சனி வக்ர பெயர்ச்சி எப்படி இருக்கும்? விருச்சிக ராசிக்கு நடக்க போகும் 7 பெரிய விஷயங்கள்!
சென்னை: ஜூன் 30ம் தேதி நடக்க உள்ள சனி வக்கிர பெயர்ச்சி சில ராசிகளுக்கு எதிர்பார்க்காத பலன்களை கொடுக்க போகிறது. அதில் விருச்சிக ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்க போகிறது என்று இங்கே பார்க்கலாம்.
பின்வரும் 7 பலன்கள் மற்றும் கெடுபலன்களை சனிப்பெயர்ச்சி உங்களுக்கு கொடுக்கும்.

1. இனி இதனால் உங்களுக்கு பண மழை கொட்டும் என்பார்களே அது இப்போது வரப்போகிறது. இதனால் பணம் உங்களுக்கு கொட்டோ கொட்டு என்று கொட்டும்.
2. வேலை இருந்தால் நல்ல சம்பளம் இல்லை, சம்பளம் இருந்தாலும் 10 நாளைக்குதான் நிற்கிறது மீதம் மாதத்தில் 20 நாட்கள் கையில் பணம் இல்லை என்ற நிலைதான் இருந்தது. அது இனி இருக்காது.
3. முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை சோதித்து பார்த்து பின்னர் நலன்களை கொடுப்பார்.
4. நீங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம்.
5. கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
6. வீட்டில் உள்ளவர்களுக்கு கடன் தொல்லை, சொத்துக்களை இழந்தது, நிலத்தை இழந்தது என்று எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடந்துவிட்டது. விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த 5 வருடமாக கஷ்டப்பட்டு வந்து இருப்பீர்கள். வேலை இல்லை, வருமானம் இல்லை என்ற நிலை பலருக்கும் இருந்திருக்கும். இனி அதெல்லாம் மாறும்.
7.உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு.
பரிகாரம்; பழனி முருகனிடம் சரண் அடைந்து விடுங்கள்.
அது என்ன வக்ர பெயர்ச்சி: கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் தற்போது சனி பகவான் இருக்கிறார். அதுதான் அந்த ராசியின் கடைசி நட்சத்திரம். இப்படிப்பட்ட நிலையில் அவர் பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். அதனால் இது வக்கிர பெயர்ச்சி. ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான். அதன்பின் அக்டோபர் 5ம் தேதி மேலும் பின்நோக்கி சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைகிறார்.
சனி பகவான் அடிக்கடி இடம் மாற கூடியவர் அல்ல. ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் அதாவது இரண்டரை ஆண்டு காலம் இருக்கும் குணம் கொண்டவர் சனி பகவான்,. ஒரு ராசியில் இருக்கிறார் என்றால் அந்த ராசிக்கு மட்டும் மெல்ல 12 ராசிகளுக்கும் நல்ல பலன்களையும் கெடு பலன்களையும் கொடுக்க கூடியவர்.
அதோடு அவ்வப்போது முன்பும், பின்னும் நகர்ந்து பலன்களை மாற்றுவார். சில சமயங்களில் ராசி ரீதியாக மாறாமல் நட்சத்திர ரீதியாக முன்னும் பின்னும் நகருவார். இப்படி சனி பின்னோக்கி நகர்வதை வக்ர பெயர்ச்சி என்று கூறுவார்கள்.


Click it and Unblock the Notifications
