மீன ராசியினருக்கு பட்ட கஷ்டத்துக்கு பலன்.. இனி தொட்டதெல்லாம் அதிர்ஷ்டம்.. ஜாக்பாட் யோகம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி வாக்கியத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மீன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது என்பது நிழல் கிரகம், சர்ப்ப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது.

rahu-ketu-peyarchi-palan-lets-learn-about-the-beanefits-of-rahu-ketu-transit-for-meenam-rasi-peopl

திருக்கணிதத்தின்படி 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மீனம் ராசியில் இருந்து ராகு பகவான் கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது பகவான் சிம்மத்துக்கும் போகிறார்.

ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சில ராசியினருக்கு கெடு பலன்களும் கிடைக்கப் போகின்றன. அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் மீன ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் சனி வந்திருப்பதால் உடற்பயிற்சி மிகவும் அவசியம். 12 இல் ராகு, 6 இல் கேது வந்திருக்கிறார். தெய்வீக வழிபாடுகள், சத்ரு நாசம் ஏற்படுவதை கண் கூடாகப் பார்ப்பீர்கள். கண், மூக்கு, காது, வாய், பல், கழுத்து விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. தியானத்தில் இருப்பது நல்லது. வியர்வை வரும் உடற்பயிற்சியை செய்யும் மீன ராசியினர் பெரும் வெற்றியைப் பெறுவீர்கள்.

உதவிகள் கிடைக்கும்

உள்ளூர், வெளியூர் கடல் கடந்த பயணம் மேற்கொள்வீர்கள். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் உண்டாகும். கடல் கடந்து படிப்புக்கு செல்லக்கூடிய பிராப்தம் உண்டாகும். சத்ரு ஜெயம் ஏற்படும். வங்கிக் கடன், பெரிய உதவிகள் கிடைக்கும். நிறைய பேர் ஸ்டார்ட் அப் தொடங்குவீர்கள். 12 இல் ராகு 6 இல் கேது இருப்பதாலும் திருணத் தடைகள் பரிபூரணமாக நீங்கும்.

திடீர் அதிர்ஷ்டம்

குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். ரத்த பந்த உறவுகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தை வழி உறவின் ஆரோக்கியத்தின் கவனம் செலுத்துவது நல்லது. வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. திடீர் அதிர்ஷ்டம், திடீர் பண வரவு உண்டாகும். லாட்டரி அடிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு திடீர் யோக பலம் உண்டாகும்.

எச்சரிக்கை

பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். கடை நிலை ஊழியர்கள் கூட செல்வந்தராகும், பெரிய பொறுப்புகளுக்கு வரும் நிலை உண்டாகும். தேக ஆரோக்கியம், வண்டி வாகன விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. 12 இல் இருக்கும் ராகுவுக்கு குருவின் பலமும் கிடைப்பதால் விசேஷமான நன்மைகள் உண்டாகும். சுப விரைய பிராப்தம் உண்டாகும்.

விநாயகருக்கு தீபமேற்றுவது நல்லது

எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். தெய்வீக வழிபாடுகளைத் தொடர்வது நல்லது. காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு விநாயகர் படத்திற்கு தினந்தோறும் தீபமேற்றுவது அதிர்ஷ்டத்தை தரும். கேதுவின் அனுகூலம் கிடைக்கும். தெய்வ காரியங்கள், தெய்வ சங்கல்பங்கள் எது வந்தாலும் உதவி செய்து நன்மையை ஏற்படுத்தும்.

மாற்றம் முன்னேற்றம்

படிப்பு, தொழில், வியாபாரம், உத்தியோகம் மாற்றம் அமோகமான வெற்றியைத் தரும். எந்த மாற்றங்கள் வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வது நல்லது. அபரிமிதமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை தரும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+