சரஸ்வதி யோகம்...இந்த நாளில் சரஸ்வதியை வணங்கினால் பேசியே ஜெயிக்கலாம்
சகல கலைகளையும் கற்று தேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு அமையும்.
மதுரை: பேசியே காரியம் சாதித்து விடுவார்கள் சிலர்... அரசியல் தலைவர்கள் சிலர் பேசி பேசியே ஆட்சியை பிடித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரஸ்வதி யோகமும் பத்திர யோகமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை அனைத்தும் அமையும். சியாமளா நவராத்திரி கொண்டாடப்படும் இந்த நாளில் சரஸ்வதி யோகம் என்றால் என்ன அந்த யோகம் யாருக்கு அமையும் என்று பார்க்கலாம்.
கோடி கோடியாக செல்வம் இருந்தாலும் கல்விச்செல்வம் இருந்தால் அதன் மதிப்பே தனிதான். அறிவால் எதையும் சாதிக்கலாம். பிறந்த ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருந்தால் கல்வி செல்வம் அதிகரிக்கும் யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
வித்யாகாரகன்,கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை கிடைக்கும்.

புதாத்திய யோகம்
ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து அமையப் பெறுவது புதாதித்ய யோகம். இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். புதன் சூரியனுக்கு பின் அஸ்தங்கமாகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே சிறந்த பலனளிக்கிறது. மேலும் சூரியனை கடந்து புதன் நிற்கும்போது அது சுபவெசி யோகமாகவும் ஆகிறது.

சரஸ்வதி யோகம்
தனகாரகன் குரு களத்திரகாரகன் சுக்ரன் வித்யாகாரகன் புதன் ஆகிய மூவரும் லக்ன கேந்திரம், திரிகோணம் அல்லது இரண்டாமிடம் ஆகிய இடங்களில் இருந்தால் சரஸ்வதி யோகம் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் போற்றுகின்றன. இந்த யோகம் பெற்றவர்கள் ஆயகலைகள் 64ல் குறைந்தது 6,7 கலைகளிலாவது பாண்டித்தியம் பெற்று இருப்பார்கள்.

கல்வி திறமை பளிச்சிடும்
சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோணத்திலோ அல்லது 2ம் வீட்டிலோ அமைந்து, குருபகவானும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ நட்பு வீட்டிலோ அமையப் பெற்றால், சரஸ்வதி யோகம் உண்டாகிறது. பெயரிலேயே சரஸ்வதியிருப்பதால் இந்த யோகத்தால் நல்ல கல்வியாற்றல் தேவைக்கேற்ற செல்வம், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலை யாவும் உண்டாகும்.

பத்திர யோகம்
வித்யாகாரகன்,கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும். பத்திர யோகம் உள்ளவர்கள் கற்றவர்களின் சபையில் ஒரு முக்கியமான பங்கு வகிப்பவராக இருப்பார். பலருக்கு ஆலோசனை வழங்கும் திறன் இருக்கும்.

பேச்சில் திறமைசாலிகள்
பத்திர யோகம் அமையப்பெற்றவர்கள் தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார், கல்வி அறிவு மிகச் சிறப்பாக இருக்கும், கணிதத்தில் மேதையாக இருப்பார். பேச்சால், வாக்கால் முன்னேற்றம் ஏற்படும்.
வக்கீல் பணியில் திறமைசாலியாக இருப்பார். சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய அளவிற்கு உன்னதமான நிலை உண்டாகும். சகல கலைகளையும் கற்று தேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு அமையும்.

வசந்த பஞ்சமியில் வணங்குவோம்
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருந்தால் வித்யா யோகம். வித்தை, கல்வி, புகழ் கிடைக்கும். பிறந்த ஜாதகத்தில் 1, 2, 4, 5, 9 ஆகிய வீடுகள், அவற்றின் அதிபதிகள் பலம் பெறுவது முதல்தர கல்வி யோகமாகும்.
இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். இந்த சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் வசந்த பஞ்சமி நாளில் கல்வி கடவுளான சரஸ்வதியை வணங்கி சரஸ்வதி யோகத்தை பெற்று சிறப்பாக வாழ்வோம்.

மதுரை மீனாட்சி
வித்யாகாரகனின் அம்சமாக திகழும் மதுரை மீனாக்ஷி அம்மன் ராஜ மாதங்கி எனும் சியாமளாவாகவும் திகழ்கிறாள். மதுரை மீனாட்சியை வணங்கி வந்தால் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதோடு சிறந்த கல்வி மற்றும் கலை ஞானமும் பெருகும். இன்று முதல் ஆரம்பிக்கும் சியாமளா நவராத்திரி நன்னாளில் சியாமளா தேவியை வணங்கி கல்வி கடவுளான சரஸ்வதியில் அருளோடு சரஸ்வதி யோகத்தையும் பெறலாம்.












Click it and Unblock the Notifications