சொந்த வீடு, சொத்துக்கள் வாங்கும் யோகம் பெறும் சிம்ம ராசி.. தொட்டதெல்லாம் இனி ஹிட்டாகப் போகுது

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் சிம்ம ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-simmam-people-from-oct-12-to-18

சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதியான இன்று நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். இந்த வாரத்தில் ஐப்பசி மாதமும் பிறக்கவுள்ளது.

அந்த வகையில், அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வரும் 15 ஆம் தேதியில் இருந்து மிகப்பெரிய நல்ல யோகங்கள் கிடைக்கும். ஆன்மீகம், தெய்வீகம், சித்த புருஷர்களின் ஆதரவு கிடைக்கும். திருமாணகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். குரு கேது சேரக்கூடிய காலகட்டத்தில் கோடீஸ்வர யோகம் பெறுவீர்கள்.

சொந்த வீடு அமையும்

பெரியவர்களின் மூலமாக சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு சொந்த வீடு அமையும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். 15, 16, 17 ஆம் தேதிகள் அற்புதமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட கஷ்டங்கள் தீரும். மன வருத்தங்கள் நீங்கும்.

ஆரோக்கியம்

பல், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், உணவால் வரும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகளில் ஜெயிப்பீர்கள். சுக்கிரன் வக்கிரமடைவதால் ஆன்லைன் கம்யூனிகேஷன், டெலிபோன் கம்யூனிகேஷனில் கவனமாக இருக்க வேண்டும். மீடியாவில் இருப்பவர்கள் கவனம் தேவை.

தொழில் கிடைக்கும்

சூரியன் நீச்சமாக இருப்பதால் தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நிறைய நன்மைகள் நடக்கும். கெளரவம் ஏற்படும். புதிய தொழில் கிடைக்கும். அனுகூலம் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். சொந்தக்காரர்களால் தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. விரதம் இருக்கிறேன் என்று கூறிவிட்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு

பிள்ளைகளின் ஆரோக்கியம், பழக்கவழக்கங்கள், வண்டி வாகனங்களில் செல்லும்போதெல்லாம் கவனத்துடன் இருப்பது நல்லது. வியாழக்கிழமை தோறும் ராகவேந்திரர் வழிபாடு செய்வது மன அழுத்தத்தை தீர்க்கும். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. குரு சரணமடைவது நன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+