கன்னி ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி தரும் பலன்கள்.. எந்தெந்த விஷயங்களில் கவனம் தேவை
ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடப்பு ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களான இந்த ராகு கேது பெயர்ச்சியால் கன்னி ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம்.ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. ஐப்பசி 27 ஆம் தேதி, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் கும்பத்தில் இருந்து மகரத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடகத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி சமயத்தில் கடகத்தில் குருவும், மீனத்தில் சனியும் இருக்கின்றனர். சனியின் வீட்டில் ராகு, சந்திரனின் வீட்டில் கேது பகவான் இருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும்.
ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி. இந்த ராகு கேது பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியினருக்கு 6 ஆம் இடத்தில் இருந்த ராகு 5 ஆம் இடத்துக்கும், 12 ஆம் இடத்தில் இருந்த கேது 11 ஆம் இடத்துக்கும் வருகிறது. 11 இல் கேது வருவதால் தெய்வ மார்க்க பயணங்களை மேற்கொள்வீர்கள். கோயில் திருப்பணிகளை மேற்கொள்வது, யாத்திரைகள் மேற்கொள்வது போன்ற யோகங்கள் உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
கவனம்
கணவன், மனைவி சண்டை, குடும்ப சண்டை விஷயத்தில் எச்சரிக்கை தேவை. நிறைய விரயங்கள் ஏற்படும். விலையுயர்ந்த பொருள்களை அதீத கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ரங்கநாதப் பெருமாளை மனதாரா வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். எதிர்பார்க்காத நன்மைகள் பெரும் சந்தோஷத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும்.
ஆரோக்கியம்
குடும்பத்தில் யாருடைய தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அலர்ஜி, சளி தொந்தரவு, தோல், கேல்சியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதீத கவனம் தேவை. விஷ்ணு காயத்ரி மந்திரத்தை தினந்தோறும் கேட்பது, படிப்பது நன்மையைத் தரும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது ஏற்றத்தைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள் மருத்துவர்கள், பெரியவர்கள், துணையின் ஆலோசனைக் கேட்டு செயல்படுவது நல்லது. எந்த விஷயத்தையும் மனதிற்குள் போட்டுக் கொண்டு உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.
செல்வாக்கு
தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும். எல்லா விஷயத்திலும் ஏற்றம் உண்டாகும். 7 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் சனியின் தாக்கம் குடும்பத்தில் சேதாரத்தை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கணவன், மனைவி ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உறவினர்கள் சண்டை, நண்பர்கள் சண்டை போன்றவற்றை குடும்பத்துக்குள் எடுத்துக் கொண்டு வராமல் நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications
