நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில், குமரி மாவட்ட கோவில்களில் கோலாகலம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. இதே போல கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது.
கன்னியாகுமரி: நாட்டில் வேளாண் பணிகள் மேம்பாடு அடையவும், நெற்கதிர் அறுவடை செழித்தோங்கவும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. நெற்கதிர்கள் சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நெற்கதிர்களை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டித் தொங்க விடுவார்கள். இதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பும், நெல் மணிகளை வயலில் தூவினால் விளைச்சல் செழித்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக 15ஆம்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்றைய தினம் ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முதல்போக சாகுபடியில் விளையும் நெற்கதிர்களை அறுவடை செய்து, அதை சபரிமலையில் வைத்து நடைபெறுவது நிறைபுத்தரிசி பூஜை.

கருவறைக்குள் எடுத்து செல்லப்பட்ட நெற்கதிர்களை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். பின்னர் வழக்கமான பூஜைகளுடன் இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. 21ஆம் தேதி திருவோண விழா சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கும். அன்றைய தினம் பக்தர்களுக்கு ஓண விருந்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும். ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை 23ஆம் தேதி இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நிறைபுத்தரிசி பூஜை நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முன்னதாக கோவிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.பின்னர், நெற்கதிர்களை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன்பு படைக்கப்பட்டது. சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோல் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு தாணுமாலயசாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் சாமி சன்னதியில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. அதைதொடர்ந்து அந்த நெற்கதிர்களை தெற்கு மண் மடம் பிரதீபன் நம்பூதிரி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜைக்காக கோவில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு, உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை நடந்தது. காலை 6 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பகல் 12 மணிக்கு உச்சகாலபூஜையும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும் தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடந்தது.

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆடி மாத நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை காலை 5.55 மணி முதல் 6.20 மணி வரை நடந்தது. சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதே போல திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. இதேபோல், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவில், பத்மநாபபுரம் நீலகண்டசாமிகோவில், வெள்ளிமலை பாலசுப்பிரமணியசாமி கோவில், வேளிமலை முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நிறைபுத்தரிசி பூஜை வழிபாடு நடைபெற்றது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications