Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2023 : ஏழரை முடிந்தது..நிம்மதி பெருமூச்சு.. வசந்த காலம் வரப்போகிறது!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கடந்த ஏழரை ஆண்டுகாலமாக கஷ்டப்பட்டு வேதனைப்பட்டு அல்லல்பட்டு வந்த உங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது. முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சனி அமர்கிறார். ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். தனுசு ராசிக்காரர்களின் கஷ்டங்களும் துயரங்களும் நீங்கி விடிவுகாலம் பிறக்கப்போகிறது. வாழ்க்கையில் வசந்தம் வீசப்போகிறது.

சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். தனுசு ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீட்டு அதிபதியான சனிபகவான் இனி மூன்றாம் வீட்டில் அமர்வதால் உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும். சிறு பயணங்களினால் பலன் கிடைக்கும்.

சனிபகவான் கும்ப ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானம், ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். கும்ப ராசியில் சஞ்சரிக்கும் 30 மாதகாலமும் தனுசு ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்,வருமானம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

ஏழரை சனி முடிந்தது

ஏழரை சனி முடிந்தது

கடந்த ஏழரை ஆண்டு காலம் வேலையிழப்பு, குடும்ப பிரச்சினை, வருமான இழப்பு, சமூகத்தில் அவமானம், நோய், விபத்து என பல கஷ்டங்களை அனுபவித்திருப்பீர்கள். பலரும் நிம்மதி இழந்து தூக்கம் தொலைத்திருப்பீர்கள். தனுசு ராசிக்காரர்களை கடந்த ஏழரை ஆண்டுகாலமாக ஆட்டிப்படைத்த சனிபகவான். உங்களை விட்டு விலகுகிறார். இத்தனை ஆண்டுகாலமாக சோதனைகள் மூலம் பல பாடங்களை கற்றுக்கொடுத்த சனி பகவான் இனி உங்களுக்கு நல்லதே செய்வார். உங்கள் கஷ்டங்கள் கவலைகள் நீங்கும் காலம் வந்து விட்டது. அனைத்து துயரங்களும் கஷ்டங்களும் விலகத் தொடங்கி விடும்.

மன நிம்மதி அதிகரிக்கும்

மன நிம்மதி அதிகரிக்கும்

தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு வேலையில் திருப்தியான நிலை மற்றும் விருப்பமான வேலை, எதிர்பார்த்த வருமானத்துடன் கூடிய வேலை வந்து சேரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உண்டு. வெளியூர், அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்களின் தசாபுத்தி எப்படியிருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ற தொழிலை தொடங்குங்கள்.

திருமணம் சுபகாரியம் நடக்கும்

திருமணம் சுபகாரியம் நடக்கும்

உங்கள் வீட்டில் இனி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கொண்டாட்டங்கள் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குடும்பத்தில் கல்யாணத்தில் பேசி முடிப்பார்கள். விவகாரத்து வரை சென்று கோர்ட் படியேறிய தம்பதியர் சந்தோஷமாக சமாதானம் அடைந்து ஒற்றுமையாக குடும்பம் நடத்துவார்கள். குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் சுப காரியங்கள் நடைபெறும். சம்பாதிக்கும் பணத்தை சுப விரைய செலவுகளாக செய்வீர்கள். சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் சேமித்து வையுங்கள்.

வாழ்க்கையில் வசந்தம் வீசும்

வாழ்க்கையில் வசந்தம் வீசும்

பணத்தை தொலைத்தவர்களுக்கு இனி பணம் தேடி வரும். உங்களுக்கு பணவரவு அதிகரிக்கப்போகிறது. எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். சிலருக்கு பழைய சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் கிடைக்கும். சிலர் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்களாலும், உறவினர்களாலும் நன்மைகள் ஏற்படும். பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி, நல்ல லாபகரமாக அமையும். பொருட்களை அடகு வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்கள் படிப்பு, வேலை, வெளிநாடு இவைகள் சாதகமாக இருந்து வரும்.

தைரியம் அதிகரிக்கும்

தைரியம் அதிகரிக்கும்

வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை, வேலையில் உற்சாகம் பிறக்கும். வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். எதையும் தைரியமாக சந்திக்கும் ஆற்றலும் சந்தர்ப்பமும் அமையும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும். ஆடை ஆபரணச்சேர்க்கை ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்லும் யோகம் அமையும். குடும்பத்தில் புதுவரவு உண்டு.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்

இறைவன் அருள் உங்களுக்குக் கிடைக்கப்போகிறது. நினைத்த காரியம் நிறைவேறும். புது வேலை மாற்றலாம். உடல் புத்துணர்ச்சி அடையும். வரும் பணத்தை முறையாக சேமித்தாலே கடனின்றி வாழலாம். யாருக்கும் பணம் கடன் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொடுக்கவும். இல்லாவிட்டால் கொடுத்த பணம் திரும்ப வராது. யாருக்கும் கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கடன் வாங்குவதை தவிர்க்கவும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்துங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+