ஆடி அமாவாசை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஐந்து கருட சேவை - கருடவாகனத்தில் கள்ளழகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 5ஆம் நாள் திருவிழாவில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெற்றது.
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழாவின் ஐந்தாம் நாளான சனிக்கிழமையன்று ஐந்து கருட சேவை நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கோவிந்தா முழக்கமின்றி கருட வாகனத்தில் எழுந்தருளினார் ஆண்டாள் நாச்சியார். மதுரையை அடுத்த அழகர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கள்ளழகர் கருடவாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்ற பெருமைக்குரியது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரத்தை முன்னிட்டு ஆடிப்பூர திருவிழா நடைபெறும்.
ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் சஞ்சரிக்கும் போது பூர நட்சத்திரம் தினத்தில் துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் தெய்வ குழந்தை கண்டெடுக்கப்பட்டார். ஆடியில் பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் அவதார தினத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களிலும் திருவாடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.

ஆண்டாள் கோவில்
மகாவிஷ்ணுவின் 108 திவ்விய தேசங்களில் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் தலமாகும். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். இதனை நினைவு படுத்தும் விதமாக, ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாள்களையும் தரிசிக்கலாம்.

சூடிக்கொடுத்த சுடர்கொடி
கோவில் நந்தவனத்தில் தாம் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தாம் சூடிப்பார்த்து இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பாள் ஆண்டாள். பிறகு மாலையைக் கழட்டி, பூஜைக்கு கொடுத்து விடுவாள். அந்த மாலைகளை ஏற்றுக்கொண்டவர் பெருமாள்.

சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்
இறைவனையை விரும்பி மணந்து அவரோடு ஐக்கியமானார் ஆண்டாள் நாச்சியார். வைணவர்களின் முக்கிய தலமாக இந்தக் கோயில் இன்றைக்கும் போற்றப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். பொதுவாக கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தடைபட்ட திருமணங்கள் நடைபெறும்
திருமணமாகாத பெண்கள் துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி, பின் அதனை வாங்கித் தம் கழுத்தில் அணிந்து கொண்டு, அருகிலிருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வந்து, பிறகு கிணற்றினுள்ளே பார்த்துவிட்டு, மீண்டும் ஆண்டாளிடம் வந்து வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுபவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் தடைபட்ட திருமணங்கள் உடனே நடக்கின்றன.

ஆடிப்பூரம் திருவிழா
ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா இந்த ஆண்டு கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கொரோனா காலமாக இருப்பதால் அரசு உத்தரவுப்படி கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வீதி உலா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. கோவிலுக்குள்ளேயே ஆண்டாள் ரங்கமன்னாருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

ஆடிப்பூரம் திருவிழா
ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா இந்த ஆண்டு கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கொரோனா காலமாக இருப்பதால் அரசு உத்தரவுப்படி கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வீதி உலா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. கோவிலுக்குள்ளேயே ஆண்டாள் ரங்கமன்னாருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

ஐந்து கருட சேவை
5ஆம் நாள் திருவிழாவில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் கருட சேவை நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மாநிலங்களிலிருந்து வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.

ஆண்டாள் மடியில் ரங்கமன்னார்
ஆடிபூரத்திருவிழாவின் ஏழாம் நாளன்று ரங்கமன்னார் சுவாமி, ஆண்டாளின் மடியில் சயனித்திருப்பார். இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. தம்பதியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடியதாகும். புதன்கிழமையன்று ஆடிப்பூரம் நடைபெற உள்ள நிலையில் கோவிலுக்குள் தங்கத் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளழகர் கோவிலில் கருடசேவை
மதுரையை அடுத்த அழகர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கள்ளழகர் கருடவாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார். கோவில் உள் பிரகாரத்திலேயே கருட வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளினார். பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. தொடந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் திருக்கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி, வண்ண மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் சுவாமிக்கு சாத்தப்பட்டிருந்த மாலை பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் சாத்தப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பக்தர்கள் இன்றி அரசு வழிகாட்டுதல்படி இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications