குருவின் அருளால் தனுசு ராசிக்கு வரும் பிரம்மாண்ட மாற்றம்.. இனி தொட்டது துலங்கும்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-dhanusu-people-get-from-october-19-to-25

கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

அதன்படி, அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 முதல் 8 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு வெற்றி மேல் வெற்றி வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். பணம், பொருளாதாரத்திற்குப் பஞ்சம் இருக்காது. செவ்வாய், சுக்கிரன் வக்கிரமாக, புதன் மூன்றுமே சுக்கிரன் வீட்டில் சேர்ந்திருக்கிறது. பெரியவர்கள் மூலமாக பணம் வரும். அஷ்டமத்தில் செவ்வாய், குரு இந்த மாதம் முழுவதும் இருப்பதால் அம்மாவுடைய ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

வாகனங்களில் கவனம்

புரோட்டீன் சார்ந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வண்டி, வாகனம் சார்ந்த விஷயங்களை மேற்கொள்வோர் கவனமாக செல்வது நல்லது. பணங்களின்போது மிகுந்த கவனம் தேவை. தேவையில்லாத வம்பு, வழக்கு என போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சண்டை, பஞ்சாயத்துகள், அண்ணன், தம்பி சொத்து விஷயத்திற்குள் சிக்காமல் இருப்பது நன்மை பயக்கும்.

தொட்டது துலங்கும்

தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். சுப விரயங்கள் ஏற்படும். தெய்வ தரிசனம் செய்வீர்கள். உறவுகள், நண்பர்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இல்லாத நிம்மதி இனி ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே தவிர்ப்பது நல்லது. வயிறு, கழிவுப் பாதையில் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யோக பலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

தொழில்

தொடர்ச்சியாக காணப்பட்டிருந்த பலவிதமான சங்கடங்கள் நிவர்த்தியாகும். யோக பலன்கள் கிடைக்கும். வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். கலைத் துறை, மீடியா துறை, சோஷியல் மீடியாவில் இருப்பவர்களுக்கு பெரிய ஃபாலோவர்ஸ் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும்.

பாக்கியத்தில் குரு

தலைவலி, டென்ஷன், ஆரோக்கியம், குழப்பம் இருந்த தன்மை எல்லாம் பரிபூரணமாக நீங்கும். மனம் தெளிவடைய ஆரம்பிக்கும். பயம் குறையும். 4 ஆம் இடத்தில் சனி வக்கிரமாக, புதன் நட்சத்திரத்தில் சஞ்சாமாவது இடமாற்றத்தைக் கொடுக்கும். அதனால், பெரிய மாற்றம் உண்டாகும். அஷ்டமத்தில் இருக்கும் குரு பாக்கிய ஸ்தானத்துக்கு போவது நன்மையைத் தரும்.

வழிபாடு

அக்டோபர் 31 ஆம் தேதிக்குப் பிறகு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். சூழ்நிலை நன்றாக மாறும். பைரவரை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். ஆரோக்கியம், பயணங்களில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+