புரட்டாசியில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க

Subscribe to Oneindia Tamil

Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளது. கன்னி ராசிக்குள் சூரியன் சஞ்சாரம் செய்யக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசியினர் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்துள்ளார்.

purattasi-rasi-palan-2026-these-4-rasis-will-be-lucky-career-growth-money-property-and-success

கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது.

அந்த வகையில், புரட்டாசி 1 முதல் 30 ஆம் தேதி (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17) வரையிலான தமிழ் மாதத்தில் அதிர்ஷ்டம் பெறக்கூடிய 4 ராசியினர் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசியினருக்கு ஏழரை சனியால் பல மாதங்கள் உங்களுக்கு சிரமமாக இருந்தாலும், இந்த மாதம் தனிக்காட்டு ராஜாவாக இருப்பீர்கள். கெளரவம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பெரிய பொறுப்புகளுக்கு வரக்கூடிய அமைப்பு ஏற்படும். மன அழுத்தங்கள் தீரும். யாரெல்லாம் உங்களை ஏளனமாகப் பேசினார்களே அவர்கள் ஏதவாவது பிரச்சனையில் சிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உங்கள் எதிரிக்கு தீராத சங்கடம் வரக்கூடிய அளவுக்கு கிரகம் அமைப்புள்ளது. செவ்வாய் நீச்சமாக இருப்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. குருவுடன் இருப்பதால் பண வரவு நன்றாக இருக்கும். எல்லா விதத்திலும் ஏற்றம் ஏற்படும். பொருளதவி கிடைக்கும். அரசாங்கத்தில் இருப்பவர்கள், அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகளுக்கு பெரிய கெளரவங்கள் ஏற்படும்.

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொலைதூரப் பயணங்கள் மூலமாக அனுகூலம் ஏற்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பரிசோதனைகளை செய்து கொள்வது நன்மையைத் தரும். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. செவ்வாய்க்கிழமை தோறும் பெருமாள், முருகர், துர்க்கை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. சுப காரியங்களுக்கான அனைத்து நல்ல விஷயங்களும், எதிர்பார்த்த விஷயங்களும் நடைபெறும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு அற்புதமாக இருக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும்.

அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடலை படிப்பது நன்மை பயக்கும். சோதனைகள் குடும்பத்தில் குறையும். நல்ல அனுகூலங்கள் காணப்படும். நிறைய ரிஷப ராசியினர் வீட்டில் சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். இன்டீரியர் டெக்கரேட் செய்வீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழந்த பெருமைகள் எல்லாம் பெறக்கூடிய நல்ல காலகட்டம்.

எதிரிகளை வெற்றி பெறும் யோகம் ஏற்படும். இழந்தவற்றை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். நல்லவையும், சந்தோஷமும் கலந்து வரும். பூர்வீக சொத்து விஷயங்களில் அதீதமான கவனத்தோடு இருக்க வேண்டும். முதுகுத் தண்டுவடத்தில் அதீத கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமையில் பெருமாள் வழிபாடு சகலவித முன்னேற்றங்களைத் தரும்.

துலாம் ராசி

துலாம் ராசியினருக்கு திங்கள்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்வது நன்மை பயக்கும். முதுகு தண்டுவட பாதிப்பு, வயிறு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. பெண்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யோசித்துத் கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. மயக்கம் வரும் வாய்ப்புள்ளது. தொழில், உத்தியோகம், குடும்பம் என எங்கு என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பது அற்புதத்தை தரும்.

குடும்பத்திலும், வெளியிடத்திலும் வார்த்தைகளில் அதீத கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் எந்தவிதமான குழப்பம் ஏற்பட்டாலும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். உத்தியோகம், தொழில், வியாபாரம், பிள்ளைகளுக்காக இடமாற்றம் உள்ளிட்ட எந்த மாற்றங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் நீங்கும். வியாபாரத்தில் இருந்த கஷ்டம் பரிபூரண நிவர்த்தியாகும். செல்வாக்குகள் கூடும். துர்க்கை வழிபாடு, துர்க்கை கவசம் கேட்பது நன்மையைத் தரும்.

மீனம் ராசி

மீனம் ராசியினருக்கு இந்த புரட்டாசி மாதத்தில் உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். மனைவியாக இருந்தால் கணவரின் உடல்நிலையிலும், கணவராக இருந்தால் மனைவியின் உடல்நிலையிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நல்ல காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

புரட்டாசி என்பதால் நல்லவை செய்யக்கூடாது என்பது இல்லை. எல்லா விதமான நல்ல விஷயங்களையும் செய்யலாம். உணவு தானம் அளிப்பது நன்மையைத் தரும். வாசனையான பொருள்களை உங்களைச் சுற்றி வைப்பது நன்மையைத் தரும். பெற்றோர் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். லாபங்கள் அதிகரிக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து, இணக்கமாகச் செல்வது நன்மையைத் தரும்.

தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். துணை விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும். வியாழக்கிழமைகளில் விநாயகர், பெருமாள் தாயார், ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+