Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2023: மன நிம்மதியை தரப்போகும் சனி..இந்த ராசிக்காரரின் வாழ்க்கையில் திருப்புமுனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்ப ராசியில் பயணம் செய்யப்போகும் சனி பகவான் மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனியாக தர்ம சனியாக பயணம் செய்யப்போகிறார். சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் மேஷ ராசியையும், ஏழாம் பார்வையால் சிம்ம ராசியையும், பத்தாம் பார்வையால் விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார். சனிபகவானின் பார்வையும் பயணமும் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அஷ்டம சனியாக பயணம் செய்த சனிபவான் இனி ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். இந்த சனி பெயர்ச்சியால் மிதுன ராசியில் மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் தேதி தை 3ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழப்போகிறது. சனி பகவான் தனது வீடான மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் இருந்து அவிட்ட நட்சத்திரம் 3ஆம் பாதத்திற்கு இடம் மாறுகிறார் . 2025ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார். அவ்வப்போது வக்ர கதியில் பின்னோக்கியும் சென்று வருவார் சனிபகவான்.

Sani Peyarchi Palan 2023 Tamil: Mithunam rasi sani peyarchi palan

மிதுன ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியாக இரண்டரை ஆண்டுகாலமும், அஷ்டம சனியாக இரண்டரை ஆண்டுகாலமும் மொத்தம் 5 ஆண்டு காலம் சனிபகவான் ஆட்டி படைத்து வந்தார். இனி உங்களுக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. பூர்வீக சொத்துக்களால் பிரச்சினை ஏற்பட்டு பங்காளிகள் பகையாளிகளாக மாறினார்கள். இனி பகை தீர்ந்து உறவு துளிர்க்கும். எத்தனையோ இடர்பாடுகளை கடந்து வந்திருப்பீர்கள். இதுநாள் வரை சனிபகவான் கொடுத்த சோதனைகளை தாங்கி புடம் போட்ட தங்கமாக மாறியிருப்பீர்கள். உங்களின் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கப்போகிறது. இந்த சனி பெயர்ச்சி இனி உங்கள் வாழ்க்கையை சந்தோஷம் நிறைந்ததாக மாற்றப்போகிறது.

தொட்டதெல்லாம் நஷ்டம், தொழில் வியாபாரத்தில் பிரச்சினை அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி..காணும் பக்கமெல்லாம் கடன் என தவித்து வந்த உங்களுக்கு இனி உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கி கடன் பிரச்சினையும் நீங்கப்போகிறது. மிதுன ராசியில் உள்ள மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் 3,4ஆம் பாதங்களில் பிறந்தவர்களே உங்களுக்கு பட்டறிவும் அனுபவ அறிவும் கொடுத்த பாடங்களால் மன நிம்மதி ஏற்படப்போகிறது. இனி தொட்டதெல்லாம் பொன்னாகப்போகிறது. எந்த ஒரு விசயத்தையும் யோசித்து திட்டமிட்டு முடிவு செய்வீர்கள். வீண் விரைய செலவுகள் கட்டுப்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். பழைய கடன்களை படிப்படியாக அடைப்பீர்கள்.

Sani Peyarchi Palan 2023 Tamil: Mithunam rasi sani peyarchi palan

மிதுன ராசியில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறது. எதையை பறிகொடுத்தது போல இருந்த உங்களுக்கு இனி பார்க்கும் இடமெங்கும் பரிசுகள் தேடி வரப்போகிறது. உங்களின் திறமை வெளிப்படும். உடலில் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். தோல் நோய் பிரச்சினைகள் நீங்கும். முகத்தில் வசீகரம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். சனிபகவான் பார்வை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். நல்ல வேலை கிடைக்கும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக அடிஎடுத்து வைப்பது நல்லது. பண வரவு வந்தாலும் சிக்கனமாக செலவு செய்தால் மட்டுமே கடன் பிரச்சினையை தீர்க்கமுடியும். மாணவர்கள் விளையாட்டு தனத்தை விட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

மிதுன ராசியில் உள்ள புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பெயர்சி அற்புத மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. செய்யும் தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். இரட்டிப்பு மடங்கு லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது. விட்டுப்போனவர்கள் உங்களை தேடி வருவார்கள். தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள். கையில் இருக்கும் பணத்தை கொடுத்து விட்டு தவிக்க வேண்டாம். வேலையில் இருப்பவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு தொல்லை கொடுத்த உயரதிகாரி இடம் மாறி சென்று விடுவார். பெண்களுக்கு இருந்த உடல் நல பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரப்போகிறது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருக்கடிகள் நீங்கி நிம்மதி அதிகரிக்கும். மாணவர்கள் பெற்றோரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+