சந்திரனும் சனியும் ஒருவரை ஒருவர் பார்த்தாலோ... கூட்டணி சேர்ந்தாலோ....

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திங்கட்கிழமையான இன்று சந்திரன் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி அறிந்து கொள்வோம். சந்திரனுடன் சனி சேர்ந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்றும் அறியலாம்.

சந்திரன்தான் காதல் செய்ய தூண்டுபவர். இவர் மனிதர்களின் மனதை ஆள்பவர். சந்திரன் சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதலுக்கு மனதிற்கும் எந்த அளவிற்கு தொடர்பு உண்டோ அதே அளவு காதலுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு உண்டு.

காதல் மட்டும் இருந்தால் போதுமா? அந்த காதல் கனிந்து திருமண பந்தத்தில் இணைய வேண்டாமா? அதற்கு சந்திரனும், சனியும் ஜாதகத்தில் எப்படி இருக்கின்றன என்று பார்க்கலாம். ஏனெனில் மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் தட்டி போகிறது என்று கவலைப்படும் பெற்றோர்களும், லவ் செட் ஆகலையே என்று கவலைப்படுபவர்களுக்காவும்தான் இந்த கட்டுரை.

காதல் தீ

காதல் தீ

தீ பிடிக்க தீ பிடிக்க முத்தம் கொடுடா என்பார்கள். தைரியம் தரும் செய்வாய் செவ்வாய் வீரத்திற்கு உரியவர். காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். இவர் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. தாம்பத்ய உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.

நரம்பின் நாயகன்

நரம்பின் நாயகன்

புதன்தான் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.

காதலின் காந்த சக்தி

காதலின் காந்த சக்தி

சுக்கிரன்தான் காதலின் ஏகபோக பிரதிநிதி. சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான உடல் இச்சை, காம சுகத்துக்கு அதிபதி ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர். ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர்.

யாருடன் கூட்டணி

யாருடன் கூட்டணி

காதல் வேட்கை அதிகம் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை உள்ள ஜாதகருக்கு காதல் வேட்கை அதிகம் இருக்கும். சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால்.காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள்.

காதல் வேட்கை

காதல் வேட்கை

ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.

மனம் மாறும் காதலர்கள்

மனம் மாறும் காதலர்கள்

மனம் மாறும் காதலர்கள் சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் வயப்படுத்துவது ஈஸி. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது.

சனியும் சந்திரனும்

சனியும் சந்திரனும்

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் சனி சேர்ந்து இருந்தாலோ... ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோ இருந்தாலோ அவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் இவர்களை குரு பார்த்தால் பாதிப்புகள் குறையும். சனி-சந்திரன் சேர்க்கை, பார்வை, லக்னாதிபதி பலம் குறைவு ஆகியவற்றால் திருமணத்திற்கு முன்பே தாம்பத்ய உறவு ஏற்படும்.

பரிகாரம்

பரிகாரம்

சந்திரன் சனி சேர்க்கை, பார்வை திருமண தடங்கலை ஏற்படுத்தும். திருமணம் நிச்சயம் வரை சென்று கூட நிற்கும். சிலருக்கு திருமணம் தாமதமாகும். ஜாதகத்தில் சந்திரன் பாதிப்பு உள்ளவர்கள் திங்களூர் சென்று பரிகாரம் செய்து வரலாம். சோமவார விரதம் இருக்கலாம். சங்கடகர சதுர்த்தி நாளில் விநாயகரை தரிசிக்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Moon tells about the love and affection of mother, father, entire family, land for farming, love, kindness, mental peace, and the person's nature.The afflicted Moon or Chandra would bring much mental agony and restlessness to the person besides the presence of many obstacles around due to planet Saturn.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற