Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 : கும்பத்திற்கு விரைய சனி, மீனத்திற்கு லாப சனி - பரிகாரங்கள்

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிபகவான் வரும் 24ஆம்தேதி தை 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சனிபகவான் 3,6,11 ஆம் வீடுகளில் அமரும் போது அற்புதமான பலன்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Sani Peyarchi 2020 | Mesham | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- மேஷ ராசிக்கு பலன்கள் எப்படி ?

    சென்னை: திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி தை 10ஆம் தேதி ஜனவரி 24ஆம் தேதி நிகழப்போகிறது. மகரம் ராசி சனிபகவானின் சொந்த வீடு இந்த இடப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை. இந்த சனிப்பெயர்ச்சியால் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. மீனம் ராசிக்காரர்களுக்கு லாப சனியாகவும் தொடர்வதால் என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

    நவ கிரகங்களில் சனிபகவான் நீதிமான். நியாயமாக நடப்பவர்களுக்கு சனிபகவான் எந்த சங்கடமும் தரமாட்டார். தவறு செய்பவர்களை மட்டுமே சனிபகவான் தண்டிப்பார் எனவே சனிபகவானைப்பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். சனிபகவான் தண்டனைகளின் மூலம் அனுபவ பாடங்களை கற்றுக்கொடுப்பார்.

    சனிபகவான் சரியில்லாத இடத்தில் சஞ்சரிக்கும் போது சில பரிகாரங்களை செய்தால் போதும் பலன்தரும் பரிகாரங்களும் இருக்கின்றன. சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு இறைவன், காலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு இந்த சஞ்சாரம் மற்றும் பார்வைகளால் கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி பரிகாரங்கள் என்ன என்று பார்க்கலாம்.

    ஏழரை சனி ஆரம்பம்

    ஏழரை சனி ஆரம்பம்

    கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். இதுவரை 11ம் இடத்தில் இருந்த சனிபகவான் இனி விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சாரம் செய்ய உள்ளார். சனிபகவான் மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு 2 வது இடம், 6வது இடம், 9 வது இடங்களைப் பார்க்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் அதிபதி, ராசி அதிபதியுமாவார். ஏழரையோ, அஷ்டமத்து சனியோ, கண்டச்சனியோ எதுவாக இருந்தாலும் நன்மையே செய்வார் எனவே கவலைப்படாமல் இந்த ஏழரை சனி பகவானை கடந்து விடலாம். கும்ப ராசிக்கு ஏழரை ஆரம்பிக்குதே என்று அஞ்ச வேண்டாம் இந்த ஏழரை ஆண்டு காலம் ஏற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜாதகப்படி கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் இருந்தாலோ, தசாபுத்தி நன்றாக இருந்தாலோ எந்த பாதிப்பும் வராது. இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், குடும்பத்தில் சந்தோசம், நிம்மதி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

    விரைய சனி

    விரைய சனி

    சனி பகவான் 12ல் அமர்வதால் பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். நோயாளிகளுக்கு உதவி செய்யலாம். அவர் மகரத்தில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். நாவடக்கம் தேவை.எதை பேசினாலும் பிரச்சினை வரலாம் என்பதால் வாயை மூடி பேசவும். ஈகோவை விட்டுக்கொடுங்க. குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுங்க. ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். செலவு செய்ய நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும். எதிர்பார்த்த விரும்பிய நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கடன்பட்டு பொருட்கள் வாங்க வேண்டிய நிலை வரும். வேலையில் ஊதிய உயர்வு கிட்டும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும்.

    சனியால் சங்கடம் இல்லை

    சனியால் சங்கடம் இல்லை

    பாக்கிய ஸ்தானத்தை சனி பார்ப்பதால் தந்தைக்கு நன்மை ஏற்படும். வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். அடிக்கடி மறதி மற்றும் ஞாபகசக்தி குறைந்து காணப்படும். எனவே தேவையற்ற விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பாமல் படிப்பில் கண்ணும் கருத்துமாய் இருங்க. கல்விக் கடன்கள் எளிதாக கிடைக்கும். தவறு செய்தால் மட்டுமே தண்டிப்பார். தலையில் குட்டி உங்கள் தவறை சுட்டிக்காட்டுவார். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருங்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சிக்கலை தரும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும். கும்பகோணம் அருகில் திருக்கோடிக்காவலில் சனிபகவான் பால சனியாக இருக்கிறார். அவரை வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கும்.

    லாப சனியால் பண லாபம்

    லாப சனியால் பண லாபம்

    உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் சனி அமர்வதால் சனிக்கிழமை செய்யும் செயல்கள் வெற்றி கிட்டும். லாப ஸ்தானத்தில் வரும் சனிபகவானால் இனி நன்மையே நிகழும். குழப்பம் நீங்கி நன்மையே நடக்கும். பத்தாமிடத்தில் இருக்கும் குரு பணவரவை தந்து கொண்டிருக்கிறார். இனி லாப சனி பலவித லாபங்களை தரப்போகிறார். சனிபகவானால் உங்களுக்கு வருமானம் பெருகும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடல் ஆரோக்யத்தில் சற்று எச்சரிக்கையாக இருங்க. உடலில் அடிக்கடி அசதி, சோர்வு ஏற்படும் என்பதால் நேரத்திற்கு சாப்பிடுங்க கவனம் தேவை.

    திருமணம் சுபகாரியம்

    திருமணம் சுபகாரியம்

    கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்திலும் முடியும். இது அதிர்ஷ்டகரமான சனிப்பெயர்ச்சி. புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.சேமிப்பு உயரும்.பெண்களால் லாபம் அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு உறவுகளிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. உடன் பணி புரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.
    இதுவரை வராமல் இழுத்தடித்த பாஸ்போர்ட், விசா போன்ற விஷயங்கள் சுமூகமாக அமையும். வெளிநாட்டு பயணம் அமைய வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் செழிப்பு ஏற்படும்.

    எச்சரிக்கை தேவை

    எச்சரிக்கை தேவை

    சனிபகவான் 3வதுபார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் கல்வியில் மேன்மை கிடைக்கும். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களே எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும், நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாகப் போராட வேண்டியது வரும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்தாமல் படிப்பில் கவனம் தேவை. 7வது பார்வையாக சனி பகவான் உங்களின் ராசிக்கு 5வது இடத்தை பார்வையிடுகிறார். எனவே குழந்தைகளினால் நன்மை நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சனிபகவான் பத்தாவது பார்வையாக உங்களின் ராசிக்கு 8வது இடத்தை சனி பார்வையிடுவதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை, விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை. வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் கவனமாக சென்று வருதல் வேண்டும். நாமக்கல் நகரில் உள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய பாதிப்புகள் குறைந்து மேலும் நன்மைகள் நடைபெறும். உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரக்கூடிய சனிப்பெயர்ச்சி என்பதால் செலவு செய்வதற்கு ஏற்ற வருமானத்தையும் சனிபகவான் வணங்குவார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+