30 ஆண்டுகளுக்குப் பின் கும்பத்தில் ஆட்சி பெறும் சனிபகவான்..யாருக்கு ஜாக்பாட்? யார் வீட்டில் பணமழை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாகவே ஒருவர் 30 ஆண்டுகள் வாழ்ந்ததும் இல்லை..30 ஆண்டுகள் சனி பகவான் ராசி மண்டலத்தை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகிறது. நவ கிரகங்களில் சனி பகவான் மெதுவாக நகரும் கிரகம். இரண்டரை ஆண்டு காலம் ஒரு ராசியில் பயணம் செய்வார். சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இந்த சனி பெயர்ச்சி சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்

இந்த சனி பெயர்ச்சி காலத்தில் சனி தசை ராகு புத்தி, ராகு திசையில் சனி புத்தி நடைபெறுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசி, லக்னங்களில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் உண

மேஷம்

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலத்தில் நிறைய ஆதாயமும் நன்மைகளும் கிடைக்கப்போகிறது. காரணம் 11ஆம் வீட்டில் சனிபகவான் ஆட்சிப்பெற்று அமர்வதால் வருமானம் அதிகரிக்கும். சனி பெயர்ச்சியால் ஆதாயம், லாபத்தை தரப்போகிறது. வேலையில் புரமோசன் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். உழைப்புக்கு அதிபதி லாப வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் புரமோசன் தேடி வரும். திடீர் பண வரவு வரும். பதவி, கௌரவம், புதிய வருமான ஆதாரங்களால் பலன்கள் கிடைக்கும். லாட்டரி, ரேஸ், பங்குச்சந்தைகள் மூலம் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது.

ரிஷபம்

ரிஷபம்

சனிபகவான் உங்கள் ராசிக்கு யோகக் காரகர். பத்தாம் வீட்டில் சனிபகவான் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு. அள்ளித்தரப்போகிறார் சனிபகவான். வேலை, தொழிலில் மாற்றங்கள் ஏற்படும். சச மகா யோகம் தேடி வரப்போகிறது. தொட்டது துலங்கப்போகிறது. வாகனங்கள், சொத்து வாங்குவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு போட்டித் தேர்வு எழுதியவர்களுக்கு வெற்றி தேடி வரும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே அஷ்டமத்து சனி முடிவுக்கு வரப்போவதால் கஷ்டங்கள் காணாமல் போகப் போகிறது. நிறைய படிப்பினைகளைக் கொடுத்த சனிபகவான் பாக்ய சனி நிறைய நன்மைகளைத் தரப்போகிறார். பண வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இதுநாள் வரை குடைச்சல் கொடுத்த அதிகாரிகள் இடமாறுதலாக சென்று விடுவார்கள். உங்களுக்கு சாதகமான இடத்தில் இடமாற்ற யோகம் உண்டாகும். போராட்டத்திற்கு பின் நினைத் டாவெற்றி

துலாம்

துலாம்

அர்த்தாஷ்டம சனி முடிவுக்கு வந்து பூர்வ புண்ணிய சனி ஆரம்பிக்கிறது. துலாம் ராசிக்காரர்களுக்கு ஆசைகள் நிறைவேறும். நினைத்த காரியம் வெற்றிகரமாக நடைபெறப்போகிறது. பூர்வீக சொத்துக்கள் விற்பனை செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும். சனி பகவான் தரப்போகும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உங்களை ஏழரை ஆண்டு காலம் ஆட்டிப்படைத்த சனி பகவான் விலகப்போகிறார். ஏழரை சனி விலகுவதால் சோதனைகள் முடியப்போகிறது. மூன்றாம் வீட்டிற்கு சனி பகவான் செல்வதால் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிந்து சுபிட்சங்கள் உண்டாகப்போகிறது. கடன் நோய் எதிரிகள் தொல்லைகள் நீங்கப்போகிறது. அதிர்ஷ்டம் ஆதரிக்கும், பொருளாதார நெருக்கடிகள் நீங்கி நிதிநிலை வலுவடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+