மகரம், கும்பம், மீனம் ராசிக்கு திடீர் பணவரவு.. தொழிலில் ஏற்றம்.. இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

Rasi Palan This Week: நவம்பர் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கக்கூடிய அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-magaram-kumbam-meenam-rasi-people-may-get-good-benefits-this-week

அதன்படி, நவம்பர் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு கிடைக்கக்கூடிய நல்ல பலன்கள், தொழில் வளர்ச்சி, பணவரவு, குடும்ப வாழ்க்கை, அதிர்ஷ்ட வாய்ப்புகள் மற்றும் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்துப் பார்க்கலாம்.

மகரம் ராசி பலன்

மகர ராசியினருக்கு புதிய முயற்சிகள் அனைத்தும் பெரும் சந்தோஷத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். உறவுமுறையில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடைபெறும் யோகம் உண்டு. உறவுகளில் இருந்த சிக்கல்கள் தீரும். இதுவரை இருந்து வந்த கஷ்டமான நிலைமைகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள்.

இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் காணப்படும். ராகு ஜென்மத்தில் வருவதால் வயிறு, கழிவுப் பாதை, ஜீரண உறுப்புகள் தொர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசியினருக்கு உறவுகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான அமைப்பு ஏற்படும். பண விஷயத்தில் ஏற்றங்களும், சந்தோஷமும் ஏற்படும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். உறவுகள் விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்களை தீரும் அமைப்பு. தோள்பட்டை, கழுத்து, சுழுக்கு தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும்.

உறவுகள், அக்கம்பக்கத்தினரிடம் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நன்மைகளை ஏற்படுத்தும். உறவுகளுக்குள் சிறிய வாக்குவாதங்களையும் தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

மீனம் ராசி பலன்

மீன ராசியினருக்கு மன அழுத்தம், சஞ்சலம், நரம்பு தொடர்பான பாதிப்புகள், வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திடீர் அதிர்ஷ்டம், திடீர் பணவரவு ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் உண்டாகும். கடல் கடந்த நன்மைகள் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து அனுகூலம் ஏற்படும்.

வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள், பாதிப்புகள் படிப்படியாகக் குறையும். உத்தியோகம், தொழில் ரீதியாக எதிர்பார்த்த பல விஷயங்கள் கைகொடுக்கும். உத்தியோகத்தில் நல்ல மேன்மை காணப்படும். உறவுகளுக்குள் கோபத்தைத் தவிர்ப்பது நன்மையையும், சந்தோஷத்தையும் தரும். புதிய தொழில் தொடங்குவதற்கான பாக்கியம் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+