சனி வக்ர பெயர்ச்சி பலன்.. சிம்ம ராசிக்கு நடக்க போகும் 10 முக்கிய விஷயங்கள்!
சென்னை: 2024 ஜூன் மாதம் 30ம் தேதி நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சி சிம்ம ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
சனி எந்த திசையில் செல்கிறார் .. உங்கள் ராசிக்கு எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்பதை வைத்து உங்களின் வாழ்க்கை மேலே போக போகிறதா கீழே விழ போகிறதா என்று பார்த்து விடலாம். சனியின் மூலம் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள், வீழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சனிதான் தற்போது வக்ர பெயர்ச்சி அடைகிறார் .

அது என்ன வக்ர பெயர்ச்சி: அவ்வப்போது முன்பும், பின்னும் நகர்ந்து பலன்களை மாற்றுவார். சில சமயங்களில் ராசி ரீதியாக மாறாமல் நட்சத்திர ரீதியாக முன்னும் பின்னும் நகருவார். இவர்தான் இந்த முறை வக்கிர பெயர்ச்சி அடைய போகிறார். கும்பத்தில் சனி பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். அதனால் இது வக்கிர பெயர்ச்சி. ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான். அதன்பின் அக்டோபர் 5ம் தேதி மேலும் பின்நோக்கி சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைகிறார்.
பலன்கள்: 2024 ஜூன் மாதம் நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சி சிம்ம ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம். அடுத்த 1 வருடம் உங்கள் வாழ்க்கையில் சனி என்னவெல்லாம் செய்ய போகிறார் என்று பார்க்கலாம்.
1. உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தனை காலம் குழந்தை இல்லாமல் போனவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்படும்.
2. மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்: அதே சமயம் உங்களுக்கு மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம்.
3. மற்றவர்களை காலி செய்யும் கெட்ட எண்ணம் வேண்டாம். யாரையும் பற்றி தவறாக யாரிடமும் பேச வேண்டும்.
4. பல பிரச்சனைகளில் இருந்த உங்களுக்கு பிரச்சனைகள் தீர போகிறது.
5. கடன் வேண்டாம் - கெட்ட எண்ணம் வேண்டாம்: அதீத பணம் வருகிறது என்று நம்பி கடன் வாங்க வேண்டாம். கடன் பிரச்சனைகளில் மாட்டி சிக்க வேண்டாம்.
6.தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். கொஞ்சம் வாயை குறைத்துக்கொள்ளுங்கள் சிம்ம ராசிக்காரர்களே!
7. புதிய வீடு கட்டும் வாய்ப்பு வரும்., நிலம் வாங்கும் யோகம் அடிக்கும். சொத்துக்களுக்கு அதிபதி ஆகும் வாய்ப்பு தேடி வரும்.
8. மிக மோசமான பொருளாதார சூழ்நிலை, கழுத்தை நெறிக்கும் கடன், குழந்தைகள் வாழ்க்கையில் பிரச்சனைகள்
9. எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும். அதாவது திருமணத்திலோ, வேலையிலோ நீங்கள் எதிர்பார்க்காத பெரிய மாற்றம் நடந்து உங்கள் எதிர்காலத்தையே புரட்டி போடும்.
10. சரியான முடிவுகளை எடுத்தால் கால் மேல் கால் போட்டு அமரலாம்.
பரிகாரம்: தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் சென்று பூஜை செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications