கன்னி ராசிக்கு 4 மாதங்களில் நடக்கப் போகும் அதிசயம்.. இனி கால் வைக்கும் இடமெல்லாம் பொன்னாகும்
கன்னி ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சனி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாகியும், அதற்கு பின்னர் வக்கிர நிவர்த்தியாகியும் சஞ்சாரம் ஆகிறார்.

வக்கிர கிரகம்
நவம்பர் 25 வரை சனி வக்கிரம் என்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ராசியில் உங்களுக்கு வக்கிரமான கிரகம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக கொட்டிக் கிடக்கும். வக்கிரமாக கிரகம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் சனி வக்கிர நிவர்த்தி ஆன பிறகு அதே பூரட்டாதி நட்சத்திரத்தில் உத்திரட்டாதியை நோக்கிச் செல்லும். அதற்குப் பிறகு கிரகங்கள் வக்கிரமாக இல்லாத ராசியினருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.
குருவின் நட்சத்திரத்தில் பயணக்கும் சனி வக்கிரம், சனி வக்கிர நிவர்த்தி ஆகிய இந்த அற்புதமான காலகட்டத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசி, லக்கினக்காரர்களுக்கு 7 ஆம் இடத்தில் சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். திருமணத்திற்கான யோகம் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு அபாரமான வேலை கிடைக்கும். பயங்கரமான முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பாராது நடக்கக்கூடிய முக்கியமான சம்பவம் நடக்கும். புதிய பார்ட்னர், புதிய தொழில் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி வேலை கிடைக்கும்.
குழந்தை பாக்கியம்
எடுக்கும் முயற்சிகளில் மிகப்பெரிய மாற்றங்கள், நன்மைகள் கிடைக்கும் யோகம் உண்டு. நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் அற்புதமான நேரமாக இருக்கும். இரண்டாம் குழந்தை கண்டிப்பாக பிறக்கும் யோகம் உண்டாகும். நவம்பர் 25 ஆம் தேதிக்குள் குழந்தை யோகம் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. உங்களுடைய மகனுக்கு திருமண யோகம் உண்டாவதற்கான ஒரு உறுதி கிடைக்கும்.
புதிய தொழில்
ராசி, லக்கினத்துக்கு 7 ஆம் இடத்தில் சமசம்பதமாக சனி இருக்கும்போது சனி இணைவுக்கு வரும்போது புதிய தொழில், வியாபாரத்தை தொடங்குவீர்கள். நிறைய பேருக்கு திருமண வாய்ப்பு கிடைக்கும். இரண்டாம் குழந்தைக்கான யோகம் உண்டாகும். மறுமணமாகும் வாய்ப்புள்ளது. நிறைய பேருக்கு பார்ட்னர் மூலமாக நன்மைகள் நடக்கும். தள்ளிப் போய்க் கொண்டிருந்த விஷயங்கள் கட்டாயமாக கிடைக்கும்.
மகிழ்ச்சி
மன மகிழ்ச்சி அற்புதமாக இருக்கும். பார்ட்னர்ஷிப்பில் பிரிந்து போனவர்கள் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்புள்ளது. காணாமல் போன வீட்டுப் பத்திரங்கள் மீண்டும் கிடைக்கும். காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் கிடைக்கும். காலபுருஷனுக்கு 12 ஆம் வீடு என்பது மீனம். 7 ஆம் இடம் என்பது இருக்கும் ரகசியத்தை கண்டுபிடிப்பதாகும்.
தானம்
எந்த கோணத்தில் நீங்கள் நன்மைகள் எதிர்பார்க்கிறீர்களோ. அந்த நன்மைகள் உங்களுக்கு கட்டாயமாக நடக்கும். புது வேலை, புது அந்தஸ்து, புதிய தொழில், புது வியாபாரம் என எல்லாமே மாற்றத்தைக் கொடுக்கும். நன்மைகள், பலன்களை அள்ளித் தரும் காலகட்டமாக இருக்கும். எலுமிச்சம்பழத்தை அம்மன் கோயிலில் கொடுத்து அதனை வீட்டுக்கு வாங்கி வந்து சாதமாகவோ, ஜூஸாகவோ தானமாக கொடுக்கலாம்.
வாய்ப்புகள்
அல்லது லெமன் சாப்பாடு செய்து குழந்தைகளுக்கு தானமாக கொடுப்பது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். நிறைய பேருக்கு ஏஜென்ஸி தொடங்கும் யோகம் உண்டாகும். அற்புதமான காலகட்டம் என்பதால் வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.
-
Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு பிரகாசமான மாற்றம்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட் -
Rishabam Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. திடீர் அதிர்ஷ்டத்தால் அற்புதமான முன்னேற்றம் -
Mesham Rasi Palan: மேஷம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. இந்த வார பலன்கள்.. முழு விவரம் -
Meenam: தடைகளைத் தகர்த்தெறியும் மீன ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
Kumbam: கும்ப ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகப் போகுது -
Dhanusu: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் -
Viruchigam: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி... குருவின் பார்வையில் கொட்டும் அதிர்ஷ்டம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி












Click it and Unblock the Notifications