Rahu Ketu Peyarchi 2026: மிதுன ராசிக்கு வேலை, தொழிலில் அதிரடி முன்னேற்றம்..2 விஷயங்களில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் பெயர்ச்சி டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, மிதுன ராசியினருக்கு என்ன விதமான பலன்களை கொடுக்கப் போகிறது, முன்னேற்றத்தை ஏற்படுத்துமா, கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி ராகு கேது பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியமான பெயர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது, ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பயணித்து வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

rahu-ketu-peyarchi-2026-massive-changes-ahead-for-mithunam-rasi-people-in-this-rahu-ketu-peyarchi

சிம்ம ராசியில் இருந்த கேது பகவான் கடக ராசிக்குள் வருகிறார். கும்ப ராசியில் இருந்த ராகு பகவான் மகரம் ராசிக்குள் வருகிறார். இது உலக அளவிலும், தனிமனித வாழ்க்கையிலும் ஏராளமான மாற்றங்களை உருவாக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியால் மிதுன ராசியினருக்கு தொழில், குடும்பம், வேலை, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசியினருக்கு ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். கேது பகவான் 2 ஆம் இடத்திற்கு வருகை தந்துள்ளார். குடும்ப வாழ்க்கையில் நிறைய வாக்குவாதங்கள், கோபங்கள் ஏற்படும். கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. சட்ட வல்லுநர்கள், ஜோதிடர்கள், ஆன்மீகவாதிகள் போன்றோருக்கு கேது பகவான் 2 ஆம் இடத்தில் வருவது நல்லது. வாக்கு வன்மை அதிகரிக்கும்.

வெளிநாடு யோகம்

நிறைய பேர் வீட்டை விட்டுப் பிரிந்து தாத்தா, பாட்டி வீடுகளில் வாழ்வதற்கான அமைப்புள்ளது. வெளிநாடு செல்லக்கூடிய யோகம் ஏற்படும். 8 இல் ராகு பகவான் வரும்போது உங்களுடைய பழக்கவழக்கங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலர் உங்களை அவமானப்படுத்துவதற்கான முயற்சி செய்யக்கூடிய காலகட்டம்.

கவனம்

உச்சத்தில் இருக்கும் நபர்கள் அஷ்டமத்தில் ராகு இருக்கும்போது அவர்களின் புகழ் குறையக்கூடும். இந்த ராகு கேது பெயர்ச்சி காலகட்டத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பழகக் கூடியவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொருத்தவரை கால் மூட்டு வலிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

முன்னேற்றம்

வேலை விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 10 ஆம் இடத்தில் ஏற்கனவே சனி இருக்கும் நிலையில் இப்போது ராகுவும் சேர்வதால் வேலையில் நல்ல வளர்ச்சிகள் இருக்கும். புதிய தொழில் தொடங்கக்கூடிய சிந்தனை வரும். நீண்ட நாட்களாக குடும்பத்தில் எதிர்பார்த்த திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். பண வரவுகள் அதிகரிக்கும்.

பண வரவு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான நேரமாக இருக்கும். யாரிடம் பேசினாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசுவது, பழகுவது நன்மையை ஏற்படுத்தும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு யோகத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+