ரிஸ்க் எடுக்காதீங்க.. ரொம்ப கவனமாக இருங்க.. இந்த ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி சிக்கல்தான்!
சென்னை: ஜூன் 30ம் தேதி நடக்க உள்ள சனி வக்கிர பெயர்ச்சி சில ராசிகளுக்கு எதிர்பார்க்காத பலன்களை கொடுக்க போகிறது. அதில் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு கடுமையான சவாலாக இருக்க போகிறது.
கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி இருக்கிறார். அதுதான் அந்த ராசியின் கடைசி நட்சத்திரம். இப்படிப்பட்ட நிலையில் அவர் பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். அதனால் இது வக்கிர பெயர்ச்சி. ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான். அதன்பின் அக்டோபர் 5ம் தேதி மேலும் பின்நோக்கி சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைகிறார்.

சனி பகவான் அடிக்கடி இடம் மாற கூடியவர் அல்ல. ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் அதாவது இரண்டரை ஆண்டு காலம் இருக்கும் குணம் கொண்டவர் சனி பகவான்,. ஒரு ராசியில் இருக்கிறார் என்றால் அந்த ராசிக்கு மட்டும் மெல்ல 12 ராசிகளுக்கும் நல்ல பலன்களையும் கெடு பலன்களையும் கொடுக்க கூடியவர்.
அதோடு அவ்வப்போது முன்பும், பின்னும் நகர்ந்து பலன்களை மாற்றுவார். சில சமயங்களில் ராசி ரீதியாக மாறாமல் நட்சத்திர ரீதியாக முன்னும் பின்னும் நகருவார். இப்படி சனி பின்னோக்கி நகர்வதை வக்ர பெயர்ச்சி என்று கூறுவார்கள்.
கடக ராசிக்கான பலன்; ஜூன் 30ம் தேதி நடக்க உள்ள கடக வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு எதிர்பார்க்காத பலன்களை கொடுக்க போகிறது. அவை என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம்.
இந்த சனி வக்ர பெயர்ச்சி கொஞ்சம் உங்களுக்கு ரிஸ்க்தான்.வீடு கட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிலத்தகராறு ஏற்படும். கடந்த 1 வருடம் உங்களுக்கு சிறப்பாக இருந்தது. அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றாலும் இந்த வருடம் பிரச்சனை இல்லாமல் செல்லும்.
இந்த பெயர்ச்சி மூலம் உங்களுக்கு செலவு அதிகரிக்கும். அதை சுப செலவாக மாற்றுவது உங்கள் சாதுர்யம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செலவாக மாற்றுங்கள்.
ரிஸ்க் எடுக்க வேண்டாம். சில விஷயங்களை ஆறப்போட்டு அடுத்த வருடம் கூட செய்யுங்கள். பாலியல் ரீதியான விஷயங்களில் கவனம். சில மாதங்களுக்கு ஆசைகளை அடக்கவும். பெண்கள் விஷயத்தில் உஷார்.
யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
நல்ல விஷயங்கள்: ஆனால் முழுக்க முழுக்க கெட்ட விஷயங்கள் மட்டும் நடக்கும் என்று நினைக்க வேண்டாம். ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும். இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை சோதித்து பார்த்து பின்னர் நலன்களை கொடுப்பார்.
பரிகாரம்: உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு கறிவிருந்து வைக்கவும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications