புரட்டாசி மாத பலன் 2025: மிதுன ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் யோகம்
Purattasi matha palan: ஆவணி மாதம் நிறைவடைந்து பெருமாளுக்கு உரிய மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் இன்று பிறந்துள்ளது. பெருமாள் மாதம், வைணவ மாதம், புண்ணிய மாதம், முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பொழியும் மாதம் என்று அழைக்கப்படுகிறது. மாதங்களில் 6 ஆவது மாதமாக வரக்கூடிய மாதம். சூரிய பகவான் ராசி மண்டலத்தில் 6 ஆவது ராசியாகிய கன்னி ராசியில் அமரும் மாதமே புரட்டாசி மாதம்.

பண்டிகைகள்
பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது நவராத்திரி தான். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என ஏகப்பட்ட விசேஷங்கள் வரவுள்ளன. கொழு பொம்மைகளைக் கொண்டு பூமியில் கடவுளை வைத்து மனதிலே ஏற்ற கொண்டாடக்கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் அம்பாளுக்கு ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்படும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மாதத்தில் முக்கியமான மஹாளய அமாவாசை. நீண்ட நாட்களாக முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்காமல் இருப்பவர்கள் புனித நதிகள், ஆற்றோரங்களில், கடலோரங்களில், குளக்கரைகளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு ஆசிர்வாதம் பெறும் மாதமாகும். சூரியன் கன்னியில் அமர்ந்துள்ளதால் இந்த மாதத்தில் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
இந்த புரட்டாசி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே 3 வது வீட்டில் இருந்து 4 ஆவது வீட்டுக்குள் சூரியன் வந்து அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய தொழில் தொடங்கலாமா, வியாபாரம் தொடங்கலாமா, நவராத்திரி நேரத்தில் ஏதாவது நாம் ஆரம்பிக்கலாமா என்பது போன்ற சிந்தனைகள் தோன்றும். 4 ஆம் இடத்தில் சூரியன் அமர்ந்திருப்பதால் தந்தை வழியில் சில உதவிகள் கிடைக்கும். தம்பி, தங்கைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
தொட்டது துலங்கும்
உங்க ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு அமோகமாக இருப்பதால் எதைத் தொட்டாலும் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். நீண்ட நாள் ஆசை, கனவுகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். யோகாதிபதி சுக்கிரனும் இந்த மாதம் சாதகமாக இருப்பதால் வீடு வாங்குவதற்கான யோகம் உண்டு. லோன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
திருமண யோகம்
5 ஆம் இடத்தில் செவ்வாய் இந்த மாதம் முழுவதும் இருக்கிறார் என்பதால் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. அவர்களுடைய நட்பு வட்டத்தை கண்காணித்துக் கொள்வது நன்மை பயக்கும். திருமண வரன் தேடிக் கொண்டிருந்தால் யோசித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரம் கடந்த மாதத்தைவிட இந்த மாதம் லாபகரமாக இருக்கும். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள். உத்தியோகத்தில் இந்த மாதம் முழுவதும் உங்கள் கை ஓங்கியிருக்கும்.
வழிபாடு
உத்தியோகத்தில் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள், பதவிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மகளுடைய திருமணம் விஷயமாக பொருந்தக்கூடிய ஜாதகம் வரும் வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்வதற்கான விசா கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. எல்லா வகையிலும் ஜெயித்துக் காட்டக் கூடிய மாதமாக உங்களுக்கு இருக்கும். பைரவரை வழிபடுவது உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். காது கேளாதோருக்கு உதவுவது, துவரம் பருப்பு தானமாக கொடுப்பது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications