• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

இதுதான் கலியுகமா? இப்படித்தான் இருக்குமா - வேத வியாசரின் பாகவத புராணம் சொல்லும் சேதி

|

நம் நாட்டில் வாழ்ந்த ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே தீர்க்க தரிசனமாக அறிந்து அதை ஓலைச்சுவடிகளில் குறித்து வைத்திருந்தனர். வேத வியாசர் எழுதிய பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.

அவை இப்போது நடை முறையில் இருக்கும் சில விஷயங்களுடன் பொருந்திப் போகின்றன என்பதுதான் ஆச்சரியத்தை அளிக்கிறது.

துன்பங்கள் நிறைந்தது கலியுகம். இந்த துன்பங்களில் இருந்து காத்துக்கொள்ள நமக்கு இறைவன் அருள் தேவை. பக்திதான் நம்மை துன்பங்களில் இருந்து பாதுகாக்கும். தியானமும் யோகாவும் உங்களை வலிமையாக்கும். சுயநலமற்ற சேவைகள் மக்களை துன்பங்களில் இருந்து காக்கும். தர்மங்களை மறந்து விடக்கூடாது.

கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். கலியுகத்தின் இடையே பொற்காலம் வரும். அச்சமின்றி மக்கள் மிகவும் துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும். தெளிவான சிந்தனை வேண்டும். அதே போல கடவுளை மறக்கக் கூடாது.

பணத்திற்கு மதிப்பு

பணத்திற்கு மதிப்பு

கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.

கணவன் மனைவி உறவு

கணவன் மனைவி உறவு

சில ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன் மனைவி உறவு என்பது வெறும் உடலுறவுக்காக மட்டுமின்றி, அது ஒரு மிக உன்னதமான பந்தம். ஆணும் பெண்ணும் சமம், இருவரும் தங்களின் குடும்பத்தை முறையாக வழிநடத்தவேண்டும். பெண்ணை மதிப்பதால் தான் ஒருவன் ஆணாகிறான்; ஆணை மதிப்பதால் தான் ஒருவள் பெண் ஆகிறாள்.

கடவுளின் முன் சமம்

கடவுளின் முன் சமம்

பூணூல் அணிந்திருப்பதால் மட்டுமே ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுவான். பிராமணன் என்பவன் நற்குணங்களாலும் தர்மசெயல்களாலும் உருவாகிறானே தவிர பூணூல் அணிவதால் அல்ல. சமூகத்தில் வேண்டுமென்றால் பூணூல் அணிந்துகொண்டு தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளலாம். ஆனால், பகவானின் முன்னிலையில் எல்லாவுயிர்களும் சமமே.

போலி சாமியார்கள்

போலி சாமியார்கள்

ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.

கலியுகத்தின் பிடியில் சிக்கியவன்

கலியுகத்தின் பிடியில் சிக்கியவன்

கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான். அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான். முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.

ஊழல் அரசு

ஊழல் அரசு

உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான்.

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம்

கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள். கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும் சிக்கிக் கொள்வார்கள். வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

தற்பெருமை

தற்பெருமை

பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள்.

கொள்ளை அதிகரிக்கும்

கொள்ளை அதிகரிக்கும்

நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர். வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.

ஆயுள் குறையும்

ஆயுள் குறையும்

கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும். தனக்கு உணவு கொடுத்து வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் கடமையை மகன் மறப்பான். தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால் கொடுத்த பசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அந்த பசுக்களும் கொல்லப்படும். நன்றிகடன் மறக்கப்படும். இதெல்லாம் பார்க்கும் போதும் இப்போ நடக்கிறதை பார்த்தால் இதுதான் கலியுகமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருக்கிறார் வேத வியாசர் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
5,000 years ago by sage Vedavyasa, are amazing because they appear so accurate predictions for Kali Yuga from the Bhagavata Purana.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more