For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து விழா - நீள்முடி கிரீடம் அணிந்து அருள்பாலித்த நம்பெருமாள்

வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் நீள் முடி கீரிடம்,ரரத்தின அபயஹஸ்தம்,திருமார்பில் லட்சுமி பதக்கம்,கர்ண பூசனம்,பவளமாலை,அடுக்கு பதக்கம், சூரிய பதக்கம் அலங்காரத்தில் பக்தர்களுக்

Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியதை அடுத்து பகல்பத்து விழாவின் முதல்நாளான்று நம்பெருமாள் நீள்முடி கிரீடம், ரத்தின அபயகஸ்தம் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திங்கட்கிழமையன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

Srirangam Ranganathar Temple pagal pathu vizha Namperumal blessed with long crown

பகல்பத்து நிகழ்வின் முதல் நாளான செவ்வாய்கிழமை காலை நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் மூலஸ்தானத்தில் இருந்து நீள்முடி கிரீடம், ரத்தின அபயகஸ்தரம், பவளமாலை, திருமார்பில் லட்சுமி பதக்கம், சூர்யபதக்கம் மற்றும் முத்து மாலை உள்ளிட்ட திருவாபரணங்களை சூடிய படி ஆழ்வார்கள் புடைசூழ புறப்பட்டு, அர்ச்சுன மண்டபம் சென்றடைந்தார். அங்கு எழுந்தருளிய நம்பெருமாள் மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதித்தருளினார். மாலை அங்கிருந்து புறப்பட்ட நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Srirangam Ranganathar Temple pagal pathu vizha Namperumal blessed with long crown

உற்சவத்தின்போது ஸ்ரீபாதம் தாங்கிகள் மற்றும் ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியினர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். நடப்பாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நம்பெருமாள் புறப்பாட்டின்போது, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாளை காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை பக்தர்கள் தரிசித்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டு, பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்தனர்.

மார்கழி நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் #Margazhi #Thiruppaavaiமார்கழி நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் #Margazhi #Thiruppaavai

Srirangam Ranganathar Temple pagal pathu vizha Namperumal blessed with long crown

பகல்பத்து வைபவத்தின் 10ஆம் நாளான டிசம்பர் 24ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிப்பார். பின்னர் இராப்பத்து வைபத்தின் முதல் நாளான 25ஆம் தேதியன்று அதிகாலை பரமபதவாசல் திறப்பு எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் 21 நாட்களும் மூலவர் பெருமாள் முத்தங்கியுடன் சேவை சாதித்தருளுவார். நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

English summary
Following the commencement of the Vaikunda Ekadasi festival at the Srirangam Ranganathar Temple, Namperumal awoke on the first day of the festival in the garland of long hair and jewels and served the devotees. Only Sripadam bearers and Srivaishnava sects participated in the festival. During the Namperumal departure, the devotees were denied permission due to the current corona threat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X