சனியால் ஏற்படும் சங்கடம் தீர வேண்டுமா? சனிக்கிழமை இதை செய்ய மறக்காதீங்க
சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்க சில பரிகாரங்களை செய்ய வேண்டும். சனி தோஷம் நீங்க என்ன செய்யலாம் என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: சனிபகவான் நீதிமான். ஒருவருக்கு தண்டனைகள் மூலம் படிப்பினைகளைத் தருவார். சனிபகவான் ஜாதகத்தில் வலுவற்ற நிலையில் இருந்தால் பாதிப்பை ஏற்படுத்துவார். அதே நேரத்தில் சனி வலிமையாக இருந்தால் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் தருவார். சனிதோஷத்தால் ஏற்படும் பரிகாரம் நீங்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
சனிபகவான் நினைத்தால் ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார். ஆணவத்தில் ஆடினால் தலையில் தட்டிவைப்பார். சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கவும் தோஷங்கள் நீங்கவும் சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.
சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்க வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்க சனிக்கிழமையன்று சனி யந்திரத்தை வழிபட வேண்டும். இந்த யந்திரத்தை வழிபடுவதன் மூலம் சனி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

அனுமன் வழிபாடு
சனி தோஷங்கள் நீங்க சனிக்கிழமைகளில் சிவன் மற்றும் ஹனுமான் கோவிலுக்கு சென்று வரலாம். சிவ பக்தர்களுக்கும் அனுமன் பக்தர்களுக்கும் சனி தொந்தரவு தருவதில்லை என்பது ஐதீகம். சனிக்கிழமையன்று சனி சாலிசாவுடன் அனுமன் சாலிசாவையும் படிக்க வேண்டும். சனிக்கிழமை சிவ ஆலயம் சென்று வணங்கி சிவ புராணம், பஞ்சாட்சரம், சுதர்சன மூல மந்திரம், சுதர்சன அஷ்டகம் போன்றவற்றை பாராயணம் செய்வதும், சிறந்த பலன்களை கொடுக்கும்.

சனி தோஷம் நீங்க பரிகாரம்
சனிக் கிழமைகள் தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபடுவது அவசியம். பசும் பாலினைக் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும், சனிக் கிழமைகளில் சிவனை வில்வம் கொண்டு அர்ச்சித்து, பூஜை செய்வது நன்மையாக இருக்கும்.

தானம் கொடுப்பது நல்லது
சனிபகவானை சந்தோஷப்படுத்த ஒரே வழி தானம் கொடுப்பதுதான். ஏழைகளுக்கு தானம் கொடுக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கும் தானம் தரலாம். சனிக்கிழமைகளில் கருப்பு உளுந்து,நல்லெண்ணெய், கருப்பு ஆடைகள், முதியவர்களுக்கு செருப்பு, குடை போன்றவைகளை தானம் தரலாம்.

அன்னதானம்
ஒரு முறை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபட்டு வந்தால் சனி தோஷம் தீர்க்கும். குச்சனூர் சனிபகவானை வணங்கலாம். அன்னதானம் செய்வதும் நல்லது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications