Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிறந்தநாளில் மக்கள் நல இயக்கம் இயக்கம் ஆரம்பித்த விஷால் - ஜாதகம் சொல்வதென்ன?

நடிகர் விஷால் தனது 41வது பிறந்த நாளில் மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார். அரசியல் அவருக்கு சரிப்பட்டு வருமா? சாதிப்பாரா? சறுக்குவாரா? ஜாதகக் கட்டம் என்ன சொல்கிறது என்று..

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஷால் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி 1977ஆம் சென்னையில் பிறந்துள்ளார். அவர் சதயம் நட்சத்திரம், கும்பராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ளதாக ஜாதகம் சொல்கிறது. தனது 41வது பிறந்த நாளில் மக்கள் நல இயக்கத்தை தொடங்கியுள்ளார். அரசியலில் அவர் சாதிப்பாரா அல்லது சறுக்குவாரா என்று பார்க்கலாம்.

கடந்த ஆண்டு ஆர் கே நகரில் இடைத்தேர்தல் நடைபெற்ற போதே வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் கடைசி வரை மறியல், பேட்டி என ஊடகங்களில் தலைப்பு செய்தியானார்.

விஷால் ஜாதகப்படி அவருக்கு பிறந்த தேதியில் இருந்து 1980 வரை ராகு திசை நடைபெற்றது. அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு வரை குரு திசை நடைபெற்றது. 1996 முதல் 2015 வரை சனி திசை நடைபெற்றது.

புதன்திசையில் தலைமை பதவி

புதன்திசையில் தலைமை பதவி

புதன் திசை 2015ல் தொடங்கி 2032 வரை நடைபெற உள்ளது. புதன்திசை தொடங்கிய உடன் தலைமை பதவிகள் தேடி வந்துள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆழம் பார்த்த அவர், மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் இப்போது புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

சிம்ம சூரியன் உடன் புதன்

சிம்ம சூரியன் உடன் புதன்

11ஆம் இடத்தில் சிம்மத்தில் சூரியன். சூரியனுடன் புதன் புத ஆதிபத்திய யோகம். அரசியலில் நல்ல நிலை தரும் நிலையாகும். மகம் நட்சத்திரத்தில் சூரியன் அமர்ந்துள்ளார். சிம்மத்தில் சூரியன் அமர்ந்தால் அரசனைப் போல வாழ்வான். ஆளுமை திறன் மிக்கவர். அரசியல் ஈடுபாடு அதிகம் இருக்கும். தலைமை பதவிகள் தானாக தேடி வரும் என்கிறது ஜோதிடம். மகம் நட்சத்திரத்தில் சூரியன் அமர்வது சிறப்பானது. விஷாலுக்கு சூரியன் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் புதனுடன் இணைந்து அமர்ந்துள்ளார்.

சுக்கிரனால் கலைத்துறை

சுக்கிரனால் கலைத்துறை

லக்னாதிபதி சுக்கிரன் 10ஆம் இடத்தில அமர்ந்துள்ளார். 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் சனியும் சுக்கிரனும் இணைந்துள்ளனர். எனவேதான் கலைத்துறையில் நடிகராக வெற்றி பெற்றுள்ளார் விஷால். தொழில்காரகன் சனி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். இது இவருக்கு பதவியை பெற்றுக்கொடுத்துள்ளது.

விஷாலுக்கு சாதகமான காலம்

விஷாலுக்கு சாதகமான காலம்


விஷாலுக்கு இப்போது புதன்திசை நடக்கிறது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிகளும் நன்றாகவே இருக்கின்றன. ராசிக்கு 9வது இடத்தில் உள்ள குரு 5ஆம் பார்வையாக ராசியை பார்க்கிறார். 11வது இடத்தில் உள்ள சனி தனது 3வது பார்வையாக ராசியை பார்க்கிறார். இந்த குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களையே கொடுக்கும். எனவேதான் நல்ல நேரம் நடக்கும் போதே

அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கிறார் விஷால்.

சாதிப்பாரா விஷால்

சாதிப்பாரா விஷால்

விஷாலின் ஜாதகப்படி அவருக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது. இது யோகமாக மாறிய நிலையிலும் திருமண தடைக்கு காரணமாகவே உள்ளது.

திருமண மண்டபம் கட்டி முடித்த பின்னர்தான் திருமணம் என்று கூறி வரும் விஷால், அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கிறார். இயக்கம் தொடங்கியது முதல் படி என்றாலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அரசியல்வாதியாக விஷால் சாதிப்பாரா? சறுக்குவாரா என்பது இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்து விடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+