For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாஸ்து நாளில் தோஷம் தீர வாஸ்து பகவானுக்கு ஹோமம்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து நாளான இன்று வாஸ்து ஹோமத்துடன் தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெற்றது.

Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து நாளான இன்று 22.08.2018 புதன்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை, வாஸ்து ஹோமம் நடைபெற்றது.

வாஸ்து தோஷங்களால் ஏற்படும் தடைகள் குறையவும், வாஸ்து பிரச்சனைகளால் ஏற்படும் போராட்டங்கள் நீங்கி மன உளச்சலில் இருந்து வெளியேறி வாழ்க்கை பிரகாசமாக வாழ வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு சாந்தி பூஜைகள் நடைபெற்றது.

தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன், அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவ பெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி சயன கோலத்தில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து என்கிற வார்த்தைக்கு வஸ்து என்று பொருள். வஸ்து என்பது நாம் வசிக்கும் பூமி, நிலம் மற்றும் அதில் உள்ள பொருகளாகும். வஸ்துவில் இருந்து வந்தது தான் வாஸ்து எனலாம். பூமி, நிலம் போன்ற பொருள்களில் இருந்து கிடைக்கும் மண், கல், சிமெண்ட், இரும்பு, மரம் போன்ற வஸ்துக்களை கொண்டு, நாம் நமக்காக இருப்பிடம் அமைத்து கொள்ள விரும்பும் போது நாம் பார்ப்பது தான் வாஸ்து சாஸ்திரம் ஆகும்.

கட்டடம் கட்ட பூஜை

கட்டடம் கட்ட பூஜை

கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும். இந்த வகையில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம்.

வாஸ்து நாளில் பூஜை

வாஸ்து நாளில் பூஜை

ஆவணி மாதம் 6ஆம் தேதியான இன்று வாஸ்து நாளாகும். இந்த நாளில் வாஸ்து தோஷங்களால் ஏற்படும் தடைகள் குறையவும், வாஸ்து பிரச்சனைகளால் ஏற்படும் போராட்டங்கள் நீங்கி மன உளச்சலில் இருந்து வெளியேறி வாழ்க்கை பிரகாசமாக வாழ ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் வாஸ்து தேங்காய்,வாஸ்து பொம்மை மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

ஸ்ரீதன்வந்திரி பகவான் அபிஷேகம்

ஸ்ரீதன்வந்திரி பகவான் அபிஷேகம்

துன்பங்கள் துயரங்கள் அகலவும், உடல் நோய் மன நோய் நீங்கவும், வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும், இன்று காலை 10.00 மணி முதல் மஹா தன்வந்திரி ஹோமமும் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெற்றது. இதில் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், வாசனாதி திரவியங்கள், பசுநெய், வெல்லம், சுக்கு, மிளகு, திப்பிலி, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள் சேர்க்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

English summary
Vasthu day special homam for Vasthu santhi homam and nellipodi abishegam at sri dhanvanthiri arokya peedam Walajapet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X