• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றம் - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

|

தூத்துக்குடி: உலகப் பிரசித்திபெற்ற, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 436ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

பனிமயமாதா பேராலயம் சுமார் 458 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை திருவிழா நடக்கும். இந்த ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

Tuticorin Panimaya Matha church festival begins with flag hoisting

தூத்துக்குடியிலுள்ள பனிமயமாதா தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். 436வது ஆண்டாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

மீனவர்களால் ஏழு கடல்துறை அடைக்கலத்தாய் என அழைக்கப்படும் மாதா பேராலயத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறும். நேற்று மாலை இந்த தேவாலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் கொடியுடன் மக்கள் பேரணியாகச் சென்றனர். நேற்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 6 மணிக்கு 2–வது திருப்பலியும் நடந்தது.

காலை 7.30 மணிக்கு பி‌ஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த கொடி பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் பி‌ஷப் இவோன் அம்புரோஸ் அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது மக்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் புறாக்களை பறக்க விட்டனர்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகம் சார்பில் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இழுவை கப்பல் மூலம் ஒலி எழுப்பப்பட்டது. வண்ண புகையும் வெளியிடப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் வண்ணமயமாக காட்சி அளித்தது.

இந்த விழாவில் பேராலய அதிபர் மற்றும் பங்கு தந்தை லெரின் டிரோஸ், பங்கு தந்தைகள், கீதாஜீவன் எம்.எல்.ஏ., கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மக்கள் நேர்ச்சையாக கொண்டு வந்த பால், வாழைப்பழம் ஆகியவற்றை கொடிமரத்தின் அடியில் வைத்து வணங்கினர். சிலர் சிறு குழந்தைகளையும் கொடி மரத்தின் அடியில் வைத்து ஆசி பெற்றனர். கொடியேற்றம் முடிந்தவுடன் நேர்ச்சையாக கொண்டு வந்த பழம், பால் உள்ளிட்ட பொருட்களை மக்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர். மதியம் 12 மணிக்கு பாதிரியார் விக்டர் லோபோ தலைமையில் அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று நடந்த கொடியேற்ற விழாவில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த திருவிழாவுக்கான பாதுகாப்புப் பணியில் 2,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 60 சிசிடிவி கேமிராக்கள் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பல இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வெளியூர், வெளிநாடுகளில் வசித்துவரும் மக்கள் தூத்துக்குடி திரும்பியுள்ளனர். திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், இலங்கை சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்தும் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பாக்கப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்துக்குப் பிறகு நடைபெறும் திருவிழா என்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

lok-sabha-home

 
 
 
English summary
Tuticorin Panimaya Matha church festival kick started on thursday with the flag hoisting ceremony.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more