ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் : உற்சவர்களுக்கு மூலிகை திரவியங்களால் அபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பவித்ரோற்சவ விழா தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 நாட்கள் நடைபெறும் பவித்ர உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி உற்சவர்களுக்கு மூலிகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. திருமலையில் ஏழுமலையானுக்கு நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 1463-ம் ஆண்டு சாளுவ மல்லைய்யா தேவராஜா எனும் அரசர் இந்த பவித்ரோற்சவ வழிபாட்டு முறையை தொடங்கி வைத்தார். தெலுங்கில் ஸ்ராவண மாதத்தில் வரும் ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய 3 நாட்களில் இவ்விழா இன்றுவரை ஆகம சாஸ்திரங்களின்படி நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து 157 கல்வெட்டுகள் கோயிலில் பதிக்கப்பட்டுள்ளன. இதனை தோஷ நிவாரண உற்சவம் என்றும் அழைக்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும், மற்றும் வருடாந்திர பூஜைகளில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக பவித்ரோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. அதன்படி மூன்று நாட்கள் நடைபெறும் பவித்ர உற்சவத்திற்கான அங்குரார்ப்பணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் சேனாதிபதி கோயிலில் ஊர்வலமாக ரங்கநாதர் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் புற்றுமண் சேகரிக்கப்பட்டு அங்குரார்பண பூஜைகள் நடைபெற்றன.

பவித்ரோற்சவம்

பவித்ரோற்சவம்

பவித்ரோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை உற்சவர்கள் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, அங்கு உற்சவர்களுக்கு பால், தேன், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உட்பட பல்வேறு வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் தீப, தூப, கற்பூர ஆரத்தி ஆகிய சமர்ப்பணங்கள் உற்சவ மூர்த்திகளுக்கு நடைபெற்றன.

பவித்ர மாலைகள்

பவித்ர மாலைகள்

இதையடுத்து நெய்வேத்தியம் செலுத்தப்பட்டு யாகசாலையில் பவித்ர மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி, அதிகாரிகள் கலந்து கொண்டனர். பவித்ரோற்சவம் 2வது நாளான இன்று பவித்ர மாலைகள் மூலவருக்கும், உற்சவருக்கும், ஆனந்த நிலையம், கொடிமரம், யோகநரசிம்மர், வகுலமாதா சன்னதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமர்ப்பிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை யாக பூர்ணாஹூதியுடன் பவித்ர உற்சவம் நிறைவு பெறுகிறது.

ஆர்ஜித சேவைகள் ரத்து

ஆர்ஜித சேவைகள் ரத்து

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஆர்ஜித சேவைகள் 3 நாட்களும் ஒளிபரப்பாகாது. அதற்கு பதிலாக பவித்திர உற்சவம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். இந்த 3 நாட்களும் திருமலையில் ஏழுமலையானுக்கு நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோ சாலையில் கோ பூஜை

கோ சாலையில் கோ பூஜை

திருப்பதி கோசாலையில் வருகிற 30ஆம் தேதி கொரோனா நிபந்தனைகளுடன் கோ பூஜை நடக்கிறது. இந்த நாளில் பக்தர்கள் பசுகளுக்கு பூஜை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நிபந்தனைகளுடன் கோபூஜை நடைபெற உள்ளதால் பக்தர்களுக்கு கோசாலையில் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனின் முன்பதிவு

ஆன்லைனின் முன்பதிவு

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று 3வது அலை பரவும் அபாயம் உள்ளதால் இலவச தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசி மாதம் விரைவில் வர உள்ளதால் கூடுதல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரம்மோற்சவம்

பிரம்மோற்சவம்

கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு கடந்த ஆண்டு ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் ஏகாந்தமாக நடைபெற்றது. ஏகாதசி, பவுர்ணமி நாட்களில் மட்டும் சாமி வீதி உலா நடைபெறுகிறது. நடப்பாண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிப்பதால் பிரம்மோற்சவ விழாவை காண பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+