சுபகிருது தமிழ் புத்தாண்டில் பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும்..காதல் திருமணம் அதிகம் நடக்குமாம்
சுபகிருது தமிழ் புத்தாண்டில் பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும் என்றும் காதல் திருமணங்கள் அதிகம் நடைபெறும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.
சென்னை: சுபகிருது தமிழ் புத்தாண்டில் காதல் திருமணங்கள் அதிகம் நடைபெறும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. இதே போல இந்த ஆண்டில் பெண் குழந்தைகளும் அதிகம் பிறக்குமாம். சுபிட்சங்கள் நிறைய ஆண்டாக சுபகிருது ஆண்டு அமைந்துள்ளது. சுபகிருது என்றாலே நற்செய்கை என்று பொருளாகும். கிரகங்களின் பயணத்தால் இந்த ஆண்டு என்னென்ன நடைபெறும் என்று பொது பலனைப் பார்க்கலாம்.
மங்களகரமான சுபகிருது தமிழ் புதுவருடம் சித்திரை மாதம் 1ஆம் தேதி வியாழக்கிழமை சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறக்கிறது. மேஷ ராசியில் பகவான் சூரிய பகவான் உச்சம்பெற்று சஞ்சரிக்கும் போது மங்களகரமான சுபகிருது வருடம் பிறக்கிறது.
ஆண்டு பிறக்கும் போது கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மேஷ ராசியில் சூரியன், ராகு, புதன், சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்தில் சந்திரன், துலாம் ராசியில் கேது, மகர ராசியில் சனிபகவான், கும்ப ராசியில் செவ்வாய் சுக்கிரன், மீன ராசியில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
லக்னாதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் சேர்ந்து பத்தாம் இடம் இருந்து சந்திரன் பார்வை பெறுவதால் இந்த ஆண்டு அனைத்து துறைகளிலும் தொழில் விருத்தியாகும். அலங்காரப் பொருட்கள் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இரண்டாம் இடத்திற்கு உரிய புதன் 12ஆம் இடம் சூரியன் ராகுவுடன் சேர்ந்து கேது பார்வை பெறுவதால் இந்த ஆண்டு தனிக்குடித்தனங்கள் அதிகரிக்கும் மக்கள் ஆடம்பர செலவுகளை அதிகமாக செய்வார்கள்.

நோய்கள் நீங்கும்
மூன்றாமிடம் குரு சனி பார்வை பெற்று மூன்றாம் இடத்துக்குரிய சந்திரன் நான்காமிடம் அமர்ந்து சந்திரனை செவ்வாய் சுக்கிரன் கிரகங்கள் பார்ப்பதால் மக்கள் நோய் நொடிகள் இன்றி தைரியமாக வெளியே சுற்றுவார்கள். 4-ஆம் இடம் வளர்பிறை சந்திரன் அமர்ந்து செவ்வாய் சுக்கிரன் கேது பார்வை பெறுவதால் இந்த ஆண்டு காதல் திருமணங்கள் அதிகரிக்கும் அதிக வீடு கட்டுவார்கள் ஜவுளி தொழில் சிறப்படையும்.

பெண்குழந்தை பிறப்பு அதிகரிக்கும்
ஐந்தாமிடம் குரு பார்வை பெற்று ஐந்தாம் இடத்துக்குரிய புதன் பகவான் ராகுவுடன் சேர்ந்து பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால் இந்த ஆண்டு பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும் செயற்கை கருத்தரித்தல் மூலம் அதிக குழந்தைகள் பிறக்கும்.

திருமண சுபகாரியங்கள்
ஆறாம் இடம் கேது இருந்து ஆறாம் இடம் சனி சூரியன் புதன் ராகு ஆகிய கிரகங்கள் பார்ப்பதால் இவ்வருடமும் ஓரளவு தொற்றுநோய்கள் பரவும் காற்றின் மூலம் பரவும் நோய்கள் மூலம் நோய்க் கிருமிகள் தொற்று நோய்கள் பரவும். ஏழாமிடம் குரு பார்வை பெறுவதால் இந்த ஆண்டு திருமண சுபகாரியங்கள் மிக அதிகமாக நடைபெறும் பல வருடங்களாக திருமண முயற்சி செய்பவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும்.

பண மதிப்பு உயரும்.
8ஆம் இடத்திற்குடைய குரு பதினொன்றாம் இடத்தில் ஆட்சிபெற்று சனி பார்வை பெறுவதால் இந்த ஆண்டு நோயினால் உண்டாகும் மரணங்கள் குறையும் மழை அதிகரிக்கும் தண்ணீரில் பயிர்கள் நாசம் ஆகும். ஒன்பதாம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு உயரும் தொழில் துறையில் நல்ல வளர்ச்சி உண்டு.

விவசாயம் செழிக்கும்
பத்தாமிடம் செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருப்பதால் விவசாயம் செழிக்கும் நீர்நிலைகள் நிறைந்து இருக்கும் தண்ணீர் பஞ்சம் நீங்கும் தண்ணீரினால் பயிர்கள் நாசம் ஆகும். பதினொன்றாம் இடம் குரு பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் வங்கித்தொழில் சிறப்படையும். ஜூன் மாதம் வரை தங்கம் வெள்ளி விலை உயர்ந்து இருக்கும் அதன்பிறகு விலை படிப்படியாக குறையும்.

மூன்று புயல்கள் உருவாகும்
12ஆம் இடம் சூரியன் புதன் ராகு இருந்து கேது பார்வை பெறுவதால் மூன்று புயல்கள் உருவாகும் பயிர் சேதம் அதிகமாகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் திடீரென்று அதிகமாக குறையும் கோவில் சொத்துக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் ஆன்மீக காரியங்களில் உறுதியாக சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும் மக்களின் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications