சொந்த வீடு கனவு நிறைவேறப் போகுது.. கடக ராசிக்கு சொத்து, பணவரவு கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் கடகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-kadagam-people-get-from-october-19-to-25

கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

அதன்படி, அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 முதல் 8 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்கள் பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. அதீத ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் அதிகமாக இருக்கும். துணை விஷயத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

கவனம்

உறவுகளில் இருந்து மேன்மைகள் ஏற்படும். சுற்றி உள்ளவர்கள் செய்யும் துரோகத்தில் கவனம் தேவை. மன வருத்தங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் நடக்கும். தொழில் ஸ்தானதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானதிபதி நீச்சமாக இருப்பதால் தொழில், உத்தியோகம், கெளரவத்தைக் கெடுப்பதற்கு சிலர் முயற்சிப்பார்கள் என்பதால் கவனம் தேவை.

வீடு, வாகன யோகம்

வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். வீடு கட்டுவீர்கள். வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். சொத்துக்கள் கிடைக்கும் யோகம் உண்டாகும். திருமண யோகம் ஏற்படும். அயல்நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். மாணவ, மாணவிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டம். பெரிய பதவி உயர்வு கிடைக்கும்.

ஆரோக்கியம்

வயிறு தொடர்பான பாதிப்புகள், ஆரோக்கியத்தில் பாதிப்புகல் வரும் வாய்ப்புள்ளது. தேவையில்லாத பகை, சந்தேகம், குழப்பமான மனநிலை ஏற்படும். பயணங்கள், பெரியவர்களால் ஒரு மாதிரியான பாதிப்புகளைக் கொடுக்கும். பெரிதாக எந்தவொரு பாதிப்பும் வராது. 4 ஆம் இடத்தில் சுக்கிரன் வக்கிரமாகவும், புதன் சூரியன் சேர்ந்திருப்பதாலும் அரசு சீட்டுகள் கிடைக்கும்.

பணவரவு

அம்மாவின் மூலமாக பண வரவு கிடைக்கும். அம்மாவின் சொத்துக்கள் பஞ்சாயத்துக்கள் தீர்ந்து கிடைக்கும். அப்பாவின் ஆரோக்கியம், நுரையீரல் போன்றவற்றை பார்த்துக் கொள்வது நல்லது. பெண்கள் பேசும் வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். விவசாயிகளுக்கு இந்த மாதமும், இந்த வாரமும் அற்புதமாக இருக்கும். சந்தோஷமும் பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+