்போக்குச் சிந்தனை, தொண்டர்கள் இவையெல்லாம் சேர்ந்தால்தான் தலைவனுக்கு உரிய தகுதியைப் பெறமுடியும். சூரியன் ஆளுமைத்திறனுக்கும், செவ்வாய் மனிதநேயத்திற்கும், குரு சந்திரன் மக்கள் செல்வாக்கிற்கும் புதன் ராஜ தந்திரத்திற்கும் சனி தொண்டர்களின் ஆதரவையும் பெற்றுத்தரும்.

உதயநிதி ஜாதகம் சொல்வதென்ன

உதயநிதி ஜாதகம் சொல்வதென்ன

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சந்திரன், புதன், சனி ஆகிய கிரகங்களை அரசு கிரகங்கள் என்பார்கள். இந்த கிரகங்கள் அனைத்தும் ஜாதகத்தில் முழுமையான பலம் பெற்று இருந்தால், உலகம் போற்றும் உத்தமத் தலைவன் என்ற பெயர் எடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பெற முடியும்.நாலாம் பாவம் நாலாம் அதிபதி குரு சூரியன் செவ்வாய் பதவி பற்றி சொல்லும். நாலாம் பாவத்தில் சூரியன் இருந்தால் 40 வயதுக்கு மேல் ஜாதகர் நல்ல வளர்ச்சி அடைவார் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

இளைஞரணி செயலாளர்

இளைஞரணி செயலாளர்

சினிமாவில் கால் பதித்து மக்களிடம் அறிமுகமான உதயநிதிக்கு நாற்பது வயதிற்கு மேல் கட்சியில் இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்தது. தொடர்ந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார். தற்போது அமைச்சராகவேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இரண்டாவது முறையாக இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

சனி திசை காலத்தில் தேடி வந்த பதவி

சனி திசை காலத்தில் தேடி வந்த பதவி

உதயநிதி ஸ்டாலினுக்கு சனி மகாதிசை தற்போது நடைபெறுகிறது. திமுகவில் பெரிய தலைவர்கள் பலரும் இருக்கின்றனர். உதயநிதியின் வயதை விட அனுபவசாலி தலைவர்கள் திமுகவில் இருக்கின்றனர். என்றாலும் ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் என்று இப்போதே பலரும் பேசத் தொடங்கி விட்டனர். ஒரு சிலரோ உதயநிதி ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டனர்.

பத்தில் சனி பதவி யோகம் வருமா?

பத்தில் சனி பதவி யோகம் வருமா?

ரிஷப ராசியில் பிறந்த உதயநிதிக்கு சனி ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். ஜனவரி மாதம் சனி பெயர்ச்சி நிகழ உள்ளது. பத்தாம் வீட்டிற்கு சனிபகவான் தொழில் சனியாக வரப்போகிறார். பத்தாம் வீட்டில் சனி பகவான் அமர்வது இந்த சனிபகவான் பதவி யோகத்தை தர வேண்டும். ஆட்சி பெற்ற சனியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சச யோகம் செயல்படும். புது வேலை கிடைக்கும். பதவியில் புரமோசன் கிடைக்கும் என்று கூறப்படுவதால் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தேடி வரும் என்றே ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

லாப குருவின் பார்வை

லாப குருவின் பார்வை

குருபகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குருவின் பார்வை ரிஷப ராசிக்கு 3, 5, 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. மே மாதம் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கை பலமுறை முன்வைக்கப்படுகிறது. ஒருவரின் ஜாதகம் எத்தனை யோகமானதாக இருந்தாலும் அவருக்கு தசா புத்தி சரியானதாக இருக்க வேண்டும். கோச்சார ரீதியாகவும் கிரகங்கள் சரியாக அமைய வேண்டும். இந்த கிரகங்களின் பெயர்ச்சியும் பார்வையும் சாதகமாக இருந்தாலும் அவர் அமைச்சராக பதவியேற்பது முதல்வரும் அவரது தந்தையுமான மு.க ஸ்டாலின் கையில் மட்டுமே உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+