Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தை கிருத்திகை: முருகனுக்கு விரதம் இருந்தால் திருமணத்தடை நீங்கும் புத்திரபாக்கியம் கிடைக்கும்

திருமணத்தடை,புத்திரபாக்கியத்தடை நீங்க தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தை கிருத்திகை தினத்தில் விரதமிருந்து முருகனை வணங்கினால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும். திருமண தடை நீங்கும், பிள்ளை இல்லாத தம்பதியனருக்கு மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று தை கிருத்திகை முருகனை மனதால் நினைத்து வழிபட்டாலும் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே திருமணம் நடைபெற வேண்டும், கடவுள் அருளால் பிள்ளைச் செல்வம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஏதாவது ஒரு தடையோ, தோஷமோ இருந்தால் இந்த இரண்டுமே அமையாது. முருகன் அருள் இருந்தால் நிச்சயம் தடை நீங்கி சுப காரியம் நடைபெறும் என்பது நம்பிக்கை. தை கிருத்திகை நாளில் முருகனுக்கு விரதம் இருந்தால் அழகன் முருகனைப் போல கணவனும், தமிழ்கடவுள் முருகனைப் போல பிள்ளையும் பிறக்கும் என்பது சத்திய வாக்கு.

உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை என முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் தைக்கிருத்திகையும் விழாவும் ஒன்று.

ஆறுமுகப்பெருமான்

ஆறுமுகப்பெருமான்

சஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. சரவணப் பொய்கையில் தாமரை மலரில் மிதத்து வந்த முருகனை ஆறு கார்த்திகைப்பெண்கள் எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றதாக கூறுகிறது ஸ்கந்த புராணம். கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

முருகனுக்கு உகந்த கிருத்திகை

முருகனுக்கு உகந்த கிருத்திகை

ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக தை கிருத்திகை, தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

வெற்றி தரும் கார்த்திகை விரதம்

வெற்றி தரும் கார்த்திகை விரதம்

கார்த்திகை விரதத்தினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றி நாரதர் தேவரிஷி என்ற பெரும் பேற்றினைப் பெற்றார். திரிசங்கு, பகீரதன், அரிசந்திரன் ஆகியோர் பேரரசர்கள் ஆனார்கள். விரத தினத்தன்று கந்த சஷ்டி, கந்தபுராணம், சண்முக கவசம், கந்தர் கலிவெண்பா உள்ளிட்ட முருகனைப் பற்றியவற்றை பராயணம் செய்யலாம். இவ்விரத முறையினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுவதால் வாழ்க்கையின் பெரும் வெற்றிகளைப் பெறலாம்.

 திருமணம் புத்திரபாக்கியம்

திருமணம் புத்திரபாக்கியம்

வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள பிள்ளைகளை அருளுவார் முருகப்பெருமான்.

மழலைச் செல்வம் மடியில் தவழும்

மழலைச் செல்வம் மடியில் தவழும்

திருமணம் ஆகியும் நீண்ட நாட்கள் பிள்ளைச் செல்வம் இல்லாத பெண்மணிகள் தமிழ் மாதத்தில் பத்தாவது மாதமான தை கிருத்திகையில் தமிழ்கடவுள் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும் கட்டாயம் குழந்தையும் பிறக்கும் என்பதைத்தான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று கூறினார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தப் பழமொழி, தை பொங்கலோடும் தொடர்புடையது!

வேண்டிய வரம் கிடைக்கும்

வேண்டிய வரம் கிடைக்கும்

தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது. இது உயர்வாகவும் கருதப்படுகிறது.

செவ்வாய்க்கு அதிபதி முருகன்

செவ்வாய்க்கு அதிபதி முருகன்

தை கிருத்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியவை எல்லாம் கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் தை கிருத்திகை நாளில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தைக் கிருத்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகளும் பிரச்னைகள் நீங்குவதோடு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+