கடக ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கடக ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-kadagam-people-from-oct-12-to-18

சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதியான இன்று நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். இந்த வாரத்தில் ஐப்பசி மாதமும் பிறக்கவுள்ளது.

அந்த வகையில், அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்கள் பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். திருமண யோகம் உண்டாகும். காதல் கைகூடும். காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு இன்னொரு காதல் கிடைக்கும். முதியவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் ஏற்படும். இயற்கையாக இருந்து வந்த கஷ்டங்கள் தீரும்.

சுக்கிரன் வக்கிரம்

எதிர்பார்க்காத இடத்தில் இருந்து அனுகூலமும், யோகம் ஏற்படக்கூடிய அற்புதமான காலகட்டம். 4 ஆம் இடம் எனும் சுக ஸ்தானத்தில் சுக்கிர பகவான் வக்கிரமாக இருக்கிறார். டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில் போன்றவை பழுதாக இருந்தால் வெளியில் வீசுவது, அல்லது பழுது பார்த்துக் கொள்வது நல்லது. சொந்த பந்தங்கள், பெண்ணின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

முன்னேற்றம்

ஒரு சிலரின் குடும்பத்தில் நல்ல காரியம் நடப்பதற்கான அழைப்புகள் தேடி வரும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் சரியாகும். கழுத்து தொடர்பான பாதிப்புகள் வந்து சரியாகும். மாமனாரின் ஆரோக்கியத்தில் அக்கறை, கவனம் செலுத்துவது நன்மை பயக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஆரோக்கியம்

லிவர், கிட்னி செயல்பாடுகள், வயிறு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சனிக்கிழமை தோறும் நவக்கிரகத்தில் இருக்கும் ராகு பகவானுக்கு தீபமேற்றுவது நன்மையைத் தரும். ரத்தத்தில் பரவும் தொற்றுநோய் பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்,பெரியோரின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையோடு இருப்பது ஏற்றத்தைத் தரும்.

வழிபாடு

காதல் வாழ்க்கை இனிக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அனுகூலமான வாரமாக இந்த வாரம் அமையும். திருச்செந்தூர் முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+